

ஒரு வீட்டின் மதிப்பு அதன் அளவை மட்டுமல்லாமல் அது கிராமத்தில் இருக்கிறதா நகரத்தில் இருக்கிறதா? தண்ணீர் பிரச்னை இருக்கிறதா? என்னென்ன வசதிகள் இருக்கிறது? என பல காரணங்களைப் பொருத்து அமைகிறது.
எப்போதுமே மிகவும் தனித்துவமான பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படும். 100 வீடுகளில் ஒன்றின் விலையை விட, ஒரு இடத்தில் இருக்கும் ஒரே ஒரு வீடு தான் அதிக மதிப்பை பெற்றிருக்கும்.
இந்த ஓவியரின் அரிய ஓவியம், அரிய வைரம் பதித்த நகை, என பொருட்களின் தனித்தன்மை அதன் மதிப்பை உயர்த்தும். அப்படிதான் இந்த ஒரு பெட்ரூம் மட்டும் கொண்ட கழிவறை கூட இல்லாத வீடு 2 கோடி ரூபாய் மதிப்புக்கு விற்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்ன சிறப்பு?
அமெரிக்காவில் உள்ள மைன் மாகாணத்தில் முற்றிலும் தனியான தீவில் தான் இருக்கிறது அந்த வீடு. உலகிலேயே தனியான வீடு என்பது தான் அதற்கு இருக்கும் சிறப்பு.
நான்கு பக்கமும் கடல் சூழ மிகச் சிறியதாக ரம்மியமாக அமைந்திருக்கிறது இந்த வீடு. வொஹோ பே எனும் அந்த தீவு 1.5 ஏக்கர் அளவுடையது. இதன் நடுவே 540 சதுர அடியில் இந்த வீடு இருக்கிறது.
என்ன தான் அழகான வீடாக இருந்தாலும் இதில் கழிவறை இல்லை என்பது ஒரு மைனஸ் தான். ஆனால் வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஒரு கழிவறை உள்ளது.
நகர வாழ்வில் இருந்து கொஞ்சம் விடுபட்டு "எங்கயாவது தனியா போய் இருக்கலாம்பா" என நினைக்கும் தனிமை விரும்பிகளுக்கு வார இறுதியை கழிக்கும் இடமாக இந்த வீடு விடப்பட்டு வருகிறது.
இந்த தீவில் மரங்கள் இல்லை எனினும் அழகான இயற்கைக் காட்சிகளை இங்கு காணமுடியும். இந்த வீடு கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டதாம்.
அருகில் இருக்கும் கடற்கரையிலிருந்து இந்த மர வீட்டுக்கு படகு சவாரி மூலம் வர முடியும். நீங்கள் தனிமை விரும்பியானால் இந்த வீட்டை வாங்க முயற்சிக்கலாமே?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust