சென்னை : OMR-க்கு அருகில் சில் பண்ண சிலுசிலு அருவி - ஒரு டாப் டக்கர் வீக் எண்ட் ஸ்பாட்!

பெரிய மலை அருவியில் குளிக்கும் அனுபவத்தைப் பெற முடியாது என்றாலும், செயற்கையான அருவிகளை விட இது சிறப்பானதாக இருக்கும். நகரத்தின் நெரிசலைக் கடந்து இது மாதிரியான இயற்கையான இடங்களுக்கு வந்து செல்வது நம் மனதுக்கும் இதமானதாக இருக்கும்.
சென்னை : OMR-க்கு அருகில் சில் பண்ண சிலுசிலு அருவி - ஒரு டாப் டக்கர் வீக் எண்ட் ஸ்பாட்!
சென்னை : OMR-க்கு அருகில் சில் பண்ண சிலுசிலு அருவி - ஒரு டாப் டக்கர் வீக் எண்ட் ஸ்பாட்!Twitter
Published on

நம் சென்னைவாசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வியே எப்படி ஒவ்வொரு வார இறுதியையும் கழிப்பது என்பதுதான்.

அதே பூங்காக்கள், தியேட்டர்களுக்கு வந்து சலித்துவிட்ட குழந்தைகளுக்கு நாம் புதிதாக எதையாவது காட்ட வேண்டும் என நினைக்கிறோம். இந்த வாரம் ஒரு அருவிக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.

சென்னையில் அருவியா என்று வியக்கிறீர்கள் தானே? சென்னையில் ஆறு, ஏரிகள் இருப்பது போல ஒரு சின்ன அருவியும் இருக்கிறது.

கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் தான் இந்த அருவி உள்ளது. இங்குள்ள ஏரி நிரம்பி வழியும் போது அது ஒரு குட்டி அருவியாக கொட்டுகிறது.

பருவமழைக் நன்றாக பெய்துவிட்ட காலங்களில் அருவியும் அதனைச் சுற்றியிருக்கும் காடும் செழிப்பாக இருக்கும்.

ஏரி நிரம்பி வழியும் அருவி என்பதனால் 8 அடி உயரம் தான் இருக்கும். பெண்களும் குழந்தைகளும் பயமின்றி குளிக்கலாம்.

பெரிய மலை அருவியில் குளிக்கும் அனுபவத்தைப் பெற முடியாது என்றாலும், செயற்கையான அருவிகளை விட இது சிறப்பானதாக இருக்கும்.

நகரத்தின் நெரிசலைக் கடந்து இது மாதிரியான இயற்கையான இடங்களுக்கு வந்து செல்வது நம் மனதுக்கும் இதமானதாக இருக்கும்.

சென்னை : OMR-க்கு அருகில் சில் பண்ண சிலுசிலு அருவி - ஒரு டாப் டக்கர் வீக் எண்ட் ஸ்பாட்!
Travel: புலிகட் ஏரி டு தலகோனா நீர்வீழ்ச்சி - சென்னையை சுற்றியுள்ள 5 வீக்-எண்ட் ஸ்பாட்ஸ்!

சிறிய பட்ஜெட்டில் நல்ல அனுபவத்தைப் பெற முடியும். இதற்கு அதிக நேரமும் செலவாகாது. காலையில் சென்றால் குளித்துவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிடலாம்.

இந்த ஏரியையும் காண படிகட்டுகள் போடப்பட்ட இடங்கள் உள்ளன. பாசிபடிந்த பாறைகளை மட்டும் நாம் தவிர்க்க வேண்டும்.

சென்னை : OMR-க்கு அருகில் சில் பண்ண சிலுசிலு அருவி - ஒரு டாப் டக்கர் வீக் எண்ட் ஸ்பாட்!
சென்னை - பெங்களூரு : 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் 5 மலைப்பகுதிகள்

தையூர் ஏரிக்கு செல்வது எப்படி?

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள கேளம்பாக்கத்துக்கு பேருந்தில் வந்துவிடலாம். அங்கிருந்து ஆட்டோ பிடித்தால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் தையூர் வந்துவிடும்.

ஊரின் நடுவே கோவில் உள்ளது. அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏரியும் அருவியும் உள்ளது. இருசக்கர வாகனத்தில் சிறிய ரைடாக வந்துசெல்லலாம்.

சென்னை : OMR-க்கு அருகில் சில் பண்ண சிலுசிலு அருவி - ஒரு டாப் டக்கர் வீக் எண்ட் ஸ்பாட்!
சென்னை : பழத்தோட்டம் , நெற்பயிர்கள் சூழ்ந்த 13 ஏக்கர் நிலம் - மெட்ராஸில் இப்படி ஒரு இடமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com