பாபா வாங்கா : 2022ல் அச்சு பிசகாமல் நடந்த 4 ஆரூடம் - இந்தியாவில் அடுத்து என்ன நடக்கும்?

பாபா வாங்கா 1996ஆம் ஆண்டே பல்கேரியா நாட்டில் உள்ள சோஃபியா நகரத்தில் காலமாகிவிட்டார். இருப்பினும் அவரது கணிப்புகளை இப்போதும் உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
பாபா வாங்கா
பாபா வாங்காNewsSense
Published on

மனிதர்களுக்கு எப்போதும் எதிர்காலம் குறித்து ஒரு ஆவல் இருந்து வருகிறது. அறிவியலாளர்கள் இதை டயம் டிராவல் என்று அழைத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆராய்ந்து வருகிறார்கள்.


அறிவியலை அதிகம் நம்பாதவர்கள், வானியல் சாஸ்திரம் என்றழைக்கப்படும் ஜோதிடத்தை நம்புகிறார்கள். இந்த ராசிக்காரர் உலகை ஆழ்வார், அந்த ராசிக்காரர் பெரும் செல்வந்தர் ஆவார், இந்த நட்சத்திரக்காரருக்கு வாகனத்தில் கண்டம்... எனக் கூறும் வார்த்தைகளை நம்புகிறது மனித இனம்.


ஆனால் 1911ஆம் ஆண்டு உஸ்ட்ரும்கா (Ustrumca) நகரத்தில் ஒட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் பிறந்த வன்கேலியா பண்டெவா குஷ்டெரோவா (Vangeliya Pandeva Gushterova) என்கிற பெண்மணி, அடுத்த பல நூற்றாண்டுகளில் நடக்க உள்ள விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

பாபா வாங்கா
பாபா வாங்காட்விட்டர்

அவரை மக்கள் பாபா வாங்கா என்று அழைக்கிறார்கள். இவர் 1996ஆம் ஆண்டே பல்கேரியா நாட்டில் உள்ள சோஃபியா நகரத்தில் காலமாகிவிட்டார். இருப்பினும் அவரது கணிப்புகளை இப்போதும் உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.


ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர், உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபராவார், 2004-ல் ஒரு பெரிய சுனாமி ஏற்படும், அமெரிக்காவின் 9/11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபைல் அணுமின் நிலைய விபத்து, சோவியத் ரஷ்யா சிதைவு... என இதுவரை அவர் கணித்த பல விஷயங்கள் அப்படியே நடந்துள்ளன.

எண் அடிப்படையில் கூற வேண்டுமானால் பாபா வாங்கா கூறிய விஷயங்களில் சுமார் 85% கணிப்புகள் அப்படியே நடந்துள்ளதாக வியான் தளம் கூறுகிறது.

2022ஆம் ஆண்டில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பெருவெள்ளம் ஏற்படும் என கணித்திருந்தார் பாபா வாங்கா. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்படுவதைப் பார்க்கிறோம்.

2022 பிப்ரவரி - ஏப்ரல் வரையான காலத்தில், ஆஸ்திரேலியாவில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மிகக்கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, நியூ செளத் வேல்ஸ், குவின்ஸ்லாண்ட் போன்ற முக்கிய நகரங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.

அதே போல உலகின் முக்கிய நாடுகள் மற்றும் நகரங்கள் நீர் பற்றாக்குறைப் பிரச்சனையை எதிர்கொள்ளும் எனக் கணித்திருந்தார் பாபா வாங்கா. தற்போது போர்ச்சுகல் மற்றும் இத்தாலி நாடுகள் நீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

போர்ச்சுகல் தன் நாட்டு மக்களிடம் நீரை கவனமாகக் குறைவாக செலவழிக்குமாறு கூறியுள்ளது. இத்தாலி கடந்த 1950களில் ஏற்பட்ட வறட்சிக்குப் பிறகு பெரிய வறட்சியை எதிர்கொண்டுள்ளது. அதை சமாளிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இத்தாலி.

பாபா வாங்கா
பாபா வாங்கா: சுனாமி, கொரோனா மற்றும் மூன்றாம் உலகப் போரை முன்பே கணித்தாரா இவர்?

2022ஆம் ஆண்டுக்குப் பாபா வாங்கா கணித்த சில விஷயங்கள் இன்னும் அதிர்ச்சி கொடுப்பவையாக இருக்கின்றன. சைபீரியாவில் இருந்து ஒரு ஆபத்தான வைரஸ் வெளிப்படும், ஏலியன்கள் பூமிக்கு வரும், வெர்ச்சுவல் ரியாலிட்டியின் பயன்பாடு புதிய உச்சத்தைத் தொடும் என கணித்திருந்ததாக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.


அதெப்படி திடீரென ஒரு புதிய வைரஸ் வெளிப்படும்..? கடந்த ஜூலை 2021ல் ஆராய்ச்சியாளர்கள் திபெத் சமவெளியில் இரு பனி மாதிரிகளைக் கண்டெடுத்தனர். அதை ஆராய்ந்த போது அதில் சுமார் 33 புதிய வைரல் ஜீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் 4 வைரஸ்கள் பாக்டீரியாக்களைக் கொல்லக் கூடியதாக இருந்தது. சுமார் 28 வைரல் ஜீன்கள் இதுவரை அறிவியல் சமூகம் காணாத வைரஸ்களாக இருந்தன. அதாவது நாவல் வைரஸ்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த 2022ஆம் ஆண்டு வெப்ப நிலை 50 டிகிரியைத் தொடும், அதோடு பூச்சிகளால் விவசாயப் பயிர்கள் சேதமடையும் என பாபா வாங்கா கணித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

2023ஆம் ஆண்டில் பூமியின் சுற்று வட்டப்பாதை மாற்றம் காணும், 2028ஆம் ஆண்டில் மனிதன் வெள்ளி கோளுக்கு பயணிப்பான், 2046 காலகட்டத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளாக இருக்கும், 2100ஆம் ஆண்டு வாக்கில் உலகில் இருள் என்பதே இருக்காது, செயற்கை சூரியன் மூலம் உலகின் மறுபக்கத்துக்கு ஒளிகொடுக்கப்படும்.

இந்த உலகம் 5079ஆம் ஆண்டு அழியும் என்பது வரை கணித்திருக்கிறார் பாபா வாங்கா.
கணிப்புகளைக் படிக்க பயமாகத்தான் இருக்கிறது. நல்லவைகள் மட்டும் நடந்து, கெட்ட விஷயங்கள் நடக்காமலிருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு மனித இனம் ஒத்துழைக்க வேண்டும்.

பாபா வாங்கா
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com