டேட்டிங் ஆப் பயன்படுத்தி போர் அடித்ததால் புகைப்படங்களுக்கு பின்னால் தன் தகவல்களை எழுதி, தான் சந்திக்கும் ஆண்களிடம் கொடுத்து வருகிறார் ஒரு பெண்.
எமிலி ஸ்கோடா என்ற பெண் டேட்டிங் ரெஸ்யூம் ஒன்றை பகிர்ந்துவருகிறார். டேட்டிங் ரெஸ்யூம் என்பது புகைப்படங்களுக்கு பின்னால் தன் குறித்த தகவல்களை எழுதி அதனை மற்றவர்களிடம் கொடுப்பதாகும்.
எமிலி சமீபத்தில் தான் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அப்போது அவரது நண்பர்கள் எமிலியின் புகைப்படங்களை சேகரித்து பார்ட்டியின்போது அறையை அலங்கரித்துள்ளனர். புகைப்படங்களை பார்த்த எமிலி, இவற்றை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்த வேண்டும் என நினைத்துள்ளார். அதனால், தன் புகைப்படங்களுக்கு பின்னால் தன்னை குறித்த தகவல்களை எழுதியுள்ளார்.
தன் பெயர், பொழுதுபோக்கு, திறன், விருப்பம்ம் போன்ற விஷயங்களை புகைப்படங்களின் பின்னால் அவர் எழுதியிருக்கிறார். இந்த புகைப்படங்களை அவர் செல்லும் இடங்களுக்கு எடுத்துசென்று அங்கு தான் பார்க்கும் ஆண்களிடம் கொடுத்துவருகிறார்.
மேலும் தான் தனக்கானவரை தேடி வருவதாக தன் சமூக வலைத்தள பக்கங்களிலும் வீடியோக்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
நான் நிறைய பேரை டேட் செய்திருக்கிறேன் எனக் கூறிய எமிலி, இதுவரை என் மனதிற்கு பிடித்த நபராக யாரும் அமையவில்லை என தெரிவித்தார். இந்த தலைமுறையினர், ஒருவரை நேரில் சந்தித்து அவர்களை புரிந்துகொண்டு காதலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. டேட்டிங் ஆப்களை தான் நாடுகிறார்கள் என்று கூறிய அவர், தனக்கு ஒரு நபரை நேரில் சந்திப்பதில் தான் பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.
அதற்கு இது சிறந்த யுக்தியாக இருக்கும் என தோன்றியது என்றார் எமிலி. எமிலியின் இந்த யோசனையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். முக்கியமாக ஒரு பெண் ஆணிடம் சென்று டேட் கேட்கும் தைரியத்தை மெச்சியது மட்டுமல்லாமல், இவரது இந்த யுக்தி வெற்றிபெற்று அவர் விரைவில் தன் காதலை கண்டுபிடிக்கவேண்டும் எனவும் பலர் கூறிவருகின்றனர்
ரெஸ்யூம்களை பெற்ற ஆண்களில் சிலர் அவரை மெசேஜ் மூலம் தொடர்புகொண்ட நிலையில், ஒருவருடன் விரைவில் டேட்டிங்க் செல்லவிருக்கிறார் எமிலி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust