அண்டார்டிகாவில் இருந்து நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை - இதனால் வரும் பாதிப்பு என்ன?

இந்த பனிப்பாறை இத்தனை வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பனிப்பாறை மீண்டும் நகர்கிறது.
World's largest iceberg is moving away from Antarctica
World's largest iceberg is moving away from AntarcticaTwitter

உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு அண்டார்டிகாவின் ஒரு பகுதியாக இருந்தது, தற்போது அந்த கண்டத்தை விட்டு நகர்கிறது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் பார்வையை அதன் மீது செலுத்தியுள்ளனர்.

A23a என்று பெயரிடப்பட்ட பனிப்பாறை, கிட்டத்தட்ட 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இது லண்டன் மாநகரை விட இரு மடங்கு பெரியது என்றும் கூறப்படுகிறது.

1986 ஆம் ஆண்டில் அண்டார்டிக் கரையில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டது. அதன் பிறகு வெட்டல் கடலில் நிலைக்கொண்டது.

ஒரு காலத்தில் சோவியத் யூனியன் இந்த பனிப்பாறையில் தான் ஆராய்ச்சி நிலையத்தை நடத்தியது.

இந்த பனிப்பாறை இத்தனை வருடங்களாக வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கி அங்கேயே மிதக்க முடியாமல், நகர முடியாமல் இருந்தது.

World's largest iceberg is moving away from Antarctica
பல ஆண்டுகளுக்கு முன் புதைந்த மனித உடல்கள் - பனி உருகுவதால் வெளியே வருகின்றனவா?

தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பனிப்பாறை மீண்டும் நகர்கிறது.

காற்று மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் பிரிந்து ஜார்ஜியா என்ற தீவுக்கு அருகே அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

A23a தெற்கு ஜார்ஜியா தீவு அருகே நகர்ந்தால், அங்கு வாழும் மற்ற உயிரினங்கள் பாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

World's largest iceberg is moving away from Antarctica
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com