சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த வித்யா பிலிப்போன் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் தனது தாயைத் தேடி வருகிறார். அவரது அம்மாவின் துணை பெயரையும் முகவரியையும் தவிர அவரிடம் எதுவும் இல்லை. அவர் வைத்திருக்கும் முகவரியும் கூட இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வித்யாவின் அம்மா 1996ம் ஆண்டு அவரை மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற இல்லத்தில் விட்டுச் சென்றுள்ளார். 1997ம் ஆண்டு ஒரு சுவிச்சர்லாந்து தம்பதி அவரை தத்தெடுத்து சுவிச்சர்லாந்து கூட்டிச் சென்றுள்ளனர்.
இப்போது வித்யா ராவல் படா, தாஹிசர் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் தனது தாயைத் தேடி வருகிறார். அவரது தாய் விட்டுச்சென்ற மிஷனரியிலும் கூட தேடியுள்ளார். மிஷனரி தாஹிசர் பகுதியில் உள்ள முகவரியை வழங்கியுள்ளனர். தாஹிசர் கடந்த தசாப்தங்களில் பல மற்றங்களைக் கண்டுவிட்டது, இதனால் மக்கள் இங்கிருந்து வெளியேறுவதும் வேறு இடத்தில் இருந்து இங்கு குடியேறுவதும் வழக்கமாகிவிட்டது. அந்த நகரில் ஒரு முகவரியை தேடி கண்டுபிடிப்பது சவாலானது.
தாயை தேட வித்யாவின் கணவரும் உருதுணையாக இருக்கிறார். வழக்கறிஞர் அஞ்சலி மற்றும் சில சமூக சேவகர்களும் வித்யாவுக்கு உதவி வருகின்றனர். வித்யாவின் தாயின் குடும்பப்பெயர் kambli. இந்த பெயர் இருக்கும் நபர்களை விசாரித்து வருகின்றனர்! தனது தாயை கண்டுபிடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் வித்யா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust