Woman spends around Rs 2 crore to visit Titanic wreckage
Woman spends around Rs 2 crore to visit Titanic wreckage Twitter

சிதைந்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க ஆசை; 2 கோடி செலவு- 30 ஆண்டுகள் பணம் சேமித்த பெண்!

நான் சிறுவயது இருந்தபோது, அந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அப்போது யாரும் அதனை கண்டுபிடிக்கவில்லை; அதனால் முதலில் அந்தக் கப்பலைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.
Published on

ரெனாட்டா (Renata) என்ற பெண், 30 வருடமாக சிறுகச் சிறுக ரூ.2 கோடியைச் சேமித்து, மூழ்கிய கப்பலை நேரில் பார்த்துள்ள நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கப்பல் என்றலே முதலில் நம் நினைவிற்கு வருவது, டைட்டானிக் கப்பல் தான். இந்த கப்பல் மூழ்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 1997-ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளை குவித்த டைட்டானிக் படம் எப்பிக் மூவி என்றே கூறலாம்.

இந்த படத்துக்கு இன்றும் கூட பல ரசிகர்கள் உள்ளனர். படத்தின் பிரமிப்பு காரணமாக அந்த கப்பல் மீதும் மக்களுக்கு ஆர்வம் அதிகம். டைடானிக் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த கப்பலை பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைய பேருக்கு இருக்கும்.

டைட்டானிக் கப்பல் மூழ்கி, கிட்டத்தட்ட 110 வருடங்கள் ஆகிவிட்டாலும், அதன் மீதான மோகம் இன்னும் பலருக்கு விட்டு போகவில்லை என்று தான் கூற வேண்டும்.

அப்படி தான் ரெனாட்டா (Renata) என்ற பெண், அதற்காக 30 வருடமாக சிறுகச் சிறுக ரூ.2 கோடியைச் சேமித்து, தன் ஆசையைத் நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.

ரெனாட்டா, இதற்காக 5 பேர் செல்லக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலில் சென்று கடலுக்கடியில் சிதைந்து கிடந்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்த்துள்ளார்.

மேலும், இந்தப் பயணத்தில், குழுவிலிருந்த ஒவ்வொருவரும் தலா ரூ.2 கோடியைச் செலவுசெய்திருப்பது இன்னும் ஆச்சரியம்!

Woman spends around Rs 2 crore to visit Titanic wreckage
டைட்டானிக் போல பனிப்பாறையில் மோதிய சொகுசு கப்பல் - பயணிகள் நிலை என்ன?

இந்த நிலையில், தன்னுடைய ஆசையைத் தானே நிறைவேற்றிக்கொண்டதைப் பற்றி ரெனாட்டா பேசிய வீடியோவை பிபிசி தளம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவால் நெட்டிசன்கள் ஈர்க்கப்பட்டனர்.

இது குறித்து ரெனாட்டா கூறுகையில் ,

நான் சிறுவயது இருந்தபோது, அந்தக் கப்பலைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அப்போது யாரும் அதனை கண்டுபிடிக்கவில்லை; அதனால் முதலில் அந்தக் கப்பலைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

அதற்காக அறிவியல் மற்றும் கடலியல் படிப்புகளை நான் படிக்க வேண்டியிருந்தது. ஆனால், கல்லூரி பயின்ற முதல் வாரத்திலேயே டைட்டானிக் கண்டுபிடிக்கப்பட்டது.

என் கனவு நொறுங்கிப்போய்விட்டது. பின்னர் வங்கியில் பணிபுரிந்து வந்தேன்!

ஆனால் சிதைந்த டைட்டானிக் கப்பலை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து அதற்காக பணம் சேமித்தேன், தற்போது என் கனவு நிறைவேறி விட்டது என்றார்.

இவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகியதையடுத்து இணையவாசிகள் பலரும் ரெனாட்டாவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Woman spends around Rs 2 crore to visit Titanic wreckage
கோவா டூ ஜெர்மனி : 43 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மர்மக் கப்பல் - விடை தெரியாத புதிர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com