"திமிங்கலங்கள் தான் எனக்கு துணை" - ஒரு கை, ஒரு கால் இல்லாமல் தனியாக உலகை சுற்றிவந்த நபர்

2008ம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் தனது இடது கையையும், காலையும் இழந்தார் டஸ்டின் ரெனால்ட்ஸ். தனது குறைகளைத் தூக்கியெறிந்து, பிரச்னைகளை மறந்து சாதிக்க முடிவு செய்தார். 7 ஆண்டுகளில் 36 நாடுகளைக் கடந்து பயணம் செய்து உலக சாதனை படைத்தார்
டஸ்டின் ரெனால்ட்ஸ்.
டஸ்டின் ரெனால்ட்ஸ்.Twitter
Published on

பயணங்கள் யாருக்குத்தான் பிடிக்காது? நம் எல்லாருக்கும் காடு, மலை, கடல்களைக் கடந்து கண்டங்களைத் தாண்டி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் நாம் ஊட்டி, கொடைக்கானல் போவதற்குள்ளேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது. பயணங்களைத் தள்ளிப் போட பல்லாயிரம் காரணங்கள் கிடைக்கலாம். ஆனால் உலகம் முழுவதும், சுற்றிப் பயணிப்பவர்களுக்கு சாகசத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்கிற ஒரு காரணம் தான். இதை உறக்க சொல்லும் விதமாக உலகம் முழுவதும் பயணித்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த டஸ்டின் ரெனால்ட்ஸ் என்கிற நபர்.

டஸ்டின் ரெனால்ட்ஸ்
டஸ்டின் ரெனால்ட்ஸ் Twitter

ஹவாய் பகுதியில் வசித்து வந்த அவர், ஒரு விபத்தில் தனது இடது கையையும் காலையும் இழந்தார். அதிகமாக கடல் பயணம் சென்ற அனுபவம் இல்லாத அவர், 7 ஆண்டுகள் கடல் பயணம் செய்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வீடு திரும்பினார். அவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஒரு சாலையில் தனது மோட்டர் சைக்கிளில் செல்லும் போது எதிர்பக்கம் குடித்துவிட்டு வந்த ஒருவர் மோதியதில் ரெனால்ட்ஸின் நுறையீரல் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டத்து. அத்துடன் காலில் எலும்பு முறிந்தது. ஒரு கையையும் அவர் இழக்க நேர்ந்தது. இந்த விபத்து அவரது வாழ்க்கையை மொத்தமாக புறட்டிப் போட்டது.

டஸ்டின் ரெனால்ட்ஸ்
டஸ்டின் ரெனால்ட்ஸ் Twitter

பொருளாதார ரீதியிலும் ரெனால்ட்ஸுக்கு அது மிகப் பெரிய அடியாக இருந்தது. அடுத்த நான்கு ஆண்டுகள் அவருக்கு மிகவும் நெருக்கடி நிறைந்ததாக இருந்திருக்கிறது. தரைவிரிப்புகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்த அவர் ஒரு மீன்பிடி படகையும் வைத்திருந்தார். இதில் அவர் சம்பாதித்ததை வைத்து தான் தனது கடன்களை அடைக்க முடிவு செய்தார்.

டஸ்டின் ரெனால்ட்ஸ்.
பெர்முடா முக்கோணம் : காணாமல் போய்விட்டால் பணம் - மர்ம பகுதிக்கு திக் திக் பயணம்

ரெனால்ட்ஸ் கடல் பயணங்களில் அதிக அனுபவம் இல்லாதவர். ஆனால் அவருக்கு கடல் பயணத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. சில நாட்களாக கடல் பயண சாதனைகளை மேற்கொண்டவர்களைப் பற்றி தெரிந்துகொண்டார். அவரைப் போல இரட்டை ஊனம் கொண்ட யாரும் இது வரை தனியாக கடல் பயணம் மேற்கொண்டதில்லை எனக் கண்டறிந்தார்.

தனது குறைகளைத் தூக்கியெறிந்து, பிரச்னைகளை மறந்து சாதிக்க முடிவு செய்தார். அவரிடம் இருந்த மீன்பிடி படகை விற்று கடல் பயணத்துக்கு ஏற்ற சிறிய படகு ஒன்றை வாங்கினார்.

டஸ்டின் ரெனால்ட்ஸ்
டஸ்டின் ரெனால்ட்ஸ் Twitter

"நான் என் கையை இழந்தேன், கால்களை இழந்தேன், பணத்தை இழந்தேன்... இந்த இழப்புகள் என்னை ஒரு மாபெரும் சாகசத்துக்கு அழைத்துச் சென்றது" என்கிறார் அவர்.

ஒரு வருடத்துக்கு புத்தகங்களைப் படித்தும், யூடியூபிலும் கடல் பயணம் குறித்த பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார். அவர் தனக்கு பொருத்தப்பட்ட செயற்கை காலால் நடக்கவும் நீந்தவும் கற்றுக் கொண்டார். ஒரு கையுடன் தன் வேலைகளை சமாளிக்க கற்றுக்கொண்டார்.

ஜூன் 18, 2014ல் அவரது சாகசப் பயணம் தொடங்கியது. தனது ஊரில் இருந்து தனியாக பயணத்தைத் தொடங்கியவருக்கு கடலில் பல சவால்கள் காத்திருந்தது.

டஸ்டின் ரெனால்ட்ஸ்.
ஹனிமூன் போறீங்களா? இந்த ஐந்து கடற்கரையை டிரை பண்ணுங்களேன்! | Travel
டஸ்டின் ரெனால்ட்ஸ்
டஸ்டின் ரெனால்ட்ஸ் Twitter

அவர் சென்ற படகு மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இதனால் அவர் தன் இடது கைக்கு பதிலாக பல நேரங்களில் பல்லை பயன்படித்தியிருக்கிறார்.

"ஒரு கையில் வேலை செய்வதில் பல சவால்கள் இருந்தன. அதுவும் எல்லாவற்றையும் தனியாக செய்வது கொஞ்சம் சலிப்பானதாக இருக்கும்" எனக் கூறியவர், "என்னுடைய மிகப் பெரிய பயமே கப்பல் கவிழுந்து விட்டால் எனக்காக திரும்பி வர யாருமில்லை என்பது தான்" எனவும் கூறியிருக்கிறார்.

டஸ்டின் ரெனால்ட்ஸ்.
அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு

ஐந்து ஆண்டு பயணமாக திட்டமிடப்பட்ட இது 7 ஆண்டுகளாக மாறியதற்கு கோவிடுக்கு நன்றி சொல்லும் அவர் மொத்தமாக 36 நாடுகளைத் தாண்டி பயணம் செய்துள்ளாராம்

"திமிங்கலங்கள், கடற்பறவைகள் மற்றும் டால்பின்கள் எப்போதும் எனக்கு துணை வந்தன" என தன் பயணத்தை நினைவுகூர்ந்தார் அவர்.

தந்து குடும்பத்துக்கு அவ்வப்போது மெசேஜ் மட்டும் அனுப்பியபடி மிகிழ்ச்சியான கடல் பயணத்தை மேற்கொண்ட அந்த மாலுமி தற்போது உலக சாதனையாளராக இருக்கிறார்.

கடல் பயணம் மிகவும் ஆபத்தானது. ஆனால் ரெனால்ட்ஸோ, "நகர நெரிசலில் பயணம் செய்வதை விட, கடல் பயணம் பாதுக்காப்பானது என்கிறார் அவர்.

டஸ்டின் ரெனால்ட்ஸ்.
வெளிநாட்டுக்கு Bike Ride செல்ல என்ன செய்ய வேண்டும்? எங்கே அனுமதி பெற வேண்டும்? | Hangout

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com