77 ஆண்டுகளாக முன்னாள் ராணுவ வீரர் கழுத்தில் சிக்கியிருந்த குண்டு - மருத்துவர்கள் அதிர்ச்சி

தன் சக போராளிக்கு அடிப்பட்டிருந்தபோது ஜோ அவரை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது காயம்பட்ட வீரரை தூக்கி வரும்போது எதிராளிகள் இவரை தக்கியதில் தான் ஜோவிற்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது
77 ஆண்டுகளாக கழுத்தில் சிக்கியிருந்த குண்டு
77 ஆண்டுகளாக கழுத்தில் சிக்கியிருந்த குண்டுTwitter
Published on

முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் கழுத்தில் 77 ஆண்டுகளாக துப்பாக்கி குண்டு ஒன்று சிக்கியிருப்பதை கண்டறிந்துள்ளனர் மருத்துவர்கள்.

சீனாவை சேர்ந்த ஜோ ஹீ என்பவர் இரண்டாம் உலகப் போரில் சண்டையிட்ட போராளி. இவர் மருத்துவமனையில் X Ray எடுத்தபோது இவரது கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டு ஒன்று சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

ஜோவிடம் இதைபற்றி கேட்டபோது தனக்கு கழுத்தில் குண்டடிப்பட்டதாக நினைவே இல்லை என தெரிவித்துள்ளார். போரில் அதிக முறை தான் தக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் அவருக்கு முற்றிலும் நினைவில் இல்லை எனவும் கூறியுள்ளார் 95 வயதாகும் ஜோ.

ஜோவின் மருமகன் வாங் கூறுகையில், தன் சக போராளிக்கு அடிப்பட்டிருந்தபோது ஜோ அவரை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது காயம்பட்ட வீரரை தூக்கி வரும்போது எதிராளிகள் இவரை தக்கியதில் தான் ஜோவிற்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

77 ஆண்டுகளாக கழுத்தில் சிக்கியிருந்த குண்டு
குண்டடி பட்டும் நாட்டிற்காக போராடிய நாய் - பயங்கரவாதிகளை வீழ்த்தியது எப்படி?

இந்த காயத்தை தவிர, ஜோவின் உடம்பில் மேலும் சில இடங்களிலும் குண்டுகள் உள்ளதாக வாங், தி சன் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

குண்டு சிக்கியிருப்பதை பார்த்த மருத்துவர்கள், ஜோவை சோதித்து பார்த்தனர். அதிர்ஷ்டவசமாக, 77 ஆண்டுகளாக அவரது கழுத்தில் சிக்கியிருக்கும் அந்த குண்டினால் ஜோவிற்கு எந்த ஆபத்தும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜோவிற்கு தற்போது அறுவை சிகிச்சை செய்து அந்த குண்டை அகற்றினால் அது ஆபத்தாக முடியலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

77 ஆண்டுகளாக கழுத்தில் சிக்கியிருந்த குண்டு
அடையாளம் தெரியாமல் மாறிப்போன உக்ரைன் ராணுவ வீரர் - பதைபதைக்க செய்த புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com