பூமியின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டிருப்பதை நாம் அறிவோம். வட துருவத்திலும் தென்துருவத்திலும் உள்ள ராட்சத பனிக்கட்டிகள் புவி வெப்பமயமாதலால் வேகமாக உருகி வருகின்றன.
இப்படி பனி உருகுவதால் மனித சடலங்கள் வெளியே வருகின்றனவாம். பனியில் மனித சடலங்கள் இருக்கும் போது அவை அழுகிவிடாமல், மக்கிவிடாமல் அப்படியே இருக்கும்.
கேப்டன் அமெரிக்கா படத்தில் நாம் இதைப் பார்த்திருப்போம். 70 ஆண்டுகள் கேப்டன் பனியில் சிக்கியிருப்பார். மீண்டும் வெளியில் எடுக்கும் போது அவரது உடலுக்கு எதுவும் ஆகியிருக்காது.
பொதுவாக நாம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக காய்கறி முதல் இறைச்சி வரை அனைத்தையுமே ஃப்ரீசரில் வைப்போமே? அப்படித்தான்.
பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பனிச்சறுக்கு விளையாடுகின்றனர். பனியால் போர்த்தப்பட்ட மலை உச்சிகளுக்கு சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.
இப்படி செல்லும் போது பனிச்சறுக்கு ஏற்பட்டோ அல்லது பிற உடல்நல பாதிப்புகளாலோ இறக்கவும் நேரிடுகிறது. உயரமான பனி மலையில் அல்லது பனிப்புயலில் சிக்கிய உடலை மீட்பது மிக கடினம்.
பனிப் பிரதேசங்களில் இப்படிப்பட்ட மனித உடல்கள் கிடைப்பது சமீபமாக அதிகரித்திருக்கிறது.
தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் சிகரத்தின் தென்கிழக்கே பனிப்பாறையில் பனிச்சறுக்கு விளையாட சென்றவர்கள் ஒரு மனித உடலை கண்டுள்ளனர்.
உறைந்த நிலையில் கிடக்கும் பிணத்தைப் பார்த்ததும், பயத்தில் அவர்களும் உறைந்துவிட்டனர். காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
உடலை மீட்டு டிஎன்ஏ சோதனை செய்ததில்ல் அது 37 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் காணாமல் போன ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரின் சடலம் என்பது உறுதியாகியுள்ளது.
1986 செப்டம்பரில் மாயமாகும் போது அவருக்கு 38 வயது என்கின்றனர். ஆனால் அவரது உடலோ பெரிய மாற்றங்கள் இல்லாமல் கிடைக்கப்பட்டுள்ளது.
அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் காரணமாக பனிக்கடிகள் உருவதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
மனித உடல்கள் மட்டுமல்ல பல மில்லியன் ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த நுண்ணுயிரிகள், வைரஸ்கள் கூட உயிருடன் வெளி வருகின்றன.
ஒருவேளை பல மில்லியன் ஆண்டுகளாக உறைந்திருக்கும் பனிக்கட்டிகள் மேலும் உருகும் போது கேப்டன் அமெரிக்காவோ, டைனோசர்களோ கூட வெளிப்படலாம்.
ஆனால் மேலும் மேலும் பனிக்கட்டிகள் உருக நாம் அனுமதிப்போமேயானால் கடல் மட்டம் உயர்ந்து, இயற்கை பேரழிவுகளை நாம் சந்திக்க நேரிடும். பூமி வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்க முடியாது.
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை அலாரமாக தான் இந்த நிகழ்வுகளை நாம் காண வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust