உலகிலேயே மிக நீளமான வெள்ளரிக்காயை விளையவைத்து விவசாயி ஒருவர் உலக சாதனைப் படைத்திருக்கிறார்.
காய்கறிகளை பிரித்து அறிவதில் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு காயும் ஒரு சராசரி நீளத்தை பெற்றுள்ளது. ஆனால் இங்கு புடலங்காயா? வெள்ளரிக்காயா? எனச் சந்தேகம் வரும் படியான ஒன்றை உருவாக்கியிருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த விவசாயி.
அவர்தான் சவுத் ஆம்ப்டன் பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் சுஸ்கி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 113.4 செ.மீ. நீளத்துக்கு வெள்ளரியை வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருப்பது நாம் அறிந்ததே. வெப்ப அலைகளின் தாக்கத்தால் பண்ணையில் வளர்க்கப்படும் விளைபொருட்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் செபாஸ்டியன் தனது பயிர்களை வளர்த்து மிக நீளமான வெள்ளரிக்காயை விளைவித்துள்ளார்.
செபஸ்டியன், இதற்கு முன் மிக நீளமான வெள்ளரி 107.2 என்ற பழைய சாதனையை முறியடித்து, அதை விட அதிக நீளத்தில் தனது வெள்ளரியை விளைய வைத்துள்ளார்.
இந்த வெள்ளரியை வளர்ப்பதில் பல சவால்கள் இருப்பதாக செபஸ்டியன் கூறியுள்ளார். இதனை விரைவாக பறிக்காமல் இருக்கவும், அதே சமயம் அழுகாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகளாக நீளமான காய்களை வளர்த்து வரும் செபஸ்டியன் தேசிய அளவில் பல சாதனைகளை படைத்திருந்தாலும் இப்போது தான் அவருக்கு உலக சாதனை கிடைக்கிறது.
கின்னஸ் உலக சாதனையில் இது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மிகப்பெரிய காய்கறி வளர்ப்புக்கான போட்டியில் பல்வேறு காய்கறிகள் அதன் தனித்துவமான அளவு காரணமாக புகழ் பெற்றன. 3.12 கிலோ எடை கொண்ட ஒரு கத்தரிக்காய், முந்தைய உலக சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust