மனைவியுடன் விவாகரத்து; மகள்களை வளர்க்கும் உரிமைக்காக போராட்டம் - பெண்ணாக மாறிய தந்தை!

ஈக்குவேடார் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் ஒரு பெண் என ஆவணங்களின் மாற்றிக்கொண்டவர், இப்போது தானும் ஒரு 'தாய்' தான், என் மகள்களை அன்புடனும் அரவணைப்புடனும் என்னால் வளர்க்க முடியுன் எனக் கூறி வருகிறார்.
மனைவியுடன் விவாகரத்து; மகள்களை வளர்க்கும் உரிமைக்காக போராட்டம் - பெண்ணாக மாறிய தந்தை!
மனைவியுடன் விவாகரத்து; மகள்களை வளர்க்கும் உரிமைக்காக போராட்டம் - பெண்ணாக மாறிய தந்தை!Twitter
Published on

மனைவியுடன் விவாகரத்து பெற்ற நபர் தனது மகள்களை வளர்க்கும் உரிமையைப் பெருவதற்காக தான் ஒரு பெண் என சட்டப்பூர்வமாக தன்னுடைய பாலினத்தை மாற்றியுள்ளார்.

"ஒரு தாய் தனது மகள்களுக்கு எந்த மாதிரியான அன்பையும் பாதுகாப்பையும் அளிப்பாரோ அதே போல அன்பையும் பாதுகாப்பையும் நான் அவர்களுக்கு வழங்குவேன்" என கூறியுள்ளார் 47 வயதான ரெனே சலினாஸ் ரமோஸ்.

சான்றிதழ்களில் பெண்ணாக இருந்தாலும் தனது அன்றாட வாழ்க்கையில் அவர் சாதாரண ஆணின் வழக்கத்தை தான் பின்பற்றி வருகிறார்.

ஈக்குவேடார் சட்ட விதிகளின் படி ஆண்களை விட பெண்களுக்கே குழந்தைகளை வளர்க்கும் உரிமை கொடுக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகளில் இதே நடைமுறை இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராமோஸ், தனது மகள்கள் அவர்களின் தாயுடன் மோசமான சூழலில் வளர்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

"என்னுடைய பாலினம் குறித்து நான் சரியான புரிதலுடன் இருக்கிறேன். நான் இப்போது ஒரு தாயாக இருக்கவே விரும்புகிறேன். ஒரு தாயின் அன்பையும் பாதுகாப்பையும் அளிக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார் ராமோஸ்.

ராமோஸ் செய்துள்ள இந்தகாரியம் நாடுமுழுவதும் உள்ள திருநங்கைகளின் கண்டனத்தைப் பெற்றது. எல்.ஜி.பி.டி.க்யூ அமைப்புகள் அவரது நடவடிக்கை இயற்கையை மீறிய செயல் எனக் கூறியுள்ளனர்.

மனைவியுடன் விவாகரத்து; மகள்களை வளர்க்கும் உரிமைக்காக போராட்டம் - பெண்ணாக மாறிய தந்தை!
குப்தா சகோதரர்கள் : உத்தர பிரதேசம் டூ தென் ஆப்ரிக்கா - உலகை மிரள வைத்த சகோ-களின் கதை

உலக அளவில் திருநங்கைகள் மற்றும் இதர பாலினங்களைச் சேர்ந்தவர்களுக்கான உரிமைகளை அளிப்பதில் ஈக்குவேடார் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டு அங்கு அமைக்கப்பட்ட சட்டவிதிகளின் படி திருநங்கையாக அல்லது திருநம்பியாக இருக்கும் ஒருவர் எந்த வித அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளாமல் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

ராமோஸ் பாலினத்தை மாற்றிக்கொண்டாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மனைவியுடன் விவாகரத்து; மகள்களை வளர்க்கும் உரிமைக்காக போராட்டம் - பெண்ணாக மாறிய தந்தை!
Qatar: Football ஸ்டேடியத்தில் LGBTQ ஆதரவு பத்திரிகையாளர் மரணம்- கத்தார் மீது குற்றச்சாட்டு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com