விமானத்தில் உட்கார இடம் போதவில்லை - புகாரளித்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்கிய நிறுவனம்

சிட்னி வாட்சன் என்ற மருத்துவர் தனது அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். மூன்று மணி நேரம் அவர் மேற்கொண்ட பயணத்தில், அவருக்கு நடு இருக்கை கிடைத்துள்ளது.
Flights
FlightsCanva
Published on

விமானத்தில் அதிக உடல் பருமன் கொண்ட இரண்டு பேருக்கு மத்தியில் அமர்ந்து பயணித்த பெண்ணிற்கு நஷ்ட ஈடு வழங்கியுள்ளது அமெரிக்க விமான சேவை நிறுவனம் ஒன்று.

நாம் மேற்கொள்ளும் பயணங்களின், அனுபவங்களை நினைவுக்கூர தகுந்ததாக மாற்றுவதில் நம் உடன் பயணிப்பவர்களின் பங்கும் இருக்கும். அவர்களால் நமக்கு அந்த பயணம் சிறந்ததாகவோ அல்லது கசப்பானதாகவோ அமையலாம். இங்கு அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு அவரது பயணம் கசப்பானதாக அமைந்துள்ளது.

சிட்னி வாட்சன் என்ற மருத்துவர் தனது அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். மூன்று மணி நேரம் அவர் மேற்கொண்ட பயணத்தில், அவருக்கு நடு இருக்கை கிடைத்துள்ளது. இரு புறத்திலும் அதிக உடல் பருமனான இருவர் அமர்ந்திருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு நசுங்கியவண்ணம் மூன்று மணி நேரம் தவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், "இதனால் நீங்கள் என்னை பற்றி தவறாக நினைத்தாலும் பரவாயில்லை.நீங்கள் குண்டாக இருப்பதை குறை கூறவில்லை. ஆனால், எனது அனுமதியில்லாமல், எனக்கு அறிமுகமில்லாத இருவர் மீதி உராய்ந்துக்கொண்டு நான் பயணிக்க நேர்ந்தது. இது எனக்கு மிகுந்த அசெளகரியத்தை கொடுத்தது" என்றும் கூறியிருந்தார்.

Flights
”ஒருவரது உடல் தோற்றத்தை விமர்சிக்காதீர்கள்” - நடிகர் சிம்பு வேண்டுகோள்

டிவிட்டரில் இவரது பதிவு அதிக கவனத்தை பெற்றது. பலரும் தங்களுக்கு நிகழ்ந்த இது போன்ற அனுபவத்தை பகிந்துகொண்டனர். மது அருந்திவிட்டு அருகில் அமர்வது, முன் இருக்கைமேல் கால்களை வைப்பது போன்ற அனுபவங்கள் பற்றி கூறியிருந்தனர்.

மற்றொரு புறத்தில் பலரும் அந்த பெண்ணை நீங்கள் பாடி ஷேமிங், அதாவது உடல் தோற்றத்தை விமர்சிக்கிறீர்கள் என குற்றம் சாட்டினர். அப்போது யூடியூபில் வீடியோ வெளியிட்டு தனது முழு அனுபவத்தையும், தான் பதிவு செய்த ட்வீட் குறித்தும் விளக்கமளித்தார் சிட்னி. தன்னால், அந்த மூன்று மணி நேரத்தில் இம்மியளவு கூட அசைய முடியவில்லை என்றும், அருகில் இருந்தவரை இடம் மாறிக்கொள்ள கூறியபோதும் அவர் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சிட்னியின் ட்வீட்டை பார்த்த அந்த அமெரிக்க விமான சேவை நிறுவனம், மன்னிப்பு கேட்டு அவருக்கு நஷ்ட ஈடு வழங்கியுள்ளது. மேலும் அவரது பயணம், மற்றும் அசெளகரியம் பயணத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தது.

Flights
கர்ப்பிணிகளே உஷார்.! இந்த உணவுகளை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு உடல் பருமன் ஏற்படும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com