Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!

நாம் செல்லும் இடத்தில் நமக்கு கிடைக்கும் அமைதி தான் ஒரு இடத்தின் அருமையை, அழகியலை நமக்கு உணர்த்துகிறது.
Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!
Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!canva
Published on

சுற்றுலா செல்பவர்கள் குறிப்பாக தேடி அலைவது மன அமைதிக்காகவும், பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகின் சச்சரவுகளில் இருந்தும் சற்று தப்பிக்கத் தான்.

இது சிலருக்கு உயரிய மலைகள், காடுகளுக்கு சென்றால் கிடைக்கிறது. சிலர் புனித யாத்திரைகள் மேற்கொள்கின்றனர். இதில் மத வேறுபாடுகள் பெரும்பாலும் இருப்பதில்லை. நாம் செல்லும் இடத்தில் நமக்கு கிடைக்கும் அமைதி தான் ஒரு இடத்தின் அருமையை, அழகியலை நமக்கு உணர்த்துகிறது.

அப்படி உலகில் இருக்கும் அழகான கோவில்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பசுபதிநாதர் கோவில், காத்மண்டு

நேபாளத்தில் அமைந்துள்ள இது உலகின் மிகப் பெரிய, மற்றும் அழகான கோவில். இதன் சிறப்பே இங்கு 108 சிவலிங்கள் இருப்பது தான்

மேலும் இங்குள்ள சிவலிங்கமானது சிவபெருமானின் 8 முகங்களை பிரதிபலிக்கிறது

Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!
நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?

அங்கோர்வாட் கோவில், கம்போடியா

இந்து மதக் கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய கோவில் இந்த அங்கோர் வாட் கோவில். மெக்காங் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலானது பழங்கால கட்டிடக்கலையின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக இருக்கிறது

ஸ்ரீ ரங்கநாதர் கோவில், இந்தியா

இது இந்தியாவின் மிகப் பெரிய கோவிலாகவும், உலகளவில் இரண்டாவது பெரிய கோவிலாகவும் திகழ்கிறது. இங்கு 1000 ஆண்டுகள் பழமையான ராமானுஜரின் உடல் பாதுக்காக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

இதுவும் உலகின் அழகான கோவில்களில் ஒன்று

Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!
நேபாளம் : சுயம்புவாக தோன்றிய ஒரு புத்த கோவில் - ஏன் நிச்சயம் பார்வையிட வேண்டும்?

அக்‌ஷர்தம் கோவில், இந்தியா

இந்தியாவின் கட்டிக்கலையை பறைச்சாற்றும் மற்றுமொரு உதாரணமாக திகழ்கிறது அக்‌ஷர்தம் கோவில். இந்த கோவிலில் அழகிய வடிவமைப்பை காணவே சுற்றுலப் பயணிகள் இங்கு அதிகம் கூடுகின்றனர்.

மேலும் இங்கு 234 க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்கள், 9 விரிவான குவிமாடங்கள், 20 கோபுரங்கள் மற்றும் 20000 ஆன்மீக பிரமுகர்களின் சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரத்யேகமான கட்டிடக்கலை அழகைக் காணலாம்.

Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!
Kailasa Temple: ஒரே ஒரு பாறையால் செதுக்கப்பட்ட இந்திய கோவில் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com