உங்களுக்கான மீனை பிடித்துகொடுத்தால் விலையில் டிஸ்கவுன்ட் - உணவகத்தின் பலே ஐடியா!

அதாவது வாடிக்கையாளர்கள் விரும்பும் மீனை அவர்களே பிடித்து பின்னர் அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதன் பிறகு அந்த மீன் சமையல்காரருக்கு அனுப்பப்படும்.
You can catch your own fish to enjoy a meal at this Japanese restaurant
You can catch your own fish to enjoy a meal at this Japanese restaurant Twitter
Published on

ஜப்பானில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய மீனை அவர்களே பிடித்துகொடுத்தால் அதன் விலையில் சலுகை அளிக்கப்படுகிறது.

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள Zauo உணவகம் அந்த வளாகத்தில் உள்ள குளத்தில் இருந்து மீன் பிடிக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

அதாவது வாடிக்கையாளர்கள் விரும்பும் மீனை அவர்களே பிடித்து பின்னர் அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதன் பிறகு அந்த மீன் சமையல்காரருக்கு அனுப்பப்படும்.

வாடிக்கையாளர்கள் படகில் அமர்ந்து அந்த மீனை பிடிக்க அந்த உணவகம் அனுமதியளிக்கிறது.

இன்ஸ்டாகிராம் பயனர் @hangrybynature என்பவரால் வெளியிடப்பட்ட வீடியோவில் ஒரு பெண் மற்றும் அவரது குடும்பத்தினர், உணவகத்தில் தங்கள் சொந்த மீன்களைப் பிடிக்கின்றனர்.

You can catch your own fish to enjoy a meal at this Japanese restaurant
39 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீன் : இதுதான் மனித இனத்தின் மூதாதையர்

"ஜப்பானில் யாருடன் மீன்பிடிக்கச் செல்ல விரும்புகிறீர்கள்?" என்று வீடியோவில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மீனை நீங்களே பிடித்தால், அது விலை குறைவாக கொடுக்கப்படுகிறது.

"ரெட்-ஸ்னாப்பர் மீனின் வழக்கமான விலை 4,180 ஜப்பானிய யென் (ரூ. 2,332), ஆனால் வாடிக்கையாளரால் பிடிக்கப்பட்டால், அதன் விலை 1,810 ஜப்பானிய யென் (ரூ. 1,010) ஆகும்."

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது.

You can catch your own fish to enjoy a meal at this Japanese restaurant
மீன்பிடிக்கச் சென்ற நபரின் தொண்டைக்குள் சிக்கிய மீன் - மருத்துவர்கள் அதிர்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com