சிறுவன் போன்ற தோற்றம் - வேலை கிடைக்காமல் அவதிப்பட்ட 27 வயது நபர் - வெற்றி பெற்றது எப்படி?

தான் பார்பதற்கு சிறுவனை போல தோற்றமளிப்பதால் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது முதல் சீனாவில் ட்ரெண்டாக இருக்கிறார் மாவோ ஷெங்.
மாவோ ஷெங்.
மாவோ ஷெங்.Twitter
Published on

30களில் அடியெடுத்து வைத்த நம்ம ஊர் 90'ஸ் கிட்ஸுகள் தொப்பையைப் பார்த்து புலம்பும் பதிவுகளை தினமும் கடந்து வருகிறோம். எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாக உள்ளது. ஆனால் அந்த இளமையான தோற்றமே இங்கு ஒருவருக்கு பிரச்னையாக இருக்கிறது.

தான் பார்பதற்கு சிறுவன் போல இருப்பதால் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது முதல் சீனாவில் டிரெண்டாகி இருக்கிறார் மாவோ ஷெங்.

27 வயது இளைஞரான மாவோ தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் தன்னுடன் வேலைத் தேடத் தொடங்கிய நண்பனுக்கு உடனடியாக வேலை கிடைத்துவிட்டதாகவும், தனக்கு எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதனால் தன் தந்தைக்கு பொருளாதார ரீதியில் உதவ முடியாத வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மாவோவின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவரது தாய் மற்றொரு நபரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். தந்தையைப் பார்த்துக்கொள்ள மாவோ மட்டுமே இருக்கிறார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

மாவோ ஷெங்.
மதிய உணவில் கைவைத்த கொரோனா: Lunchflation குறித்து தெரியுமா?

இந்த வீடியோ சீனா முழுவதும் வைரலானது. நெட்டிசன்கள் ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு வேலைக் கொடுக்காமல் மறுப்பது மிகவும் தவறானது என நிறுவனங்களைக் கடிந்தனர்.

வீடியோவைத் தொடர்ந்து மாவோவுக்கு சில வேலை வாய்ப்புகள் வந்ததாகவும், அதில் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்துச் சேர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோ ஷெங்.
சீனா: நூற்றாண்டு பழமையான 3800 டன் எடை கட்டடம் நகர்த்தப்பட்ட அதிசயம்- எப்படி சாத்தியமானது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com