பறக்கும் பைக்கை நாம் பேட் மேன் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறோம். Batmobile காரில் பறப்பது பார்பதற்கே வியப்பாக இருக்கும். ஆனால் இப்போது நம் கண்முன்னே அது விற்பனைக்கு தயாராகியிருக்கிறது.
தன்னால் கனவு காண முடிந்த எதையும் உருவாக்கவும் முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்குக் காட்டுகிறது மனித குலம். அந்த வகையில் இந்த பறக்கும் பைக் முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வாகன கண்காட்சியில் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஜப்பானைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் நிறுவனம் (AERWINS) உருவாக்கியுள்ளது.
பறக்கும் பைக்கிற்கு XTURISMO ஹோவர் பைக்(Hover bike) என்று பெயரிடப்பட்டுள்ளது. ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் மணிக்கு 99 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதுடன், தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.
ஜப்பானில் இந்த பைக் விற்பனை துவங்கி விட்டதாகவும், இந்த பைக்கின் சிறிய அளவை 2023-ல் அமெரிக்காவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் CEO, Shuhei Komatsu தெரிவித்துள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6.20 கோடி எனவும் ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வாகனக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பறக்கும் பைக்கின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவேளை அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டால் பெருநகரங்களில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்த இது உதவலாம். பயன்படுத்துபவர்களுக்கு சூப்பர் ஹீரோ போன்ற உணர்வைக் கொடுப்பது தான் இந்த மாதிரியான சூப்பர் தொழில்நுட்பங்களின் சிறப்பே!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust