World Chocolate Day: ஒட்டகபால் சாக்லேட்டா? உலகின் வித்தியாசமான சாக்லேட்கள் பற்றி தெரியுமா?

சாக்லேட்டிலேயே பல வகைகள் உள்ளன, டார்க் சாக்லேட், வயிட் சாக்லேட், மில்க் சாக்லேட் என பல வெரைட்டியை சுவைத்திருப்போம். ஆனால் ஆனால் ஒட்டகபால் சாக்லேட், ஓட்கா சால்லேட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
World Chocolate Day:  Different Types of Chocolates around world
World Chocolate Day: Different Types of Chocolates around worldTwitter
Published on

சாக்லேட் என்றாலே சிலருக்கு எச்சில் ஊறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை சுவைக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். கோகோ விதைகளை அரைத்து தான் இந்த சாக்லேட் செய்யப்படுகிறது.

சாக்லேட்டிலேயே பல வகைகள் உள்ளன, டார்க் சாக்லேட், வயிட் சாக்லேட், மில்க் சாக்லேட் என பல வெரைட்டியை சுவைத்திருப்போம். ஆனால் உலகத்தில் உள்ள வித்தியாசமான சாக்லேட் வகைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புகையிலை சாக்லேட்

இந்த சாக்லேட், ரம் மற்றும் காக்னாக் எனும் மாரினேட் செய்யப்பட்ட புகையிலைகளால் தயாரிக்கப்படுவது.

கியூபா நாட்டில் உருவான இந்த சாக்லேட்டுக்கு பல பகுதிகளில் தடையும் உள்ளது.

ஜெர்மனி, ஹாலந்து மற்றும் பெல்ஜியத்தில் உள்ள சில உயர்தர உணவகங்களில் மட்டுமே இது கிடைக்கிறது. இந்த சாக்லேட்டை சாப்பிடும் போது இனிப்பு சுவை தெரியாதாம் மாறாக புகையிலையின் கார்ப்பு சுவை தெரியுமாம். வடிவம் கூட சிகரெட் மாதிரி தான் இருக்கிறது.

பன்றி இரத்த சாக்லேட்

மேற்கு ஐரோப்பா மற்றும் தெற்கு ஆசியாவில் பிரபலமான இந்த சாக்லெட் இலவங்கப்பட்டை, ஸ்பானிஷ் மிளகுத்தூள் மற்றும் பன்றி இரத்தம் கொண்டு தயாரிக்கப்படுகிறதாம்.

என்ன தான் பிரபலமாக இருந்தாலும் இறைச்சி ரத்தத்தில் செய்யப்படுவதால் இதை பெரிதாக மக்கள் விரும்புவதில்லை

ஓட்கா சாக்லேட்

இந்த சாக்லேட் புதினா மற்றும் ஓட்கா கலந்து செய்யப்படுகிறது. தயாரித்த பின் டார்க் சாக்லேட்டில் முக்கி எடுத்து சாப்பிடுகின்றனர். இந்த சாக்லேட் பிரெஞ்சு கடைகளில் ஏப்ரல் முதல் வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்குமாம்.

கௌடா சீஸ் சாக்லேட்

ஜப்பான் பல வகையான சாக்லேட் உருவாக்குவதில் பெயர்பெற்றது. அந்த வரிசையில் சீஸ் மற்றும் சாக்லேட் பிரியர்களுக்காகவே கௌடா சீஸ் சாக்லேட்டை ஜப்பானில் உருவாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சோயா சீஸ் கொண்டு செய்யப்படும் சாக்லேட் பல ஆண்டுகளாக பிரபலமான உணவாக மாறி வருகின்றன.

World Chocolate Day:  Different Types of Chocolates around world
Health: நள்ளிரவில் பசிக்கிறதா? இந்த ஸ்நாக்ஸை சாப்பிட்டால் சீக்கிரம் தூங்கலாம்

ஒட்டக பால் சாக்லேட்

துபாயில் கிடைக்கிறது இந்த ஒட்டக பால் சாக்லேட். அல் நாஸ்மா என்ற ஒரே நிறுவனம் தான் ஒட்டக பால் சாக்லேட்டை உற்பத்தி செய்கிறதாம்.

இந்த ஒட்டக பால் சாக்லேட் மத்திய கிழக்கில் "திரவ தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சாக்லேட் UAE, Oman, ஜப்பான் மற்றும் ஆன்லைனில் கிடைக்கிறது.

World Chocolate Day:  Different Types of Chocolates around world
Health: அதிகமாக Sweet Cravings வருகிறதா? அதனை தடுக்க என்ன செய்யலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com