Zealandia : 375 ஆண்டுகளுக்கு பின் உலகின் 8வது கண்டம் கண்டுபிடிப்பு - எங்கே இருக்கிறது?

உலகில் எட்டாவது கண்டமாக இருந்த ஒன்று இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு சுமார் 375 ஆண்டுகள் எடுத்துள்ளது.
Zealandia: The supposed missing 8th continent that was discovered after 375 years
Zealandia: The supposed missing 8th continent that was discovered after 375 yearsTwitter
Published on

உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே! இப்போது எட்டாவதாக ஒரு கன்னடம் இருக்கிறதாம்.

உலகில் எட்டாவது கண்டமாக இருந்த ஒன்று இவ்வளவு நாட்கள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத வகையில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கண்டத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு சுமார் 375 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

புவியியலாளர்கள் பசிபிக் பெருங்கடலுக்குள் ஆழமான நிலத்தின் பெரும்பகுதியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

ஜிலாண்டியா

எட்டாவது கண்டமான ஜிலாண்டியா, பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைச் சுற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. இது ஒரு கண்டமா? இல்லையா? என்பது தான் அந்த விவாதமாக இருக்கிறது.

'கண்டம்' என்ற வார்த்தையே விவாதத்திற்குரியது என்றாலும், ஒரு கண்டம் தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது 1 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும், வரையறையின்படி, ஒரு கண்டம் கடலின் மட்டத்தில் இருந்து சில அடிகளாவது உயர்ந்து நிலம் வெளியில் தெரிவதாக இருக்க வேண்டும்.

ஆனால் ஜிலாண்டியா கடல் மட்ட உயர்வைத் தவிர மற்ற அனைத்து அளவுகோலையும் பூர்த்தி செய்கிறது என்பதால் தான் இதை கண்டம் என்று அழைக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் நடந்து வருகிறது.

Zealandia: The supposed missing 8th continent that was discovered after 375 years
மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்

விஞ்ஞானிகள் நீண்ட காலமாக Zealandia என்ற பகுதியின் வரலாறு மற்றும் புவியியல் பற்றி கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இறுதியாக, சுமார் 375 ஆண்டுகளுக்குப் பிறகு, புவியியலாளர்கள் 2017 இல் இந்த கண்டத்தைக் கண்டுபிடித்தனர்.

இது குறித்த ஆய்வு விவரங்கள் தான் இப்போது வெளியாகி வருகின்றன. Zelandia பற்றி தீர்க்கப்பட வேண்டிய மற்றொரு மர்மம் என்னவென்றால், அது எப்போது நீருக்கடியில் சென்றது? எதிர்காலத்தில் இது பற்றிய தகவல்கள் கிடைக்க பெறும் என்று நம்பப்படுகிறது.

Zealandia: The supposed missing 8th continent that was discovered after 375 years
டைனோசர்களுக்கு நாட்கள் விரைவாக நகர்ந்தது - வேகமாக சுழன்றதா பூமி? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com