உலகின் விலை உயர்ந்த தலையணை - என்னென்ன சிறப்புகள்? என்ன விலை தெரியுமா?

இது நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் அதிக விலை கொண்ட இது தான் அதிக வசதியானது என்று கூறப்படுகிறது. இது மாதிரியான ஒரு தலையணையை உருவாக்கும் முயற்சி கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறதாம்.
தலையணை
தலையணைTwitter
Published on

ஆடம்பர வாழ்வின் மீது மனிதர்கள் அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும். ஆனால் அதனை அனுபவிப்பவர்கள் வெகுசிலரே. ஆடம்பர வாழ்வு சொகுசுகள் நிறைந்தது, அடிப்படையான தொல்லைகள் அற்றது, அடுத்தவேளை வாழ்க்கைக்கான சிந்தனை இல்லாதது. நம் கற்பனைக்கு எட்டும் ஆடம்பர வாழ்வில் நாம் யோசிப்பது விலையுயர்ந்த கார், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகள், பிராண்டட் பொருட்கள், நீச்சல்குளம் கொண்ட வீடு போன்றவற்றை தான். என்றாவது விலை உயர்ந்த தலையணையில் உறங்குவது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா?

நல்ல தூக்கத்துக்கு மெத்தை அவசியம். அதுவும் பஞ்சு போன்று இருக்க வேண்டும். வெயில் காலத்தில் குளுகுளுப்பாக ஏசி, நல்ல போர்வை என பார்த்து பார்த்து வாங்கும் நாம் தலையணைகளுக்கு சிரத்தை எடுக்காமல் இருப்பவர்களுக்கு இந்த தலையணையின் விலை கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும்.

இதன் விலை 57000 டாலர்கள். இந்திய மதிப்பில் ஒரு காரின் விலை. 45 லட்சம் ரூபாய். இந்த விலைக்கு தலையணையா? என ஷாக் ஆகாமல் முழுவதும் கேளுங்கள்.

Sleep
SleepNewsSense

இது நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் அதிக விலை கொண்ட இது தான் அதிக வசதியானது என்று கூறப்படுகிறது. இது மாதிரியான ஒரு தலையணையை உருவாக்கும் முயற்சி கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறதாம். பல கட்ட சோதனைகளைக் கடந்து தான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தலையணை
வெனிசுலா நாட்டில் ஆணுறை பாக்கெட்டின் விலை ரூ 60,000 - இது உண்மையா?

அப்படி இந்த தலையணயில் என்ன தான் சிறப்பு என்பது தானே அடுத்த கேள்வி? இதன் உள்ளிருக்கும் பஞ்சு ரோபோ மிஷின்களால் உருவாக்கப்பட்டதாம். தங்கம், வைரம், நீலக்கல் இதில் பதிக்கப்பட்டிருக்கிறாதாம். தலையணையின் பக்கவாட்டில் இருக்கும் ஜிப்பில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கிறது.

தலையணை
ஒரு கப் காபியின் விலை 4000 ரூபாய் - அப்படி என்ன அதில் சிறப்பு? - பாகம் 2

இந்த தலையணை தூக்கம் வராமல் கஷ்ட்டப்படும் insomnia வந்தவர்களுக்கு உதவுமாம். ஆனால் 45 லட்சத்துக்கு தலையணையை வாங்கினால் நம்மால் பீரோவில் தான் பூட்டி வைக்க முடியும் இல்லையா?

தலையணை
ஒரு லட்ச ரூபாய் குடையை இணையத்தில் கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com