6,400 வைரங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த நாணயம் - மதிப்பு என்ன தெரியுமா?

நாணயம் முழுவதும், 2 ஆம் எலிசபெத்தின் உருவங்கள், அவரின் வார்த்தைகள், அவர் பயன்படுத்திய மகுடங்கள் ஆகியவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நாணயம் தயாரிக்க சுமார் 16 மாதங்கள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
World's Most Expensive Coin At Rs 192 Cr Is Made By India-Born Businessman's East India Company
World's Most Expensive Coin At Rs 192 Cr Is Made By India-Born Businessman's East India CompanyTwitter

இங்கிலாந்து ராணியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உலகின் மிக விலையுயர்ந்த நாணயத்தை கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக வெளியிடப்பட்ட புதிய நாணயம் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நாணயத்தின் விலை 23 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 192 கோடி) தோரயமாக 4 கிலோ தங்கம் மற்றும் 6,400க்கும் மேற்பட்ட வைரங்களால் ஆனது என்று கூறப்படுகிறது.

ராணி மரணமடைந்து ஓராண்டு ஆகும் நிலையில் அவரது நினைவாக இந்த நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தாவுக்குச் சொந்தமான, "ஈஸ்ட் இந்தியா" கம்பெனியால் இந்த நாணயம் உருவாக்கப்பட்டது.

இந்த நாணயம், இங்கிலாந்து ராணியின் மாட்சிமைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீடித்த பாரம்பரியமாக விளங்கும் என சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

நாணயம் எப்படி இருக்கும்?

இந்த நாணயம் 9.6 அங்குல விட்டம் கொண்டது. இதில் மேரி கில்லிக், அர்னால்ட் மச்சின், ரஃபேல் மக்லூஃப் மற்றும் இயன் ரேங்க்-பிராட்லி போன்ற பிரபல ஓவியர்களின் கைவண்ணம் உள்ளது.

World's Most Expensive Coin At Rs 192 Cr Is Made By India-Born Businessman's East India Company
எலிசபெத் : உலக போரில் அமெரிக்கா வெற்றிபெற காரணமான பெண்- இவரின் கதை மறைக்கப்பட்டது ஏன்?

நாணயம் முழுவதும், 2 ஆம் எலிசபெத்தின் உருவங்கள், அவரின் வார்த்தைகள், அவர் பயன்படுத்திய மகுடங்கள் ஆகியவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயம் தயாரிக்க சுமார் 16 மாதங்கள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன், சிங்கப்பூர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கைவினைஞர்கள் நாணயம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன், 2021 ஆம் ஆண்டு சோத்பீஸ் நியூயார்க் (Sotheby's New York) ஏலத்தில் 157 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அரிய 1933 US டபுள் ஈகிள் நாணயம், உலகின் மிக விலையுயர்ந்த நாணயத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்திருந்தது. அதனை இந்த நாணயம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

World's Most Expensive Coin At Rs 192 Cr Is Made By India-Born Businessman's East India Company
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com