"கொடுத்த வேலை முடிந்ததா?" பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரிடம் பாஸ் கேள்வி

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை தொடர்புக்கொண்டு கொடுத்த வேலை முடிந்ததா? இல்லையென்றால் முடித்து கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று மேலதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
(Rep)
(Rep)Canva
Published on

தன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியரை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பணியை முடிக்க மீண்டும் அழைத்துள்ளார் மேலதிகாரி.

தன் பாஸுடனான இந்த உரையாடலை Red IT தளத்தில் அந்த முன்னாள் ஊழியர் பகிர, சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை வசைபாடி வருகின்றனர்

பாஸுக்கும் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ஊழியருக்கும் இடையே இருக்கும் உறவு இயல்பானதாகவும் ஃப்ரெண்ட்லியாகாவும் மாறிவரும் நிலையில், சில மேலதிகாரிகள் ஊழியர்களிடம் சற்று கராராகத் தான் நடந்துகொள்கின்றனர்.

அப்படித் தான் இங்கும் ஒரு பாஸ் நடந்துகொள்கிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளார் அவரின் மேலதிகாரி. வேலை விட்டு நீக்கியப் பின், அந்த நபரை தொடர்புக் கொண்ட மேலதிகாரி, அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததா என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதளித்த அந்த ஊழியர், "எனக்கு குழப்பமாக இருக்கிறது. என்னை வேலை விட்டு நீங்கி விட்டீர்களா? இல்லையா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு, ஆமாம் ஆனால் அந்த வேலை முடிந்ததா, இல்லையென்றால் முடித்துகொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ஊழியர், யாரும் வேலையிலிருந்து துரத்தியவரை மீண்டும் வந்து வேலையை முடித்துக் கொடுக்க சொல்லமாட்டார்கள். என் 25 வருடத்தில் இதுபோல எங்கும் கேட்டதில்லை என்று கூறியிருந்தார்.

இந்த உரையாடலை Red IT தளத்தில் அவர் பகிர, இணைய வாசிகள் அந்த மேலதிகாரியை சரமாரியாக வசைபாடி வருகின்றனர்

இந்த ஸ்க்ரீன் ஷாட்டை, "நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன்" என்ற தலைப்போடு அந்த நபர் பகிர்ந்திருந்தார்.

அதில் ஒருவர், "அடுத்த முறை உங்களது சம்பள நாள் வரும்போது நீங்கள் அவரை விடாமல் துரத்தி தொல்லைக் கொடுங்கள்." என்றார்

மேலும் அந்த மேலதிகாரி ஊழியரிடம், இத்தனை வருடங்களாக நீங்கள் வேலையிலிருப்பதால், சற்று Professionalஆக நடந்துகொள்வீர்கள் என்று நினைத்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடலை படித்த பலரும் அந்த மேலதிகாரிக்குத் தான் Professionalism தெரியவில்லை என்று காட்டம் தெரிவித்திருந்தனர்

(Rep)
வாட்ஸ் அப்பில் ஊழியர் "Hey" சொன்னதால் கடுப்பான பாஸ் - நெட்டிசன்கள் கருத்து என்ன?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com