மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்

37 ஆண்டுகளாக தொடர்ந்து அணுக்கதிர்வீச்சை எதிர்கொண்டும் அங்கே இந்த வளர்ச்சி இருக்கிறது. ஆனால், மனிதர்கள் இருந்திருந்தால், தாவரங்களும், விலங்குகளும் இவ்வளவு இருந்திருக்காது. எனில் மனிதர்கள் அணுக்கதிர்வீச்சைவிட ஆபத்தான மாசுபாடா என்ற என்ற கேள்வி எழுகிறது.
மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்
மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்NS

புவியின் நீண்ட நெடிய வரலாற்றில், பல யுகங்கள் தோன்றி மறைந்துள்ளன. நாம் இப்போது இருக்கும் ஆந்த்ரபோசீன் யுகம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

மனித குலம் இந்தப் புவியில் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்கள் நிறைய. நெருப்பு முதல், விவசாயம், அணு உலைகள், விண்கலன்கள், பிளாஸ்டிக்குகள், காற்று மாசுபாடு ஆகியவை எல்லாம் மனிதனால் புவியில் விளைந்த தீவிர தாக்கங்கள்.

இந்த நொடி முதல் நாம் காற்றில் ஒரு துளி கரியமில வாயுகூட கலக்காமல் நிறுத்திக்கொண்டாலும், நாம் ஏற்கெனவே கலந்த கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் மறைந்து ஒழிய பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும்.

NS

காற்றுமண்டலத்தின் உச்சி வரை காற்றுமாசுபாடும், கடலின் அடியாழம் வரை பிளாஸ்டிக் மாசுபாடும் செய்துள்ள மனித குலமே மோசமான மாசுபாடுதான்.

சோவியத் ஒன்றியத்தில் (தற்போதைய யுக்ரேனில் உள்ள) 1986ம் ஆண்டு நிகழ்ந்த செர்னோபிள் அணு உலை வெடிப்பு உலகை நிலைகுலைய வைத்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்குப் அணுக்கதிர் வீச்சு பரவியது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அணு உலையின் கதிர்வீச்சு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தை அடுத்து 19 கி.மீ. சுற்றளவுக்கு மனிதர்கள் செல்லக்கூடாத பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. அந்தப் பகுதியில் எதிர்பாராத விதமாக ஏராளமான விலங்குகளும், தாவரங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் செழித்து வளர்கின்றன.

37 ஆண்டுகளாக தொடர்ந்து அணுக்கதிர்வீச்சை எதிர்கொண்டும் அங்கே இந்த வளர்ச்சி இருக்கிறது. ஆனால், மனிதர்கள் இருந்திருந்தால், தாவரங்களும், விலங்குகளும் இவ்வளவு இருந்திருக்காது. எனில் மனிதர்கள் அணுக்கதிர்வீச்சைவிட ஆபத்தான மாசுபாடா என்ற என்ற கேள்வி எழுகிறது.

மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்
Aliens : 100 ஆண்டுகளாய் வேற்றுகிரகவாசிகளுடன் பேச முயலும் மனித குலம் - முழுமையான வரலாறு
Photographer: Ugurhan BETIN

மனித குலம் அழியுமா?

சரி மனித குலம் அழியுமா, அழிந்தால் பூமியில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பூமியின் பல யுகங்களில் இதுவரை உருவான உயிரினங்களில் 99 சதவீதம் உயிரினங்கள் இப்போது இல்லை. பல்வேறு காலகட்டங்களில் அவை அழிந்துவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை, டைனோசரஸ் இனத்தை அழித்ததைப் போன்ற பேரூழிகள் அல்லது பேரழிவு நிகழ்வுகளில் அழிந்தவையே. ஆனால், மனிதகுலம் இன்னும் அதுபோன்ற ஊழிக் காலத்தை, பேரழிவு நிகழ்வைப் பார்த்ததில்லை. அதுபோன்ற ஒரு பேரழிவு நிகழ்வை மனிதகுலம் பார்க்க நேரிட்டு அதில் அழியலாம்.

அல்லது அதற்கு முன்பாகவே மனித குலம் மட்டும் அழிந்து பிற உயிரினங்கள் நீடித்து வாழலாம்.

மனித குலம் அழியுமா என்பதில் கேள்வியே இல்லை. நிச்சயமாக அழியும். ஆனால், எப்போது?  எப்படி? என்பதுதான் கேள்வி.

மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால், அடுத்த நூற்றாண்டில் மனித குலம் அழிய நேரிடும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தலைசிறந்த வைராலஜிஸ்ட்ஃப்ராங்க் ஃபென்னர் 2010ம் ஆண்டு கூறினார்.

நாம் அழிந்தாலும் பூமி சிக்கல் ஏதும் இல்லாமல் சுழலும். உயிரினங்கள் நிலைத்து வாழும். புவியில் நாம் ஏற்படுத்திய பல அடையாளங்கள் நாம் நினைப்பதைவிட விரைவாக அழியும்.

நாம் கட்டியெழுப்பிய மாநகரங்கள், பாலங்கள் நொறுங்கி அழியலாம், நிலங்கள் காடுகளாகலாம். எல்லாவற்றையும் கடைசியில் இயற்கை விழுங்கும் என்கிறார் தி வேர்ல்ட் வித்தவுட் அஸ் என்ற நூலை எழுதிய ஆலன் வெயிஸ்மேன்.

மனித குலம் அழிந்த பிறகு புவியில் என்னென்ன நடக்கும் என்பதை விவரிக்கிறது அந்த நூல்.

மனித குலம் அழிந்த பிறகு, வெகு விரைவில் மெல்லிய பிளாஸ்டிக்குகள், கதிரியக்க ஐசோடோப்புகள், சிக்கன் எலும்புகள் (ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி கோழிகளை நாம் கொல்கிறோம்) ஆகியவற்றின் அடையாளங்கள் இருக்கும்.

எவ்வளவு விரைவாக நாம் உருவாக்கிய கட்டுமானங்களை இயற்கை அழித்து தன்வயப்படுத்திக்கொள்ளும் என்பது இடத்துக்கு இடம்,  மாறுபடும். ஒரு இடத்தின் பருவநிலையே அதைத் தீர்மானிக்கும். மத்தியக் கிழக்கில் உள்ள பாலைவனங்களில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தின் எச்சங்கள் இன்னும் காணப்படுகின்றன. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய நகரங்களைக்கூட வெப்பமண்டலக் காடுகள் அழித்திருக்கும்.

மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்
Vietnam: கடலுக்குள் மனித காலடி தடமேபடாத செங்குத்து மலைகள்! - உலகிலேயே அழகான இடம் இதுதானா?

மனித குலம் அழிந்த பிறகு படிப்படியாக என்ன நடக்கும்?

மனித குலம் அழிந்தவுடன், மனிதர்களோடு நெருக்கமான உறவு கொண்ட விலங்குகளும், தாவரங்களும் முதலில் அழிவை சந்திக்கும்.

மனிதர்களுக்கு உணவளித்த, பூச்சி மருந்துகளாலும், செயற்கை உரங்களாலும் வளர்ந்துகொண்டிருக்கும் பயிர் இனங்கள் உடனடியாக அழிந்து, அவற்றின் சகோதர இனங்களான காட்டினங்கள் பல்கிப் பெருகும். அத்துடன் பூச்சிகள் எண்ணிக்கை பயங்கரமாக அதிகரிக்கும். மனிதர்கள் இருக்கும்போதே, இவ்வளவு பூச்சி மருந்தையும் பார்த்தும் தாக்குப் பிடித்து வளர்ந்தவைதானே அவை.

மனிதர்களும், பூச்சி மருந்துகளும் இல்லாமல் போனால், சொல்லவேண்டுமா? உலகம் பூச்சி சாம்ராஜ்ஜியமாகும். ஒருவேளை அவற்றைவிட அதிகம் பெருகக்கூடியவையாக நுண்ணுயிர்கள் மட்டுமே இருக்கும் என்கிறார் வெயிஸ்மேன்.

இப்படி பூச்சிகள் பல்கிப் பெருகுவதால், அவற்றை உண்டு வாழும் பறவைகள், ஊர்வன போன்றவையும், பிறகு அவற்றை உண்டு வாழும் ஊன் உண்ணிகளும் எண்ணிக்கையில் பெருகும். மனிதர்கள் விட்டுச் செல்லும் உணவு முழுவதும் அழிந்த பிறகு மீண்டும் இவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். மனிதர்கள் அழிவதால் உணவுச் சங்கிலியில் ஏற்படும் தாக்கம் நூறாண்டுகள் கூட நீடிக்கும். காட்டு வகை மாடுகள், ஆடுகள் உயிர் பிழைத்து வாழும்.

ஊனுன்னிகளால் அவை ஆயிரக் கணக்கில் கொல்லப்படும். பூனைகள், நாய்கள் உள்ளிட்ட மனிதர்களின் செல்லப்பிராணிகளான உயிரினங்கள் பல்கிப் பெருகி, ஊன் உன்னிகளாக வெற்றிகரமாக வாழும். அதைப் போல ஓநாய்கள் வெற்றிகரமான விலங்குகளாக இருக்கும்.

உலகம் முழுவதும் எங்கே விட்டாலும், உயிர் பிழைக்கும் பூனைகள் எண்ணிக்கையும் மனிதர்கள் இல்லாத சூழ்நிலையில் பெருகும்.

மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்
"மனித உயிரை பறிக்க 15 நிமிடம் போதும்" - உலகின் மிக ஆபத்தான எறும்பு பற்றி தெரியுமா?

அடுத்த புத்திசாலி உயிரியாக எது இருக்கும்?

மனிதர்களைப் போல புத்திசாலி உயிரி ஒன்று மீண்டும் உருவாகுமா என்பது ஒரு முக்கியக் கேள்வியாக இருக்கும். ஆனால், அதற்கு விடை சொல்வது எளிதல்ல.

சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் எதிர்பாராத அதிர்வுகளை சமாளிக்கும் வகையிலேயே மனித முன்னோர்கள் புத்திசாலிகளாக தொடங்கினர். பெருமளவில் இனப்பெருக்கம் செய்யவும் மனிதனின் அறிவுக்கூர்மை உதவியது.

மனித குலத்தின் பங்காளி இனங்களில் உடல் எடையோடு ஒப்பிட, மூளை எடையின் விகிதம் அதிகமாக இருப்பது பபூன்களிடம்தான் என்கிறார் வெயிஸ்மேன். காடுகளில் உள்ள அவை, காடுகளின் ஓரத்திலும் வாழக் கற்றுள்ளன. சவானா புல்வெளிகளிலும் இரை தேடுகின்றன. வேட்டையாடிகளை கூட்டமாக கூடி எதிர்கொள்வது எப்படி என்பதையும் அவை கற்றுள்ளன. எனவே, அவை மனித குலத்தின் அழிவுக்குப் பிறகு புவியின் அறிவுக்கூர்மையுள்ள விலங்காக உருவெடுக்கலாம்.

நாம் ஏற்கெனவே வெளியிட்டுள்ள கரியமில வாயு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து துருவப் பகுதிகளில் பனி உருகுவதற்கு வழிவகை செய்யும்.

உலகில் இதுவரை 450 அணு உலைகள் உள்ளன. மனித குலம் அழிந்துபோனால், இந்த அணு உலைகளை குளிர்வித்து வைக்கவேண்டிய இயந்திரங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் தீர்ந்துபோகும். பிறகு அணு உலைகளில் வெப்பநிலை அதிகரித்து அவை உருகும், வெடித்துச் சிதறும். அணுக்கதிர்வீச்சு கட்டுப்பாடின்றி பரவும்.

இதனால், உலகின் சுற்றுச்சூழலில் என்ன தாக்கம் ஏற்படும் என்பதைக் கணிப்பது கடினம். இது தவிர, எண்ணைக் கசிவுகள், வேதிக் கசிவுகள், வெவ்வேறு விதமான வெடிபொருள்கள் போன்றவை மனிதர்கள் விட்டுவிட்டுச் செல்லும் டைம்பாம் போன்றவை. இவற்றால் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஏற்படும் தீ பல பத்தாண்டுகளுக்கு எரியும்.

அது எப்படி பல பத்தாண்டுகளுக்கு தொடர்ந்து தீ எரியும்? நடுவில் மழை வராதா என்று கேட்பவர்களுக்காக ஒரு தகவல்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள சென்ட்ரலியா என்ற நகரத்துக்கு கீழே சுமார் 300 அடி ஆழ நிலக்கரி சுரங்கத்தில் உள்ள நிலக்கரிப் படுகையில் 1962ம் ஆண்டு பற்றிய தீ இன்று வரை எரிகிறது. மொத்த நகர மக்களும் ஊரை காலி செய்துகொண்டு போய்விட்டார்கள். அடியில் எரியும் தீயால் நகரம் நொறுங்கி அழிந்தது. இன்று அந்த நகரமே இடையிடையே சாலை போட்ட புல்வெளிப் பரப்பைப் போலக் காட்சி அளிக்கிறது. அந்த நகரை இயற்கை விழுங்கிவிட்டது.

நீண்ட காலம் நீடித்திருக்கப் போகும் மனித குலத்தின் அடையாளங்கள் எவை?

ஆனால், சென்ட்ரலியா நகரைப்போல இயற்கையால் வெகு விரைவாக அழிக்க முடியாத, மனித குலத்தின் சில அடையாளங்கள் பல கோடி ஆண்டுகள் கூட நீடித்திருக்கும். மனித குலம் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று செரிக்கக்கூடிய நுண்ணுயிர்கள் உருவாக நீண்ட காலம் பிடிக்கலாம்.

சாலைகளும், காங்கிரீட் சிதைவுகளும் பல்லாயிரம் ஆண்டுகள் காணப்படும். மனிதர்கள் விட்டுச் செல்லும் செராமிக், கல், உலோகச் சிலைகள், சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் நீண்டகாலம் அழியாமல் இருக்கும்.

மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு: வணிகமும், வரலாறும் - ஒரு விரிவான பார்வை

அழியாத அலைகள்

மனிதர்கள் வெளியிடும் ஒலிபரப்பு அலைகள், அல்லது மின் காந்த அலைகள் நம் வீட்டுக் கருவிகளில் ஓசையைத் தோற்றுவித்துவிட்டு மறைந்துவிடுவதில்லை.  அவை விண்வெளியில் பயணம் செய்துகொண்டே இருக்கின்றன. விண்வெளியில் 100 ஒளியாண்டு தூரத்தில் மிகப்பெரிய ஆண்டெனா வைத்துப் பிடித்தால், சென்னை வானொலி நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ பாடலை கேட்டுவிட முடியும். நூறாண்டுக்கு முந்திய ரேடியோ ஒலிபரப்பைக் கூட கேட்க முடியும். சில பத்துலட்சம் ஆண்டுகளுக்கு அந்த ஒலி அலைகள் விண்வெளியில் ஏதோ ஓரிடத்தில் தனியாகப் பிரித்து ரேடியோ போன்ற ஒரு கருவி மூலம் கேட்டுவிடக்கூடிய வகையில் பயணித்துக்கொண்டிருக்கும். அதன் பிறகே அவை பலவீனமடைந்து சிதையும்.

ஆனால், நாம் அனுப்பம் சில விண்கலன்கள் அந்த ஒலி அலைகளைவிடவும் நீண்டகாலம் இருக்கக்கூடும். 1977ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்ட வாயேஜர் விண்கலன் சூரியக் குடும்பத்துக்கு வெளியே பாய்ந்து சென்று மணிக்கு 60 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. எந்தப் பொருள்மீதும் மோதாமல் செல்லுமானால்,  பூமி அழிந்தபிறகும் கூட அது தன் பயணத்தைத் தொடரும் என்று ஒரு கணிப்பு இருக்கிறது. நீண்ட காலம் நீடித்திருக்கப் போகிற மனிதர்கள் செய்த பொருளாக, நீண்ட காலம் நீடித்து இருக்கப் போகும் மனிதர்களின் அடையாளமாக அது இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com