பாஜக எம்எல்ஏவை விமர்சித்த யூடியூபர்களை அரை நிர்வாணமாக்கிய கொடூரம்!
பாஜக எம்எல்ஏவை விமர்சித்த யூடியூபர்களை அரை நிர்வாணமாக்கிய கொடூரம்!NewsSense

மத்தியப் பிரேதசம்: பாஜக எம்எல்ஏவை விமர்சித்த யூடியூபர்களை அரை நிர்வாணமாக்கிய கொடூரம்!

இந்த அரை நிர்வாணக் கொடூரம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்று அதன் புகைப்படம் தற்போது பரவி வருகிறது. இந்த அநீதி சித்தி மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல்நிலையத்தில் நடைபெற்றிருக்கிறது.
Published on

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பாஜகவின் எம்எல்ஏவாக இருக்கிறார் கேதார்நாத் சுக்லா. இவரை விமர்சனம் செய்ததாக மாற்று பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களை அரை நிர்வாணப்படுத்தி இருக்கிறது போலீசு. பாஜக ஆளும் மத்தியப் பிரேசத்தில் நடந்த இந்த கொடூமான செய்தி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

யார் இவர்கள்?

கைது செய்யப்பட்டயூடியூபரின் பெயர் கனிஷ்க் திவாரி. அவர் நடத்தும் யூடியூப் சேனலின் பெயர் எம்பிசந்தேஷ்நியூஸ்24. இந்த சானலுக்கு 1,70,000 சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இவரும் மற்றவர்களும் அரை நிர்வாணப்படுத்தப் பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தன்னை விமரிசப்பவர்களுக்கு ஒரு பயம் இருக்கட்டும் என்று பாஜகவின் ஐ.டி விங் இதை திட்டமிட்டே பரப்பி வருகிறது.

இதற்கு முன்னும் மாட்டைக் கொன்றார்கள் என்று பல வட இந்திய மாநிலங்களில் தலித்துக்கள் மற்றம் முஸ்லீம்களை அடிக்கும் வீடியோ காட்சிகளை பரப்பியிருக்கிறார்கள். அடித்தவர்கள் யார் மீதும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாஜகவின் சித்தி மாவட்ட எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் மகன் குருதத் சுக்லாவின் புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஏஎஸ்பி அஞ்சுலதா பட்லே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குருதத் சுக்லா தன்னைப் பற்றி ஃபேஸ்புக்கில் தவறான தகவல்களை பரப்புவதாக புகார் அளித்திருந்தார். அவை வெறும் விமர்சனமே அன்றி உண்மைக்கு மாறாக எதுவுமில்லை. மேலும் பாஜக எம்எல்ஏ கேதார்நாத்தும் சித்தி மாவட்டத்தின் கோட்வாலி போலீஸ் நிலையித்தில் மார்ச் 16 அன்று புகார் அளித்திருந்தார்.

பாஜக எம்எல்ஏவை விமர்சித்த யூடியூபர்களை அரை நிர்வாணமாக்கிய கொடூரம்!
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

கைது நடவடிக்கை

எம்எல்ஏ மற்றும் அவரது மகன் புகார் பெயரில் நாடக கலைஞர் நீரஜ் குந்தர் முதலில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பிற நாடகக் கலைஞர்கள், பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரி போன்றோர் சுமார் நாற்பது பேர் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்காக அவர்களை 151 பிரிவில் போலீஸ் கைது செய்திருக்கிறது. அதாவது பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இடையூறு செய்தார்களாம். அப்படி ஒரு புகாரை எந்த பொதுமக்களும் கொடுக்கவில்லை. இதுதான் இந்த நாட்டு கருத்துச் சுதந்திரத்தின் கதி.

ஆர்ப்பாட்டம் நடத்திய போது இந்திராவதி நாட்டிய சமிதி உறுப்பினர்கள், கனிஷ்க் திவாரி போன்றோர் மத்தியப் பிரதேச பாஜக முதலவர் சிவராஜ் சவுகானுக்கு எதிரான முழக்கங்களை முழங்கினர். அதற்காகத்தான் இந்த கைது!

இந்த அரை நிர்வாணக் கொடூரம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்று அதன் புகைப்படம் தற்போது பரவி வருகிறது. இந்த அநீதி சித்தி மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல்நிலையத்தில் நடைபெற்றிருக்கிறது.

சமூக ஊடகங்களில் கண்டனம்

தற்போது சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்த பிறகு மத்தியப் பிரதேச போலீசு இதைப் பற்றி விசாரிப்பதாக உத்திரவு போட்டிருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் என்ன குற்றம் செய்திருந்தாலும் இப்படி உடைகளை உருவுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. குற்றம் இழைத்தவர்கள் மீது விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தி மாவட்ட எஸ்பி முகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் ஏப்ரல் 3 அன்று பிணையில் விடுவிக்கப் பட்டார்கள்.

போலீசார் போராடியவர்களை அரை நிர்வாணப்படுத்த மட்டும் செய்யவில்லை. திவாரியின் கூற்றுப்படி போலீஸ் நிலையத்தில் 18 மணிநேரம் வைத்து அவரை கொடூரமாக தாக்கவும் செய்திருக்கிறார்கள்.

வட இந்திய மாநிலங்களில் பாஜகவின் ஒரு வட்டச் செயலாளரைக் கூட விமர்சனம் செய்து ஒரு பத்திரிகையாளர் எழுதக் கூடாது என்பதே இந்த சம்பவம் சொல்லும் செய்தி. தமிழகத்தில் வார்டு கவுன்சிலர் வாக்குகளுக்கே அல்லாதும் பாஜக தீவிரமாக வளர்வதற்கு முயற்சி செய்து வருகிறது. அதில் வெற்றி பெற்றால் நம் பத்திரிகையாளர்களின் கதி?

பாஜக எம்எல்ஏவை விமர்சித்த யூடியூபர்களை அரை நிர்வாணமாக்கிய கொடூரம்!
இலங்கை : அதிகரிக்கப் போகும் இறப்புகள், திவால் ஆகிறதா தேசம்?
பாஜக எம்எல்ஏவை விமர்சித்த யூடியூபர்களை அரை நிர்வாணமாக்கிய கொடூரம்!
இலங்கை : “நடக்கக் கூடாத ஏதோ நடக்கப் போகிறது” - அச்சம் தெரிவித்த முக்கியப் புள்ளி
logo
Newssense
newssense.vikatan.com