உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட செம்மறி ஆடுகள் - எத்தனை கோடி தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் கம்பளி மற்றும் செம்மறி இறைச்சித் தொழில்கள் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளன என்பதை செம்மறி ஆடுகளின் விலை வெளிப்படுத்துகிறது.
Sheep
SheepPexels
Published on

மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்க தயங்குவதில்லை.

ஆடை முதல் காலணிகள், நகைகள் என தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பணத்தை கொடுத்து வாங்குகிறார்கள்.

ஆனால் இந்த பட்டியலில் செம்மறி ஆடுகள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Picasa

எலைட் ஆஸ்திரேலியன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்கள் உலகின் மிக விலையுயர்ந்த ஆடுகளை வாங்கியுள்ளனர். இந்த செம்மறி ஆடுகளின் விலை 2 கோடி ரூபாயாம்!

”எலைட் ஆஸ்திரேலியன்” என்ற நான்கு பேர் கொண்ட குழு இந்த ஆஸ்திரேலிய ஒயிட் ஸ்டட் ஆடுகளை வாங்கியது.

2 கோடிக்கு விற்கப்பட்ட இந்த செம்மறி ஆடுகள் உலகின் விலை உயர்ந்த செம்மறி என்ற சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கம்பளி மற்றும் செம்மறி இறைச்சித் தொழில்கள் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளன என்பதை செம்மறி ஆடுகளின் விலை வெளிப்படுத்துகிறது.

வெள்ளை செம்மறி ஆடுகளின் தேவை அதிகம்

ஆஸ்திரேலியாவில், ரோமங்களை அகற்றும் வேலைக்கு அதிக செலவு ஆகும் என்பதால் இறைச்சியின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் செம்மறி வெட்டுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

அடர்த்தியான ரோமங்கள் இல்லாத சில வகையான ஆடுகளில் ஒன்று தான் இந்த ஆஸ்திரேலிய வெள்ளை செம்மறி. இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, அடர்த்தியான உடல் ரோமங்கள் இல்லாத ஆஸ்திரேலிய வெள்ளை செம்மறி ஆடுகளின் தேவை அதிகரித்து வருவதாக எலைட் ஆஸ்திரேலியன் கூறுகின்றனர்.

Sheep
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com