பிளாட் நிர்வாகம் ஒன்று அங்கு குடியிருக்கும் பெண் இறந்தது கூட தெரியாமல் இரண்டு வருடங்களாக அந்த வீட்டிற்கான வாடகையை வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது எப்படி நடந்து? விரிவாகப் பார்க்கலாம்.
பிரிட்டன் நாட்டின் பெக்காம் பகுதியில் 58 வயதான ஷீலா செலியோனே என்பவர் வசித்து வந்தார். திருமணமாகாத ஷீலாவின் குடும்பம் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறது.
கடந்த 2019 அக்டோபரில் அவரது குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசாரும் அங்கு இரண்டு முறை சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு சந்தேகிக்கும் படி எதுவும் நடக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷீலா கடைசியாக ஏப்ரல் 2019 இல் அவரது பக்கத்து வீட்டுக்காரர்களால் பார்க்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் பிளாட்டை விட்டு ஷீலா வெளியே வரவில்லை. இருப்பினும், இரவு நேரங்களில் இவர் வெளியே சென்று வரலாம் என்று அக்கம் பக்கத்தினர் கருதி அப்படியே விட்டுவிட்டனர்.
ஆகஸ்ட் 2019 ல் தான் ஷீலா கடைசி மாத வாடகையைச் செலுத்தினார். அவர் வாடகை செலுத்தத் தவறிய பிறகு, Peabody Housing group ஷீலாவின் Universal Credit payment லிருந்து நேரடியாக அவர்களுக்கு வாடகை வந்து சேரும்படி விண்ணப்பித்து 2 வருடங்களாக வாடகை பெற்றுள்ளார். ஆனால் ஷீலாவை யாரும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.
ஜூன் 2020-யில் வழக்கமான எரிவாயு ஆய்வை மேற்கொள்ள அதிகாரிகள் வந்தபோது யாரும் பதிலளிக்காததால், அடுக்குமாடிக் குடியிருப்புக்கான கேஸ் விநியோகம் நிறுத்தப்பட்டது.
மீண்டும் அந்த பிளாட்டை சோதனை செய்த போது ஷீலாவின் எலும்புக் கூடு மட்டும் கிடைத்துள்ளது. அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிளாட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒருவர் இறந்து கிடப்பதை இரண்டு ஆண்டுகளாகக் கண்டுபிடிக்காமல் இருந்தது குறித்தும் விசாரணைக் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
ஷீலா எந்தக் காரணத்திற்காக உயிரிழந்து இருந்தாலும், சுமார் இரண்டு ஆண்டுகளாக இது அக்கம்பக்கத்தினருக்குத் தெரியாமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது என அதிகாரிகள் அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஷீலாவின் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust