Google Doodle : ஒரு தொலைநோக்கியும் எக்கச்சக்க பிரபஞ்சங்களும் - டூடுல் எதைக் குறிக்கிறது?

டூடுலில் இருக்கும் இளம் கத்தரிப்பு நிற கருவியும் மஞ்சள் தகடும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைக் குறிக்கிறது. Google வார்த்தையில் இடம்பெறும் O என்ற எழுத்துக்கு பதிலாக இடம் பெற்றிருக்கும் புகைப்படம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படமாகும்.
Doodle
DoodleGoogle
Published on

தினசரி தனது முகப்பு பக்கத்தின் மூலமாக புதிய விஷயங்களை அறிமுகம் செய்யும் கூகுள் இன்று வைத்திருக்கும் டூடுல் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

நேற்றைய தினம் உலகம் மொத்தமும் பேச்சுப் பொருளாக இருந்தது அந்த விஷயம் தான். மனிதனின் அறிவியல் கண்கள் எவ்வளவு பெரியவை எனக் காட்டும் ஒரு புகைப்படம் பற்றிய டூடுல் தான் அது.

டூடுலில் இருக்கும் இளம் கத்தரிப்பு நிற கருவியும் மஞ்சள் தகடும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைக் குறிக்கிறது. Google வார்த்தையில் இடம்பெறும் O என்ற எழுத்துக்கு பதிலாக இடம் பெற்றிருக்கும் புகைப்படம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த முதல் புகைப்படமாகும்.

ஒரே நாளில் டூடுலில் இடம் பெறும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது அந்த படத்தில் எனக் கேட்கிறீர்களா? இந்த புகைப்படம் தான் இது வரை எடுக்கப்பட்டதிலேயே பிரபஞ்சத்தின் மிகப் பழைய புகைப்படமாம். இப்போது வந்திருக்கும் புகைப்படம் 4.8 பில்லியன் ஆண்டுகள் பழைய கேலக்ஸியின் புகைப்படங்கள்.

இனி வரும் நாட்களில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, 13 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கேலக்ஸிகளைப் படமெடுத்து நமக்குக் காட்டப்போகிறது. சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும். அதாவது 8 நிமிடங்களுக்கு முந்தைய சூரியனைத்தான் அந்தச் சமயத்தில் பார்த்துக்கொண்டிருப்போம். அதே போலத்தான் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தை இந்தத் தொலைநோக்கியின் மூலம் பார்க்கப்போகிறோம்.

இந்த கேலக்ஸியின் ஆரம்பமான பிக் பாங் வரைக் கூட நம்மை இது கூட்டிச் செல்லும் என விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

இந்த புகைப்படத்தில் பல கேலக்ஸிகள் இருக்கின்றன. அதிலிருக்கும் ஒன்றைப் போல சாதாரண கேலக்ஸி (அண்டம்) தான் நாம் இருக்கும் பால்வெளி அண்டம். பால்வெளியில் இருக்கும் பல்லாயிரம் நட்சத்திரங்களில் ஒன்றைப் போல சாதாரண நட்சத்திரம் நம் சூரியன்.

இந்த சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்களில் ஒன்றான பூமியில் வசிக்கும் சாதாரண உயிரினம் தான் மனிதன். எனினும் இந்த மனிதன் தான் இப்போது இந்த கேலக்ஸியின் தொடக்கத்தை தொலைநோக்கிக் கொண்டு படமெடுத்திருப்பது. இது மொத்த மனித இனமும் பெருமைக் கொள்ள வேண்டிய தருணம் என இணையத்தில் இந்த புகைப்படங்களை கொண்டாடி வருகின்றனர்.

இது தவிர இன்னும் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த இன்னும் சில புகைப்படங்களையும் நாசா வெளியிட்டிருக்கிறது

Doodle
நாசா: பிரபஞ்சத்தின் ஆழமான புகைப்படத்தை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com