30 ஆண்டுக்கு முன் தொலைந்த ஆமை உயிருடன் கண்டுபிடிப்பு! உரிமையாளர் நெகிழ்ச்சி

சிறு வயதில் நாம் தொலைத்த செல்லப்பிராணி மீண்டும் கிடைத்தால் அந்த ஆனந்தத்தை வெளிகாட்ட வார்த்தைகள் குறைவே. அப்படித்தான் பிரேஸிலில் ஒரு பெண்ணுக்கு அவரது வளர்ப்பு ஆமை 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்திருக்கிறது.
ஆமை
ஆமைCanva
Published on

ஒரு வளர்ப்பு பிராணியின் மீது நாம் செலுத்தும் அன்பு எதிர்பார்ப்புகளற்று நிறைவானது. நமக்கு எப்போதும் உற்ற துணையாக நமது செல்லப்பிராணிகள் இருக்கும். சிறுவயதில் வளர்த்த ஒரு செல்லப்பிராணியைப் பிரிந்த சம்பவம் நம் எல்லோருக்கும் நடந்திருருக்கும். ஒரு வேளை அது மீண்டும் கிடைத்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? அப்படித்தான் பிரேசிலைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது வளர்ப்பு ஆமை 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்திருக்கிறது.

மனுவேலா என்ற அந்த ஆமை ரியோ டீ ஜெனீரோ நகரத்தைச் சேர்ந்தது. 1982ம் ஆண்டு லெனிடா என்ற பெண், 8 வயதாக இருந்த போது அந்த ஆமையைச் செல்லப்பிராணியாக வளர்த்து வந்திருக்கிறார். அந்த ஆமை அவரது அம்மா நதல்யே அல்மெய்தாவினுடையது. அம்மா லெனிடாவுக்கு ஆமை குறித்த பல கதைகளைச் சொல்லி வந்திருக்கிறார்.

பரணிலிருந்த ஆமை
பரணிலிருந்த ஆமைTwitter

ஆமையுடன் லெனிடாவின் அழகான குழந்தைப் பருவம் கழிந்து வர ஓர் நாளில் மனுவேலா காணாமல் போனது. வீடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட ஊரெங்கும் தேடி ஓய்ந்தனர் அல்மெய்தா குடும்பத்தினர். ஆனால் ஆமை கிடைக்கவில்லை. அன்று வீட்டில் வேலை செய்ய வந்தவர்கள் கதவைத் திறந்து போட்டுவிட்டுப் போனதால் ஆமை தொலைந்திருக்கலாம் என அவர்கள் நினைத்துள்ளனர். அதன் பின் பல காலம் கழிந்தது. லெனிடாவின் வாழ்வு பல திசைகளுக்குப் பயணித்தது.

ஆமை
மீன்பிடிக்கச் சென்ற நபரின் தொண்டைக்குள் சிக்கிய மீன் - மருத்துவர்கள் அதிர்ச்சி

கடந்த 2013ம் ஆண்டுலெனிடாவின் தந்தை லியோனல் இறந்து விட தன் குழந்தைப் பருவத்தில் தந்தையுடன் வாழ்ந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறார் லெனிடா. அங்கு அவரது உடைமைகளைத் தேடுவதற்காக வீட்டின் பரணுக்குச் சென்றவர் அதிர்ந்திருக்கிறார். அவர் நினைத்துக் கூட பார்க்காத ஒன்றை அங்குக் கண்டார்.

ஆமை
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய இந்த ஐந்து ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

அடைக்கப்பட்ட பரணுக்குள் 30 ஆண்டுகளாக உயிருடன் இருந்து வந்திருக்கிறது அவரின் ஆமை. “நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். மனுவேலாவை நாங்கள் கண்டுபிடிக்கும் போது என் அம்மா அழுதுவிட்டார், அவரால் அதனை நம்பமுடியவில்லை” என ஒரு செய்தி தளத்தில் கூறியிருக்கிறார் லெனிடா.

குடும்பத்துடன் ஆமை
குடும்பத்துடன் ஆமைTwitter

மனுவேலா ஆமை அதன் குடும்பத்துடன் இணைந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழிந்துவிட்டது. சமீபத்தில் மெடிக்கல் செக்அப் செய்ததில் ஆமை ஒரு ஆண் எனக் கண்டுபிடித்துள்ளனர். “மனுவேலாவை இனி என்னுடனே வைத்திருப்பேன்; அதன் மீது நான் அதிக ஈர்ப்புடன் இருக்கிறேன்” எனக் கூறினார்.

மனுவேலா ஆமை இந்த 30 ஆண்டுகளும் மரத்தால் ஆன பரணிலிருக்கும் கறையான்கள் மற்றும் சிறிய பூச்சிகளை உண்டு உயிர்வாழ்ந்து வந்துள்ளதாக கூறுகின்றனர். பொதுவாக 155 ஆண்டு வரை வாழும் ஆமைகள் லெனிடாவின் குழந்தைகளுக்கும் கூட இனி செல்ல்ப்பிராணியாக இருக்கும்.

ஆமை
ஹாபிட் : மனித குல மூதாதையர்கள் இன்னும் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com