அமேசான் : காடுகளுக்கு அடியில் புதைந்த நகரம் - வியக்க வைக்கும் உண்மைகள்

நேச்சர் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலின் படி, அவர்களின் ஆய்வின் முடிவில் நகர்ப்புற மையங்கள், ஏராளமான புறநகர் குடியிருப்புகள் மற்றும் நீர் தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய கோட்டையை கண்டடைந்திருக்கிறார்கள்.
அமேசான் : காடுகளுக்கு அடியில் புதைந்த நகரம்
அமேசான் : காடுகளுக்கு அடியில் புதைந்த நகரம் Pexels
Published on

அமேசானில் மறைந்திருக்கும் பண்டைய நகரங்கள் குறித்த புனைவுகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களை வதைக்கும் ஒரு விசயமாகும். எல் டொராடோ என்ற தங்க நகரத்தை ஸ்பானியர்கள் நம்பி வந்தனர். பிரிட்டிஷ் ஆய்வாளர் பெர்சி ஃபாசெட் தனது உயிரைப் பணயம் வைத்து லாஸ்ட் சிட்டி ஆஃப் இசட் (Lost City of Z) கண்டுபிடிக்க முயற்சி செய்தார். இவற்றின் தொடர்ச்சியாக நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பொலிவியாவில் நீண்ட காலத்திற்கு முன்பு புதைந்து போன பண்டைய நகரங்களின் இடிபாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

Amazon Rainforest
Amazon RainforestTwitter

ஸ்மித்சோனியன் இதழ் தெரிவித்துள்ளதன் படி, பொலிவியன் விஞ்ஞானிகள் அமேசானில் உள்ள லானோஸ் டி மோஜோஸ் என்னுமிடத்தில் ஒரு பரந்த வளாகத்தை கண்டுபிடித்துள்ளனர். 600 ஆண்டுகளுக்கு முந்தைய, கைவிடப்பட்ட உயர்த்தப்பட்ட தரைப்பாதைகள் மற்றும் பிரமிட் கட்டமைப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். C.E 500 முதல் 1400 வரை ஊடுருவ முடியாத பகுதியில் செழித்து வளர்ந்த காசராபே மக்களுக்கு சொந்தமான நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் அமேசானின் நிலத்திற்கடியில் புதைந்தவற்றைத் தேடுவதற்கு லிடார் எனப்படும் நவீன ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். நேச்சர் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலின் படி, அவர்களின் ஆய்வின் முடிவில் நகர்ப்புற மையங்கள், ஏராளமான புறநகர் குடியிருப்புகள் மற்றும் நீர் தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய கோட்டையை கண்டடைந்திருக்கிறார்கள்.

Amazon Rainforest
Amazon RainforestTwitter

புளோரிடா பல்கலைக்கழக மானுடவியலாளரான மைக்கேல் ஹெக்கன்பெர்கர் கூறுகையில், "முழுமையாக நகரமயமாக்கப்பட்ட அமேசானிய நிலப்பரப்பின் தெளிவான தடயம் இதுவாகும். "இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாகும். கடந்த காலத்தில் மனிதர்கள் தங்கள் நிலப்பரப்பில் செய்த அற்புதமான வேலைகளுக்கும், மிகப்பெரிய மக்கள் தொகையுடன் கூடி வாழ்ந்ததற்கும் அற்புதமான சான்றுகளாக இவை கிடைத்திருக்கிறது” என்றார்.

தி கார்டியனின் கூற்றுப்படி, பண்டைய நகர வடிவமைப்பானது நூற்றுக்கணக்கான சதுர மைல்களைக் கொண்டிருந்திருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கிய ஆராய்ச்சியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிலப்பரப்பின் ஒரு குறிப்பிட்ட மேடுகளைக் கண்டறிந்தனர். அன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் முடிவில், இப்பகுதி ஒரு காலத்தில் காசராபே மக்களின் வசிப்பிடமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் மேலும் பல அரிய தகவல்கள் நமக்குக் கிடைக்க, இன்னும் அதிநவீன தொழில்நுட்பம் மட்டுமே இருந்தால் மட்டுமே முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அமேசான் : காடுகளுக்கு அடியில் புதைந்த நகரம்
பூமியின் உட்பகுதியில் ஆச்சரியங்களை அள்ளி தெளிக்கும் சுரங்கம் - விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹெய்கோ ப்ரூமர்ஸ் 2019 இல் ஹெலிகாப்டரில் இருந்து லிடார் மூலம் இப்பகுதியை வரைபடமாக்கத் தொடங்கினார். இதன் விளைவாக மேற்பரப்பு தாவரங்களின் ஸ்கேன்களை டிஜிட்டல் முறையில் காடுகளை அழித்த பிறகு, அவர் கீழே உள்ள கட்டமைப்புகளை பகுப்பாய்வு செய்ய முடிந்தது. 70 அடி உயர பிரமிடுகள் மற்றும் தளங்களும், மற்றும் கால்வாய்கள் 600 மைல்களுக்கு ஓடுவதை அதிர்ச்சியூட்டும் படங்கள் காட்டியிருக்கின்றன.

லிடார் ஒரு விமானத்திலிருந்து அகச்சிவப்பு கதிர்களைப் பாய்ச்சுகிறது. அந்த கற்றைகள் ஒரு மேற்பரப்பைத் தாக்கிய பிறகு மீண்டும் திரும்புகின்றன. திரும்பும் கதிர்கள் தூரத்தின் சரியான அளவை வழங்குகிறது. நான்கு முதல் 32 சதுர மைல்கள் வரையிலான ஆறு வெவ்வேறு பகுதிகளை வரைபடமாக்கினர். மேற்பரப்பிலிருந்த தாவரங்களை அகற்றிய பிறகு, 26 தளங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில் 11 முன்பு அறியப்படாதவை.

Amazon Rainforest
Amazon RainforestTwitter

"இது முழுக்க முழுக்க அமேசானிய நகர்ப்புறம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கான குறியீட்டு புதைபடிவத்தைப் போன்றது" என்று ஹெக்கன்பெர்கர் கூறினார். "இந்த நகர்ப்புற சமூகங்கள் தோன்றியதற்கும், அவை வீழ்ச்சியடைந்ததற்கும் என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், அவை உச்சக்கட்ட வளர்ச்சியடைந்த சமூகமாக இருந்திருக்கின்றன." என்றும் அவர் கூறினார்.

நகர்ப்புற வடிவமைப்புகள், புறநகர் வடிவமைப்புகள், பிரமிடுகளின் சீரமைப்பு மற்றும் குடியிருப்புகளின் கட்டமைப்பு ஆகியவை அண்டவியலில் வேரூன்றிய ஒரு பண்டைய உலகக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

”இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர்கள் அமேசான் காடுகளின் புவியியல் தன்மைகளுக்கேற்ப அந்த குடியிருப்பை உருவாக்கி இருப்பது தான்” என்று கொலராடோ மாநில பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிறிஸ் ஃபிஷர் கூறினார்.

Laser Image of Lost City
Laser Image of Lost CityTwitter

அமேசான் பெரிய அளவிலான மற்றும் நிரந்தர குடியேற்றங்களுக்கு முற்றிலும் பொருத்தமற்றது என்ற தங்கள் நீண்டகால நம்பிக்கைகளை வரலாற்றாசிரியர்கள் இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தொல்பொருள் ஆய்வாளர் உம்பெர்டோ லோம்பார்டோ, ”இந்த விவாதம் இப்போது இறுதியாக தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூறி இருக்கிறார்”. மேலும் இந்த பழங்காலத்தவர்கள் உண்மையிலேயே எவ்வளவு திறமையானவர்கள் என்பதுதான் வியக்க வைக்கிற கேள்வியாக நம் முன் இருக்கிறது?!

அமேசான் : காடுகளுக்கு அடியில் புதைந்த நகரம்
சீனா : அறிவியலாளர்கள் வியக்கும் 630 அடிக்கு கீழ் ஒரு அற்புத உலகம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com