பள்ளிப் பருவத்தின் கோடைக்காலத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கோடைக் காலம் என்றாலே விடுமுறைதான். அந்த நாட்களை நம் பாட்டி வீட்டில் கொண்டாடிய நினைவுகள் மறந்துவிடக்கூடியவையா என்ன? வகை வகையான சாப்பாடு அனைத்திலும் பாட்டியின் கை வண்ணம் மிளிரும்.
அப்படி, நம் பாட்டி வீட்டை ஞாபகப்படுத்தும் பண்ணை வீடுதான் `பிக்கோ ஃபார்ம் ஹவுஸ்'. ஈரம் நிறைந்த மண், காய்கறிகள், மிதமான வெப்பம், துணைக்கு அழைக்கும் தென்றல் காற்று, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என மனதைக் கட்டியிழுக்கிறது இந்த ஃபார்ம் ஹவுஸ். தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிக்கோ ஹவுஸ், நம் பாரம்பரியத்தின் ரம்மியத்தோடு இருக்கிறது.
8 தலைமுறையாக அம்மாள் குடும்பம் ரெட்டனை பகுதியில் வசித்து வந்தனர். அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலம், தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்பட்டு வந்திருக்கிறது.அப்படியாக நிலம் லட்சுமி அம்மாளிடம் வருகிறது. 86 வயதான லட்சுமி அம்மாள் தான் 71 வயதான கஸ்தூரி சிவராமன் அவர்களின் தாய்.
கஸ்தூரி ஏழாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை முன்னெடுத்து, திருமணத்திற்குப் பிறகு வீட்டை சீரமைக்கும் பணியையே முழு நேரமாக செய்கிறார்.
கஸ்தூரி அவர்களின் மகன் கிருபா சங்கர் அந்த நிலத்தில் விவசாயம் செய்யலாம் யோசனையைச் சொல்கிறார். " உண்மையில் ஒரு பண்ணை விவசாயத்தை நடத்துவதற்கு நிறைய முயற்சிகளும் , நேரமும், பணமும் தேவைப்பட்டது. அதையெல்லாம் தாண்டி அது ஒரு அன்றாட பழக்கமாக இருந்தது " என்று கூறினார்.
மேலும் " ஊரடங்கு காலத்தில் நகர்ப்புற மக்கள் விவசாயத்தின் மேல் ஆர்வம் காட்டியதை நாங்கள் கண்டோம். அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம். புது விதமாக ஒரு ஹோம் ஸ்டே தொடங்கும் எண்ணம் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான் இது " என்கிறார்.
சங்கர் அவர்களின் தாய் மற்றும் பாட்டி இந்த யோசனையைக் கேட்டு தாங்களே அதை எடுத்து நடத்தவும் முன் வந்தனர். " எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக எனது அம்மாவும் பாட்டியும் எப்போதும் இருப்பார்கள். அவர்களுக்கு நாலு சுவர்களுக்குள் தான் எப்போதும் வாய்ப்பு கிடைத்தது. புதிதாகவும் சுதந்திரமாகவும் எதையாவது செய்ய வேண்டும் என்ற தாகம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது " என்றும் சங்கர் கூறினார்.
கனவுகளை அடைவதற்கு வயது ஒரு தடையாகாது என்பதற்கு இருவரும் எடுத்துக்காட்டாய் அமைந்தனர். 2021 ஃபார்ம் ஹவுஸ் தொடங்கியதிலிருந்து இதுவரை 200க்கும் மேற்பட்ட விருந்தாளிகளை இருவரும் உபசரித்து இருக்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக அங்கு வருபவர்களுக்கு ஒரு கிராமத்து வாழ்க்கையைக் காட்டுகிறார்கள்.
சிறந்த கட்டிடக் கலை வல்லுநர்கள் யாரும் இந்த வீட்டை வடிவமைப்பதில் ஈடுபடவில்லையாம். பழத்தோட்டம் , நெற்பயிர்கள் சூழ்ந்த 13 ஏக்கர் நிலம் முழுவதுமாக லட்சுமி அம்மாள் குடும்ப மக்களால் வடிவமைக்கப்பட்டதாம். சங்கரும் அவரது தந்தையும் வீட்டை வடிவமைத்திருக்கிறார்கள், சங்கரின் சகோதரிகள் இருவர் வீட்டின் உட்புறத்தை வடிவமைத்தார்களாம். 400 சதுர அடி வீட்டின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் பிரமாண்டமான கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் காண்போரைக் கட்டி இழுக்கிறது.
படுக்கை அறை என்று தனியாக அமைக்கப்படவில்லை. வரவேற்பறையின் ஒரு புறம் படுக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்து வாசம் கொண்டாலும் வீட்டில் வாசிங் மெஷின், ஏசி, ஓவன் மற்றும் அதிவேக வைஃபை வசதிகள் எல்லாம் அமைந்திருக்கிறது.
ஊட்டச்சத்து நிறைந்த வீட்டு உணவுகளை சமைக்க இரண்டு பாட்டிகளும் அதிகாலை 4 மணிக்கு எழுத்திடுவார்களாம். செம்பருத்தி மற்றும் சங்கு பூவிலிருந்து எடுக்கும் ஜீஸ் அங்கு பேமஸ். உருண்டை குழம்பு, பூண்டு குழம்பு, மோர் குழம்பு, கம்பு கூட்டு , சாம்பார், ரசம், மோர் என மதிய உணவின் பட்டியல் அமைகிறது. பண்ணையில் இருந்து நீங்கள் அறுவடை செய்த காய்கறிகள் அடுத்த நாள் உங்கள் தட்டுக்கு வந்துவிடும்."உள்ளூர் கிராம வாழ்க்கையை மக்கள் அனுபவிக்கும் போது அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது" என்கிறார் லட்சுமி அம்மாள். "அது உடல் ரீதியாக கடினம் என்றாலும், மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும்போது நாங்கள் மீண்டும் நிரப்பப்படுகிறோம்." என்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust