2 நிமிடங்களில் சோடா மற்றும் தக்காளி சாஸை அருந்தி யூடியூபர் கின்னஸ் சாதனை - வைரல் வீடியோ

அந்த வகையில், நியூயார்க்கை சேர்ந்த ஒரு யூடியூபர், ஒரு லிட்டர் Mountain Dew குளிர்பானம் மற்றும் தக்காளி சாஸை இரண்டு நிமிடங்களில் அதிவேகமாக அருந்தி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Eric Booker
Eric BookerTwitter
Published on

முன்பெல்லாம், அறிவியல், கல்வி, போன்ற மிக கடினமான, அரிதான விஷயங்கள், சாதாரணமாக யாராலும் செய்ய இயலாத விஷயங்களை செய்து தான் மனிதர்கள் சாதனை படைத்து நாம் கேள்விப்பட்டிருப்போம். நாளடைவில், அது ஒரு அடையாள சின்னமாக மாறி, நம்மை பற்றி உலகம் அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு, விசித்திரமான விஷயங்களை செய்து மனிதர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், நியூயார்க்கை சேர்ந்த ஒரு யூடியூபர், ஒரு லிட்டர் Mountain Dew குளிர்பானம் மற்றும் தக்காளி சாஸை இரண்டு நிமிடங்களில் அதிவேகமாக அருந்தி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Eric Booker
Eric BookerTwitter

பொதுவாக தாகத்திற்கு, அல்லது நம் உணவுடன் சேர்த்து குளிர்பானங்களை அருந்துவோம். ஆனால் எரிக் "பேட்லேண்ட்ஸ்" புக்கர் என்கிற நியூயார்க்கை சேர்ந்த யூடியூபர், கின்னஸ் சாதனை படைக்க குளிர்பானத்தை அருந்தியுள்ளார்.

வெறும் 6.8 வினாடிகளில் ஒரு லிட்டர் Mountain Dewவை குடித்து முடித்த அவர், அடுத்து 1 நிமிடம் 18 வினாடிகளில் ஒரு லிட்டர் தக்காளி sauce யும் குடித்து முடித்தார். இதன் மூலம் முன்பு பதிவு செய்யப்பட்ட கின்னஸ் சாதனையை எரிக் முறியடித்துள்ளார்.

இதற்கு முந்தய உலக சாதனை 18.45 வினாடிகளில் செய்து முடிக்கப்பட்ட நிலையில், எரிக்கின் இந்த சாதனை, புதிய சாதனையாக பதிவாகியுள்ளது

Eric Booker
கின்னஸ் சாதனை படைத்த நாய் - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com