தென் கொரியா : ஓராண்டுக் காலம் இளமையாகும் - சாத்தியமானது எப்படி?

கொரிய முறையில் வயது கணக்கிடும் முறையைத் தென் கொரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் யுன் சுக் யோல் (Yoon Suk-yeol) நீக்கினால் இந்த அதிசயம் நடக்கலாம்.
மூப்பு
மூப்புTwitter
Published on

எப்போதுமே இளமையாக இருக்க விருப்பமா? என்கிற கேள்விக்கு ஆம் என்பதே பொது பதிலாகக் கிடைக்கும்.

ஆனால் உயிரினங்கள் அனைத்தும், பிறந்து, வளர்ந்து மூப்பில் மறிப்பதுதான் இயற்கையின் நியதி. இன்று 30 வயதாக இருக்கும் ஒருவருக்கு, அடுத்த ஆண்டு அவர் பிறந்த நாளை கடக்கும் போது 31 வயதாகிவிடும். உடல் சோர்வின் மூலமும், நோய்களின் மூலமும் வயதாவது அடிக்கடி சுட்டிக்காட்டும்.

இப்படி வயது நம்மை ஒரு பக்கம் படுத்திக் கொண்டிருக்கும் போது, தென் கொரியாவில் உள்ள மக்கள் மட்டும் ஓராண்டுக் காலம் இளமையாகப் போகிறார்கள்.

அப்படி இளமையாகப் போகிறவர்கள், தோற்றத்திலோ அல்லது உடல் ரீதியிலோ இளமையாகப் போவதில்லை. மாறாகக் காகிதத்தில் ஓராண்டுக் காலம் இளமையாகப் போகிறார்கள்.

கொரிய முறையில் வயது கணக்கிடும் முறையைத் தென் கொரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் யுன் சுக் யோல் (Yoon Suk-yeol) நீக்கினால் இந்த அதிசயம் நடக்கலாம்.

Yoon Suk-yeol
Yoon Suk-yeolTwitter

தென் கொரியாவைப் பொருத்த வரை ஒரு குழந்தை பிறந்த உடனேயே ஒரு வயதாகிவிட்டதாகக் கணக்கில் எடுத்துக் கொள்வர். புத்தாண்டு பிறந்த உடனேயே அவருக்கு இரண்டு வயதானதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

புரியவில்லையா...?

உதாரணத்துக்கு, டிசம்பர் 2020-ல் ஒரு குழந்தை பிறந்த உடன், அவருக்கு ஒரு வயது ஆகிவிட்டதாகக் கணக்கில் எடுத்துக் கொள்வர். அடுத்த நான்கு வாரக் காலத்தில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டின் போது, அதே குழந்தைக்கு இரண்டு வயது ஆகிவிட்டதாகக் கணக்கில் எடுத்துக் கொள்வர்.

அதிபர் யுன் சுக் யோலின் நெருங்கிய ஆலோசகர் மற்றும் அந்நாட்டின் அரசியல், நீதி, நிர்வாகம் போன்ற பல முக்கிய கமிட்டிகளின் தலைவர் லீ யோங் ஹோ சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, தென் கொரியாவில் வயதைக் கணக்கிடும் முறையை ஒரே நிலையானதாகக் கொண்டு வருவது குறித்து பேசினார். மேலும் சில எதார்த்த காரணங்களுக்காக இந்த மாற்றங்களைக் கொண்டு வர விரும்புவதாகவும் கூறியதாக அந்நாட்டின் யோன்ஹப் என்கிற ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மூப்பு
ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையான கொரில்லா - மீட்கப்பட்டது இப்படித்தான்

நாம் முன்பே கூறியது போலப் பிறந்த உடன் ஒரு வயது ஆனதாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது போக, சர்வதேச அளவில் வயதைக் கணக்கிடப் பயன்படுத்தும் முறையையும் தென் கொரியவர்கள் பின்பற்றுகின்றனர். அது போக ஒரு குழந்தை பிறந்த உடன் அக்குழந்தைக்கு 0 வயதானதாகவும், புத்தாண்டின் போது ஒரு வயது ஆனதாகவும் கணக்கிடும் வழக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்படி சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல வயது முறையைக் கடைப்பிடிப்பதால், சமூக நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியில் பல குழப்பங்கள் எழுவதாக லீ யோங் கூறியுள்ளார்.

இந்தக் குழப்பத்தை எல்லாம் களைந்து, தென் கொரியா முழுமைக்கும் ஒரே வயது முறையைக் கணக்கிடத் தொடங்கினால், காகித அளவில் தென் கொரிய மக்கள் ஓராண்டுக் காலம் இளமையாவர்.

மூப்பு
வட கொரியா: தொகுப்பாளருக்கு கிம் ஜாங் உன் பரிசளித்த மாளிகை - யார் இந்த 79 வயது ரி சுன் ஹி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com