கண்களில் சிக்கிய 23 கான்டாக்ட் லென்ஸ்; அகற்றிய மருத்துவர் - என்ன நடந்தது?

லென்ஸ் பயன்படுத்துபவர்கள், கண்கள், கைகள் இரண்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். கண்களில் தூசுபட்டால் லென்ஸ் கிழிய வாய்ப்பிருக்கிறது.
Contact Lens
Contact LensCanva

கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொண்டே உறங்கியதால், கண்களில் சிக்கிய 23 லென்ஸ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

பார்வைக் குறைப்பாட்டை சமன் செய்ய முக கண்ணாடிகள் அணிவது வழக்கம். இதற்கும் மாற்று முறையாக வந்தது தான் கான்டாக்ட் லென்ஸ்கள். நம் கண்களின் பவருக்கு ஏற்ற வகையில் கண்ணாடியை போல இவையும் வடிவமைத்துக் கொடுக்கப்படும்.

லென்ஸ் அணிந்தாலும், முகம் கழுவும்போது இவற்றை கழற்றி விடவேண்டும். லென்ஸ்கள் மிக மெல்லிசானவை. காற்று பலமாக அடித்தால் கூட பறக்கும் அளவு லேசாக இருக்கும். இதனை மிகக் கவனமாக கையாளவேண்டும்.

லென்ஸ் பயன்படுத்துபவர்கள், கண்கள், கைகள் இரண்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். கண்களில் தூசுபட்டால் லென்ஸ் கிழிய வாய்ப்பிருக்கிறது. கண் எரிச்சல் ஏற்படக் கூடும். மேலும் கண்கள், மற்றும் லென்ஸ் இரண்டும் ஈரப்பதத்தோடு இருக்கவேண்டியது மிக முக்கியம்.

Contact Lens
பிறப்புறுப்பில் சிக்கிய USB கேபிள்- அதிர்ச்சியில் மருத்துவர்கள் - என்ன நடந்தது?

இவற்றுடன் முக்கிய கண்டிஷன், இரவில் உறங்கும்போது லென்ஸை கழற்றி வைத்துவிடவேண்டும். இவை அப்படியே கண்களில் இருந்தால் பிரச்னைகள் வரும். ஆனால் இங்கு ஒரு பெண் இரவில் தூங்கும்போது லென்ஸ்களை அகற்றாமல் இருந்துள்ளார். தினமும் இவ்வாறு செய்யவே, இவரது கண்களில் அவை சிக்கியுள்ளன. மருத்துவரை அந்த பெண் அணுகியுள்ளார்.

மருத்துவர் பரிசோதித்ததில் கண்களுக்கு உள்ளேயும், மேற்புறத்திலும் அந்த லென்ஸ்கள் சிக்கியுள்ளது தெரியவந்தது. காதுகளை சுத்தம் செய்யும் பட்ஸை வைத்து மருத்துவர் அந்த லென்ஸ்களை அகற்றினார்.

இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 23 லென்ஸ்கள் அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இது குறித்து கேட்டபோது, அவர் இரவில் உறங்கும்போது லென்ஸை கழற்ற மறந்துவிட்டதாக தெரிவித்தார்.

அந்த பெண் அணுகிய மருத்துவர் அவரது கண்ணில் இருந்து லென்ஸை அகற்றுவதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். மேலும் இவ்வாறு லென்ஸை அணிந்துகொண்டு உறங்காதீர்கள் என்றும் எச்சரித்திருந்தார்.

Contact Lens
Depression காரணமாக நாயணயங்களை சாப்பிட்ட நபர் : அதிர்ந்த மருத்துவர்கள் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com