ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!

ஆமைகள் உலகின் பழமையான உயிரினங்களில் ஒன்று. ஆமைகளின் மூதாதையர் டைனோசர் காலத்தில் இருந்து பல பேரழிவுகளில் தப்பி இந்த பூமியில் வசித்து வருகின்றன.
ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!Twitter
Published on

ஆமைகள் மிகவும் வயதான தோற்றத்தைக் கொண்டிருக்கும். எதாவது ஆபத்து வந்தால் தனது ஓட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும்.

மிகவும் மெதுவாக இயங்கும். பெரும்பாலும் கிழங்கு, தண்டு, இலைகளை உண்ணும். வெகு சில கடலாமைகள் மாமிச உண்ணிகளாகவும் இருக்கின்றன.

நிலத்திலும் நீரிலும் வாழும் திறனைப் பெற்றிருக்கும். நிலத்திலும் நன்னீரிலும் வாழும் ஆமைகளை tortoises எனவும் கடல் நீரிலும் கடற்கரையிலும் வாழும் ஆமைகளை Turtle எனவும் அழைப்போம் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை நாம் அனைவருமே அறிவோம்.

ஆனால் ஆமைகள் இந்த உலகில் இருக்கும் அதிசயமான உயிரினங்களில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆமைகள் மிகவும் பழமையானவை

டைனோசர் காலத்தில் வாழ்ந்த சில உயிரினங்கள் தான் இப்போதும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

பெரும் அழிவுகளில் இருந்த தப்பிப்பிழைத்த அந்த சில உயிரினங்களில் ஆமையும் ஒன்று.

ஆமைகள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த உலகில் வாழ்கின்றன. இது பாம்புகள், பல்லிகள், பறவைகளை விட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

ஆமைகள் நீண்ட நாட்கள் உயிர்வாழக் கூடியது

ஆமைகள் 100 ஆண்டுக்கும் மேலாக உயிர் வாழக் கூடியது என்பது உங்களுக்குத் தெரியும்.

ஐரோப்பிய குடும்பங்கள் ஆமைகளை செல்லபிராணிகளாக வளர்ப்பர்.

அப்படி வளர்க்கப்படும் செல்லபிராணிகள் பாட்டி முதல் பேத்தி வரை தலைமுறைகள் கடந்து அந்த வீட்டின் உறுப்பினராக இருக்கும்.

1835ல் சார்லஸ் டார்வின் தனது ஆய்வுக்கு பயன்படுத்திய ஹாரியட் ஆமை கடந்த 2006ம் ஆண்டு தான் மறைந்தது. இதற்கு 176 வயது இருக்கும் என கணித்துள்ளனர்.

ஆமைகள் எல்லா நிலத்திலும் வாழும்

உலகில் அண்டார்டிகாவை விட அனைத்து கண்டஙளிலும் ஆமைகள் வாழுகின்றன.

தமிழில் கூறப்படும் ஐந்திணைகளிலும் ஆமைகள் வசிக்கின்றன.

ஆமை ஓடுகளின் மர்மம்

ஆமைக்கு கடினமான ஓடுகள் எங்கிருந்து வருகின்றன?

எப்படி அது உருவானது என்ற குழப்பம் பலருக்கும் இருந்திருக்கும்.

ஆமை ஓடுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 60 எலும்புகளால் ஆனது.

ஆமைகள் தனிமை விரும்பிகள்

ஒரு குழுவாக ஆமைகள் செல்வதனை ஆங்கிலத்தில் Creep என அழைக்கின்றனர்.

பெரும்பாலும் ஆமைகள் தனியாக தான் இருக்க விரும்புகின்றன.

தனக்குத் தானே உதவி என வாழ்ந்துகொள்கின்றன.

ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
தலை இல்லாமலும் கரப்பான் பூச்சி உயிர் வாழுமா? நம்மை வியக்க வைக்கும் 5 அறிவியல் உண்மைகள்

ஆமைகள் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் இருக்கும்

ஆமைகள் தங்கள் ஓட்டுக்குள் செல்வதற்கு முன் நன்றாக மூச்சை விட்டு நுரையீரலை காலி செய்துகொள்ளும்.

ஏதாவது அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுக்குள் புகுவதற்கு முன்னர் நன்றாக மூச்சு விடுவதைக் கவனிக்கலாம்.

பின்னர் ஆக்ஸிஜனுக்காக வெளியில் வர நீண்ட நேரம் ஆகும்.

ஆணா? பெண்ணா?

மற்ற விலங்குகளை போல எளிதாக ஆமைகளின் பாலினத்தைக் கண்டுபிடிக்க முடியாது.

அவை குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியப் பின்னரே ஆணா பெண்ணா எனத் தெரியவரும்.

பொதுவாக அதன் ஓட்டு முடிவு பெண் ஆமையை விட ஆண் ஆமைக்கு வளைவாக அமைந்திருக்கும்.

ஆண் ஆமை பெரிதாக வாலுடனும், நீளமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதனை குறிப்பிட்ட வளர்ச்சியைக் கொண்டு அறிய முடியாது.

ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

முகரும் தொண்டை

பல ஊர்வன இனங்களைப் போலவே ஆமைகளும் தொண்டை வழியாக முகர்ந்து மணங்களை அறிகின்றன.

ஆமை : தனிமை விரும்பிகள், பழமையானவை - ஆமைகள் பற்றிய 8 ஆச்சரிய உண்மைகள்!
30 ஆண்டுக்கு முன் தொலைந்த ஆமை உயிருடன் கண்டுபிடிப்பு! உரிமையாளர் நெகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com