பிளாஸ்டிக் போல மாறிய பெண்ணின் நெற்றி - என்ன காரணம்?

காலை நேர வெயில் உடலில் படுவது தான் ஆரோக்கியத்திற்கு தேவை என்பது நாம் அறிந்ததே. மற்ற நேரங்களில் வெயிலில் நாம் செல்லும்போது சன்ஸ்க்ரீன் பூசிக்கொள்வது கட்டாயம்
பிளாஸ்டிக் போல மாறிய பெண்ணின் நெற்றி
பிளாஸ்டிக் போல மாறிய பெண்ணின் நெற்றிtwitter
Published on

வெயிலில் படுத்து உறங்கியதால் பிளாஸ்டிக் போல மாறியுள்ளது ஒரு பெண்ணின் நெற்றி.

நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள நாம் பல அழகு, ஆரோக்கியம் சார்ந்த பழக்கங்களை பின்பற்றுகிறோம். ஆண்களாயினும், பெண்களாயினும், இது பொதுவானது தான். முக்கியமாக வெயிலிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கவேண்டியது அவசியம் என, மருத்துவர்கள் நமக்கு அடிக்கடி சொல்லிவருகின்றனர்.

காலை நேர வெயில் உடலில் படுவது தான் ஆரோக்கியத்திற்கு தேவை என்பது நாம் அறிந்ததே. மற்ற நேரங்களில் வெயிலில் நாம் செல்லும்போது சன்ஸ்க்ரீன் பூசிக்கொள்வது கட்டாயம்!

அழகு கலை நிபுணரான சிரின் முராட் என்ற பெண், அரை மணி நேரம், பல்கேரியாவில் ஒரு கடற்கரையில் சுடும் வெயிலில் படுத்து உறங்கியுள்ளார். இவர் உறங்குவதற்கு முன்பு சன்ஸ்க்ரீன் எதுவும் பூசிக்கொள்ளாமல் தூங்கியுள்ளார். அரை மணி நேரத்திற்கு பின்னர் அவர் கண் விழித்தபோது, அவரது முகம் சிவந்திருப்பது தெரிந்துள்ளது.

பிளாஸ்டிக் போல மாறிய பெண்ணின் நெற்றி
ஏலியன் போல மாற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ரஷ்ய இராணுவ வீரர்

சரியாகிவிடும் என நினைத்து, 21 டிகிரி வெயிலில், அங்கேயே இருந்துள்ளார் சிரின். மறு நாள் தான் இதன் விளைவு தெரிந்துள்ளது.

நீண்ட நேரம், சரியான சருமப் பாதுகாப்பை பயன்படுத்தாமல், சூரியக் கதிர்கள் நேர படும்படி அவர் இருந்ததால், அவரது நெற்றி , பிளாஸ்டிக் போல சுருங்கி விட்டது. அவரும் இதற்கான உரிய மருத்துவ உதவியை நாடாமல் இருந்ததால், மெல்ல சருமம் உரியத் துவங்கி, இளன்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.

அவரது சருமம் சாதாரண நிலைக்கு திரும்ப ஏழு வாரங்கள் ஆகியுள்ளது.

சூரிய ஒளி நம் சருமத்தில் படுவது எவ்வளவு அவசியமோ, அதற்கேற்றவாரு நாம் நம் சருமத்தை சூரியக் கதிர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதும் அவசியம் என்கிறார் சிரின். நிச்சயம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பிளாஸ்டிக் போல மாறிய பெண்ணின் நெற்றி
Bengaluru: கன்னட நடிகை மரணம்- பிளாஸ்டிக் சர்ஜரியால் விபரீதம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com