உலகிலேயே உயரமான மனிதர் இவர்தானா? வளர்ந்துக்கொண்டே போகும் விநோதம் - என்ன காரணம்?

கானாவைச் சேர்ந்த 29 வயதான சுலேமனா அப்துல் சமேது என்ற வணிக உரிமையாளர் உலகின் மிக உயரமான மனிதர் என்று கூறப்படுகிறது.
Sulemana Abdul Samed
Sulemana Abdul SamedTwitter
Published on

கனா நாட்டைச் சேர்ந்த அப்துல் சமேது அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவரது உயரம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கனா தலைநகர் அக்ராவின் ஒரு கிராமத்தில் வசிக்கும் 29 வயதான சுலெமனா அப்துல் சமேதுக்கு உயரமாக வளரும் நோய் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது.

மரபணு கோளாறு காரணமாக ஏற்படும் இந்த நோயின் முக்கியமான அறிகுறி கால்கள் பெரிதாக இருப்பதுதான்.

சமேதுக்கு மார்பன் நோய்க்குறி உள்ளது. மார்பன் நோய்க்குறி என்பது உடலின் இணைப்பு திசுக்களை பாதிக்கும் ஒரு மரபணு நிலையாகும். இதன் விளைவாக முதுகெலும்பு அசாதாரணமாக வளைந்துகொள்ளும்

வழக்கமான பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் சுலெமனா. அங்கு அளவீடு செய்தபோது அவரது உயரம் 9 அடி 6 அங்குலமாக இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் இவர் தான் உலகின் மிக உயரமான மனிதர் என்று கூறப்பட்டது. ஆனால் உள்ளூர் கிளினிக்கில் பொருத்தமான அளவீட்டு கருவிகள் இல்லாததால், அவரது உயரத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

Sulemana Abdul Samed
பல ஆண்டுகளாக சிறுநீரைக் குடித்து உயிர் வாழும் மனிதர் - காரணம் என்ன?

இது குறித்து அப்துல் சமேது கூறுகையில்,

22வது வயதில் எனது உயரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தேன்.

நான் இப்போதும் வளர்ந்து வருகிறேன். ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நான் உயரமாக வளர்ந்துகொண்டே இருக்கிறேன்.

நீங்கள் என்னை சில மாதங்கள் பார்க்காமல் இருந்தால் நான் உயரமாக வளர்ந்திருப்பதை உணர்வீர்கள் என்கிறார் அப்துல் சமேது.

Sulemana Abdul Samed
The Mountain Man : இறந்த மனைவிக்காக 22 ஆண்டுகள் மலையை உடைத்த மனிதர் - ரியல் ஹீரோவின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com