Robot: மனிதனுக்காக வாதாடப் போகும் உலகின் முதல் 'ரோபோ லாயர்' - ஓர் அறிவியல் ஆச்சரியம்

மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து தற்போது வழக்கறிஞனாக அவதாரம் எடுக்கவுள்ளது இந்த ரோபோ. இந்த ஏ ஐ ரோபோ, வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாடவுள்ளது.
Robot
Robotcanva
Published on

வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ரோபோ வழக்கறிஞராக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாடப் போகிறது.

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் விளைவாக, இயற்கைக்கே சவால்விடும்படியான கண்டுபிடிப்புகள் உலகில் உருவாகி வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று சமீபத்தில் அனைவரது கவனத்தையும் பெற்ற எக்டாலைஃப் என்ற செயற்கை கருப்பை திட்டம்.

இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, வெறும் ஐடியாவாக தான் பேசப்படுகிறது என்றாலும், தாயின் கருவறைக்கு மாற்று என்றால் அது சாதாரணமான விஷயமா என்ன?

செயற்கை கருப்பை பற்றி படிக்க...

இப்படி அறிவியலோடு கைக்கோர்த்து மனிதர்களை உருவாக்கும் முயற்சிகள் ஒருபக்கம் இருக்க, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மனிதனுக்கே மாற்றை கொண்டுவரும் முனைப்பிலும் விஞ்ஞானிகள் பல காலமாக இயங்கி வருகின்றனர்.

அதன் விளைவாக வந்தது தானே ரோபோ? எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா தொடங்கி, இன்று நம் ஊரில் இருக்கும் ரோபோ ரெஸ்டாரன்ட் வரை, மனித உலகில் ரோபோ சர்வ சாதாரணமாகிவிட்டது.

மனிதர்கள் செய்யும் அத்துனை வேலைகளையும் செய்யும்படியான அறிவை இந்த எந்திரனுக்குள் ஆராய்ச்சியாளர்கள் புகுத்துகின்றனர்.

வருங்காலத்தில், மனிதர்கள் எந்த வேலையும் செய்யவேண்டிய அவசியம் இருக்காது, இந்த எந்திரனை வழிநடத்தும் வேலையை தவிர. அப்படி, மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து தற்போது வழக்கறிஞனாக அவதாரம் எடுக்கவுள்ளது இந்த ரோபோ

Robot
'இரவில் ஒளிரும் காடு' - மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயக் காடு - அறிவியல் சொல்வது என்ன?

DoNotPay என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய இந்த ஏ ஐ ரோபோ, வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாடவுள்ளது.

DoNotPay என்பது ஒரு சட்ட சேவைகள் செய்யும் ஒரு சாட்பாட் நிறுவனம். இதனை ஜோஷுவா ப்ரோடர் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு நிறுவினார். தற்போது இந்த நிறுவனம் உலகின் முதல் ரோபோ வழக்கறிஞரை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாமதமாக அபராதம் செலுத்துபவர்களுக்கு உதவவே இந்த ரோபோ வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது எனவும், இதற்கு பயிற்சியளிக்க நீண்ட காலம் ஆனதாக தெரிவித்தார் ஜோஷுவா

வரும் பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கு யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது, எந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும், எந்த தேதி என்பது போன்ற தகவல்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்காக இந்த ரோபோ வாதிடும். சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பப்லிகேஷனின் படி, இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ நீதிமன்றத்தில் வாதாடப்படும் விஷயங்களை பகுப்பாய்வு செய்யும் என்றும், பின்னர் பிரதிவாதி பதிலளிக்க அறிவுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதன் முறையாக ஒரு ரோபோ வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடப்போவது, அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது

Robot
மனிதர்கள் 2 கால்களில் நடக்க தொடங்கியது தரையில் இல்லையா? - அறிவியல் சொல்லும் ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com