பணக்கார இந்தியர்கள் : யார் யார் சொந்தமாக ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

ஆடம்பரமான கார்கள் மற்றும் ஆடம்பரமான வீடுகளைத் தவிர, பல பணக்கார இந்தியர்கள் நிலத்துக்கும் சொர்க்கத்திற்கும் இடையே பறந்து, பறந்து அதாவது பயணம் செய்து வாழ்க்கையை ரசிக்கிறார்கள்.] அப்படியான ஆடம்பர ஜெட் விமானங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Flight
FlightTwitter

நம்மில் பெரும்பாலானோர் பைக் மற்றும் கார் பட்டியல்களை ஸ்க்ரோல் செய்து கொண்டிருப்போம். நமக்கென்று சொந்த ஜெட் விமானத்தில் பறக்க வேண்டும் என்று கனவெல்லாம் காண்போம். ஆனால், ஜெட் பொம்மைதான் நம்மால் வாங்க முடியும். நிஜ வாழ்க்கையில் தங்களுக்கு என ப்ரைவெட் ஜெட் விமானங்கள் வைத்திருக்கும் பணக்காரர்களைப் பற்றித் தெரியுமா?

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) 2019 அறிக்கையின்படி, 2011-12 ஆம் ஆண்டில், Non-Scheduled Operator's Permit (NSOP) என்று அழைக்கப்படும் ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 147 ஆக உச்சத்தை எட்டியது; பின்னர்க் குறைந்தது. 2017-18ல் 111 ஆக இருந்தது. இந்தியாவில் உள்ள NSOP, கடற்படை ஹெலிகாப்டர்கள் உட்பட 356 விமானங்களைக் கொண்டுள்ளது.

ஆடம்பரமான கார்கள் மற்றும் ஆடம்பரமான வீடுகளைத் தவிர, பல பணக்கார இந்தியர்கள் நிலத்துக்கும் சொர்க்கத்திற்கும் இடையே பறந்து, பறந்து அதாவது பயணம் செய்து வாழ்க்கையை ரசிக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா? இந்தியர்களுக்குச் சொந்தமான மிகவும் விலை உயர்ந்த தனியார் ஜெட் விமானங்கள் மூலம்தான். அப்படியான ஆடம்பர ஜெட் விமானங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி

விமானம்: Boeing Business Jet 2

விலை மதிப்பு: $73 மில்லியன் (தோராயமாக)

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான போயிங் பிசினஸ் ஜெட் 2 (BBJ2) 73 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பரமான ஜெட் விமானம். உலகின் மிக விலையுயர்ந்த வீட்டை வைத்திருக்கும் ஒரு மனிதன்; உலகின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானங்களான ஒன்றையும் வைத்திருப்பது நியாயமானதுதானே....

இந்தச் சொகுசு பிரைவேட் ஜெட் விமானமானது 95.2 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு ஆடம்பரமான இன்டீரியர் கொண்ட சொகுசு விமானம். இதில் ஒரு எக்சிகியூட்டிவ் ஓய்வு அறையும் உள்ளது. இதில் தனிப்பட்ட குளியல் அறை, படுக்கை அறையும் உள்ளது. இதன் மதிப்பு $73 மில்லியன் இருக்கும். பிஸினஸ், பர்சனல் போன்ற எல்லாவற்றுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

ரத்தன் டாடா, Dassault Falcon 2000
ரத்தன் டாடா, Dassault Falcon 2000 Twitter

ரத்தன் டாடா

விமானம்: Dassault Falcon 2000

விலை மதிப்பு: $22 மில்லியன் (தோராயமாக)

ரத்தன் நேவல் டாடா ஒரு பிரபலமான ஆளுமை; அவருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தொழிலதிபர், உதவி செய்வதில் சிறந்தவர், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவிடம் $22 மில்லியன் மதிப்புள்ள மிக விலையுயர்ந்த தனியார் விமானங்களான Dassault Falcon 2000 ஒன்று உள்ளது. Dassault Falcon 2000 ஒரு ஆடம்பரமான ஜெட் விமானம். ரத்தன் டாடா அதில்தான் அடிக்கடி பறப்பார்.

Falcon 2000 விமானம், இரண்டு பிராட் & விட்னி கனடா PW308C டர்போஃபேன் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. 851 km/h வேகத்தில் பயணித்து, 51,000 அடிக்கு மேல் வரை செல்லும்; மேலும், 6,020 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய சொகுசு விமானம்.

அனில் அம்பானி, Bombardier Global Express XRS
அனில் அம்பானி, Bombardier Global Express XRS

அனில் அம்பானி

விமானம்: Bombardier Global Express XRS

விலை மதிப்பு: $38 மில்லியன் (தோராயமாக)

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர், அனில் திருபாய் அம்பானி… ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் தலைமை இவர்தான்.

அனில் அம்பானியிடம் உள்ள Bombardier Global Express XRS ஜெட் விமானம், $38 மில்லியன் விலையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அனில் அம்பானியும் ஆடம்பரத்தின் உருவகத்திற்குச் சற்றும் குறைந்தவர் அல்ல… அவரது ஜெட் சத்தம் மற்றும் அதிர்வு கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டுள்ள சொகுசு விமானம். மேலும், அதில் 14.73-மீட்டர் நீளமான கேபின், போர்டுரூம் மீட்டிங், கான்ஃபரன்ஸ் டேபிள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

அதுல் பஞ்ச், Gulfstream IV
அதுல் பஞ்ச், Gulfstream IVTwitter

அதுல் பஞ்ச்

விமானம்: Gulfstream IV

விலை மதிப்பு: $32.5 மில்லியன் (தோராயமாக)

அதுல் பஞ்ச் இந்தியாவின் மிகப் பெரிய பொறியியல் மற்றும் கட்டுமான குழுக்களில் ஒன்றான பஞ்ச் லியோல்டின் தலைவர் ஆவார். அதுல் பஞ்ஜ் $32.5 மில்லியன் மதிப்புக் கொண்ட கல்ஃப் ஸ்டீரீம் IV- ஐ சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்ஃப் ஸ்டீரீம் IV மற்றும் டெரிவேடிவ்கள் ட்வின்ஜெட் விமானங்களின் குடும்பம்தான். முக்கியமாக இது தனியார் அல்லது வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 1985 முதல் 2018 வரை அமெரிக்காவின் ஜார்ஜியாவின் சவன்னாவில் உள்ள ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனமான Gulfstream Aerospace ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெட் ட்வின் ரோல்ஸ் ராய்ஸ் டே 611-8 இன்ஜின்களால் இயக்கப்படுகிறது; அதிகபட்ச சர்வீஸாக 45,000 அடியை அடைய முடியும். இதுவும் சொகுசு ஜெட் விமானம்தான். எல்லாம் வசதிகளும் கொண்ட விமானமாகும்.

குமார் மங்கலம் பிர்லா, Gulfstream G100
குமார் மங்கலம் பிர்லா, Gulfstream G100Twitter

குமார் மங்கலம் பிர்லா

விமானம்: Gulfstream G100

விலை மதிப்பு: $11 மில்லியன் (தோராயமாக)

குமார் மங்கலம் பிர்லா ஒரு இந்திய பில்லியனர்; தொழிலதிபர்; உதவி செய்வதில் சிறந்தவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய நிறுவனங்களில் ஒன்றான ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரும் ஆவார். குமார் பிர்லாவிடம் இரண்டு ஜெட் விமானங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலாவது Cessna Citation, இரண்டாவது ஏழு இருக்கைகள் கொண்ட Gulf Stream (G100). அவர் ஏழு இருக்கைகளுக்கு $11 மில்லியன் செலவிட்டார். குமார் பிர்லாவுக்கு சொந்தமான செஸ்னா சிட்டேஷன், மிக ஆடம்பரமான ஒரு தனியார் ஜெட் விமானம்.

உலகின் மிகவும் பிரபலமான, அனைவராலும் விரும்பப்பட்ட, மிகவும் நம்பகமான வணிக ஜெட் விமானங்கள்தான் Citations... உயர் தொழில்நுட்ப வடிவமைப்பை கொண்டுள்ள ஜெட் இது. சொகுசு கேபின் உட்புறங்களைக் கொண்டுள்ளது. Pilot-friendly ஜெட் என்றும் சொல்லப்படுகிறது.

லக்‌ஷ்மி மிட்டல், Gulfstream G550
லக்‌ஷ்மி மிட்டல், Gulfstream G550Twitter

லக்‌ஷ்மி மிட்டல்

விமானம்: Gulfstream G550

விலைமதிப்பு: $38 மில்லியன்

லக்ஷ்மி நிவாஸ் மிட்டல், இங்கிலாந்தை சேர்ந்த இன்டியன் ஸ்டீல் மேக்னெட்… 2011 இல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில், இவரது பெயர் உலகின் ஆறாவது பணக்காரர் பட்டியலிலிருந்தது. லண்டனை தளமாகக் கொண்ட கோடீஸ்வரரான இவர், 262 அடி நீளமுள்ள yacht Amevi-யை வைத்திருப்பவர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த yacht-ல் நீச்சல் குளம், சினிமா ஹால், உடற்பயிற்சி கூடம், மசாஜ் அறை, ஹேர் டிரஸ்ஸிங் சலூன், தனித்துவமான பூல் டேபிளும் உள்ளது.

இந்திய ஸ்டீல் மேக்னெட் லட்சுமி மிட்டலுக்கு, 38 மில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார் ஜெட் Gulfstream G550-ஐயும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆடம்பரமான இந்த ஜெட்டில், டிவின் ரோல்ஸ் ராய்ஸ் BR710 டர்போஃபேன் என்ஜின்கள் உள்ளன. மேலும், இதில் மிலிட்டரி கிரேட் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளேவும் உள்ளது.

கௌதம் சிங்கானியா, Bombardier Challenger 600
கௌதம் சிங்கானியா, Bombardier Challenger 600 Twitter

கௌதம் சிங்கானியா

விமானம்: Bombardier Challenger 600

விலை மதிப்பு: $21 மில்லியன்

இந்திய கோடீஸ்வரரும் ஜவுளித் தொழிலதிபருமான கவுதம் சிங்கானியா உலகின் மிகப்பெரிய சூட் ஃபேப்ரிக் பிராண்டான ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். 10,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள சிங்கானியா, நீல வானமாக இருந்தாலும் சரி, கடல் மட்டமாக இருந்தாலும் சரி, ஆடம்பரமான வாழ்க்கை முறைக்குப் பெயர் பெற்றவர்.

சிங்கானியா, ரேமண்ட் குழுமத்தின் விமானப் பிரிவுடன், சர்வதேச உள்துறை வடிவமைப்பாளரான எரிக் ரோத் வடிவமைத்த அழகிய பாம்பார்டியர் சேலஞ்சர் 600 வணிக ஜெட் விமானத்தை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆடார் பூனாவல்லா
, Airbus A320
ஆடார் பூனாவல்லா , Airbus A320Twitter

ஆடார் பூனாவல்லா

விமானம்: Airbus A320

விலை மதிப்பு: $1 மில்லியன் (தோராயமாக)

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆடார் பூனாவல்லா. இவர்தான் கோவிஷீல்ட் தயாரிப்புக்கான பின்னணியில் இருப்பவர். ஏர்பஸ் ஏ320-ஐ சொந்தமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவரது நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, பூனாவல்லாஸ் அவர்கள் ‘பூனவல்லா ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட்’ என்ற பட்டய விமான சேவையை வைத்திருக்கிறார்.

ஏ320யில், ஃப்ளை-பை-வயர் தொழில்நுட்பம், சைட்-ஸ்டிக் கட்டுப்பாடுகள், காக்பிட் போன்ற எல்லாம் உள்ளது. 1987-இல் அதன் முதல் விமானம் முதல், A320 குடும்பம் சார்ந்த விமானங்கள் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்களுக்குக் குறுகிய தூரமும் நடுத்தரத் தூரமும் வேலை செய்கின்ற குதிரையாகவே மாறியுள்ளது.

Flight
Twitter CEO பராக் முதல் ISRO சிவன் வரை; IIT -ல் படித்து உச்சத்தை எட்டிய 10 பேர்
Gulfstream IV
Gulfstream IVTwitter

குஷால் பால் சிங்

விமானம்: Gulfstream IV

விலை மதிப்பு: $32.5 மில்லியன்

குஷால் பால் சிங் ஒரு இந்திய பில்லியனர். ரியல் எஸ்டேட் டெவலப்பர், டிஎல்எஃப் லிமிடெட்டின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். இந்தியாவின் மிகச் சிறிய நகரத்திலிருந்து அவர் வந்தாலும், கேபி சிங் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பராமரித்து வருகிறார். தொழிலதிபரான குஷால், தனியார் ஜெட் Gulfstream IV-ஐ வைத்திருக்கிறார். இது உலகின் மிக ஆடம்பரமான தனியார் ஜெட் விமானங்களில் ஒன்றாகும். தனியார் ஜெட் ட்வின் ரோல்ஸ் ராய்ஸ் டே 611-8 இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. 13,850-பவுண்டு ஃபோர்ஸ் கொண்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக 45,000 அடி உயரத்துக்குச் செல்ல முடியும்.

Flight
ரஷ்யா எரிபொருள் : திணறும் உலக நாடுகள் - இதுதான் உண்மையான களநிலவரம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com