இலங்கையை சுற்றிப்பார்க்க நினைப்பவர்கள் முதலில் செல்லும் இடம் கொழும்புவாக தான் இருக்கும். ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் இலங்கை திரும்பும் திசையெல்லாம் ரம்மியமான காட்சிகளை வழங்கும்.
இயற்கையழகின் எடுத்துக்காட்டுகளான மலைகளும், மரங்களும், நீர்வீழ்ச்சிகளும் இல்லாவிட்டால் நம்மால் கண்ணுக்கு இனிமையான புத்த கோவில்களைப் பார்க்க முடியும்.
புத்த கோவில்கள் ஸ்ரீலங்காவின் சிறப்பு என்றே கூறலாம். எக்கச்சக்க விகாரங்கள், வண்ணமயமான அலங்காரங்கள், அமைதி… ஆசையே வேண்டாம் என சொன்ன புத்தரின் கோவிலுக்கு உள்ளேயே இருந்துவிடலாமா என உங்களுக்கு ஆசை பிறப்பது நிச்சயம்.
கொழும்புவில் நாம் மிஸ் செய்யக் கூடாத முக்கியமான ஒரு இடம் புத்த அருங்காட்சியகம். வியட்நாம், நேபாளம், தாய்லாந்து என பல நாடுகளில் இருந்து பரிசாக அளிக்கப்பட்ட புத்த சிலைகளைப் பார்க்கலாம்.
தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய கோபுரமான லோட்டஸ் டவர் இங்கே இருக்கிறது. மொத்த கொழும்பு நகரமும் எறும்பு புத்துபோல சிறியதாக தெரிவதைப் பார்க்கலாம். மற்றொரு பக்கம் பரந்து விரிந்த கடற்கரையைப் பார்க்கலாம்.
இந்தியாவில் இருப்பதுபோல கொழும்புவில் மாது கங்கா என்ற நதி இருக்கிறது. இதில் மொத்தம் 64 தீவுகள் இருக்கின்றன. மாது கங்கா நதிக்கு இடையில் ஆங்காங்கே கடைகள் இருப்பதையும் நாம் பார்க்கலாம்.
ஸ்ரீலங்கா தான் உலகிலேயே மிகப் பெரிய இலவங்கப்பட்டை உற்பத்தியாளர் என்பது நமக்குத் தெரியும். மாது கங்காவில் உள்ள இலங்கப்பட்டை தோட்டத்துக்கு சென்று அங்கயே ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் லவங்க டீ சாப்பிடலாம். லவங்க எண்ணெய், சோப்பு, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களும், வாங்கி வரலாம்… இந்த பயணத்தை வீடியோவாக பார்த்து மகிழுங்கள்…
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust