"தொலைந்து போன மோதிரம் மீண்டும் மீண்டும் திரும்பி வந்தது" - ஒரு விசித்திர கதை

ஒரு பொருள் நம்மை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் மீண்டும் நம்மிடமே வந்து சேரும் கதையை கேட்டிருக்கிறீர்களா? பல ஆண்டுகளாக பல மைல் தூரம் சென்ற மோதிரம் ஒருவரிடம் திரும்ப வந்திருக்கிறது.
Ring
RingPexels
Published on

தினமும் பல பொருட்களை வாங்கி குவிக்கும் நமக்கு அதில் ஏதேனும் ஒன்றின் மீது இருக்கமான பிணைப்பு இருக்கும். கைதி படத்தில் கார்த்தி அவர் மகளுக்கு வாங்கின தங்க கம்மல் போல. நாம் அதை எப்போதும் நம்முடனே வைத்திருப்போம். அது உடன் இல்லாவிட்டால் பெரிதாக எதையோ இழந்த வருத்தம் ஏற்படும். அந்த பொருளுக்காக நண்பர்களிடம் சண்டையிட்டிருப்போம்.

ஆனால் ஒரு பொருள் நம்மை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் மீண்டும் நம்மிடமே வந்து சேரும் கதையை கேட்டிருக்கிறீர்களா? பல ஆண்டுகளாக பல மைல் தூரம் சென்ற மோதிரம் ஒருவரிடம் திரும்ப வந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜென்னி ஃப்ரெக்லிங்டன்-ஜோன்ஸ் என்ற ட்விட்டர் பயனர் அவரது கதையை பகிர்ந்துள்ளார். "இது பெரிய பதிவு, கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தலாம்" என்ற டிஸ்கிளைமருடன் தொடங்கும் அவரது பதிவு தற்போது வைராகி வருகிறது. இந்த பதிவை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ரீட்விட் செய்துள்ளனர். 5000த்துக்கும் அதிமானோர் லைக் செய்துள்ளனர்.

"எனக்கு 14 வயது இருக்கும் போது ஒரு பையன் "ஃப்ரெண்ஷிப்" மோதிரத்தை பரிசலித்தான். அது 9 கேரட் தங்கம். தேய்பிறை நிலவு மற்றும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட அந்த மோதிரத்தை வாங்க அவனுக்கு ஒரு வார ஊதியம் செலவானது.

அந்த ஆணுடன் ஜென்னிக்கு ஒரு நாளில் சண்டை வர இருவரும் பிரிந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அந்த நபர் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராம். கோவத்தில் அந்த மேதிரத்தை சாலையில் இருந்த குதிரை பந்தலை நோக்கி வீசியிருக்கிறார். மினு மினுத்தபடி தங்க மோதிரம் அங்கு விழுந்ததை ஜென்னி பார்த்திருக்கிறார். அதன் பின் 20 ஆண்டுகளுக்கு அந்த மோதிரத்தை அவர் பார்க்கவில்லையாம்.

இடைப்பட்ட நாட்களில் ஜென்னி அந்த மோதிரத்தைக் குறித்து சிந்தித்திருக்க கூட மாட்டார் எனலாம். ஆனால் 20 ஆண்டுகள் கழித்து அந்த மோதிரம் மீண்டும் அவரிடம் வந்துள்ளது.

அந்த ஆணின் தங்கை அந்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். அவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது, "ஜென்னி இந்த மோதிரத்தை நியாபகம் இருக்கிறதா?" என அவர் கேட்டாராம்.

வீராப்பாக மோதிரத்தை வீசிய வேகப்பந்து வீச்சாளர், அடுத்த நாள் மோதிரம் கிடைக்கும் வரை தனது குடும்பத்தில் அனைவரையும் தேட வைத்து கண்டுபிடித்திருக்கிறார். அது மீண்டும் ஜென்னியிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

இதனால் இந்த மோதிரம் எங்கு சென்றாலும் தன்னிடம் திரும்பி வந்துவிடும் என ஜென்னி நம்பியிருக்கிறார்.

அதன் பிறகு பலமுறை ஜென்னி இந்த மோதிரத்தை வேறு நபர்களுக்கு கொடுத்திருக்கிறார். பணமாக கொடுத்தாலே திருப்பி வராத காலத்தில் ஜென்னியின் நண்பர்கள் இந்த மோதிரத்தை சரியாக திருப்பிக் கொடுத்திருப்பது ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது.

விமான பயணங்களின் போது அச்சப்படுபவர்களுக்கு ஜென்னி இதனைக் கொடுப்பாராம். இதனை பாதுகாப்பாக திருப்பிக் கொடுங்கள் என நம்பிக்கை கூறி அனுப்பி வைப்பாராம். ஒவ்வொரு முறையும் சரியாக இந்த மோதிரம் ஜென்னியிடம் திரும்ப வந்திருக்கிறது.

இதனை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் ஜென்னி.

Ring
துண்டுதுண்டாக வெட்டி கொல்லப்பட்ட பிரதமரும், அவரின் தங்கப் பல்-லும் - ஓர் ஆதிக்கத்தின் கதை

ஜென்னிக்கு ஒரு எழுத்தாளர் நண்பராக அறிமுகமாகியிருக்கிறார். ஜென்னியும் அவரும் சில வாரங்கள் ஒன்றாக இருந்துள்ளனர். அவரை ஜென்னி பாப் என அழைப்பாராம். ஒரு நாள் பிரிஸ்பேன் எனுமிடத்தில் இருந்து பெர்த் என்ற நகருக்கு பாப் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அப்போது அவர் தனக்கு விமானத்தில் செல்வது கொஞ்சம் பயம் எனக் கூற ஜென்னி அந்த மோதிரத்தை அவருக்கு அளித்துள்ளார்.

பாப் பெர்த் நகருக்கு சென்ற பின்னர் அவர்களின் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. அவர்கள் சராசரி நபர்களைப் போல மொபைலில் சேட் செய்து வந்துள்ளனர்.

பின்னர் ஒரு நாள் பாப் ஜென்னிக்கு கால் செய்து, "ஜென்னி நான் அந்த மோதிரத்தை திருப்பி அனுப்பிவிட்டேன். இனி அது தேவையில்லை" எனக் கூறியிருக்கிறார். ஜென்னியும் அவர் மோதிரத்துக்காக காத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

அதன் பிறகு ஒரு இரவில் ஜென்னி தனது அஞ்சல் பெட்டியை பார்த்த போது அதில் காலியான கவர் இருந்திருக்கிறது. அந்த கவரில் மோதிரத்தின் அரை நிலவு தடம் இருந்தது. ஆனால் மோதிரம் இல்லை.

அத்துடன் அந்த மோதிரம் தொலைந்து விட்டதாக ஜென்னி முடிவு செய்துவிட்டார்.

கவரில் இருந்த சிறிய துளை வழியாக மோதிரம் விழுந்திருப்பதை ஜென்னி கண்டறிந்திருக்கிறார். பாப் நல்ல கவரை பயன்படுத்தியிருக்கலாம் என அவரை சலித்துக்கொண்டுள்ளார்.

அஞ்சல் கவரை பார்த்துக்கொண்டிருந்த ஜென்னிக்கு ஆஸ்திரேலியா போஸ்டுக்கு கால் செய்து கேட்டால் என்ன? எனத் தோன்ற, அஞ்சலில் புகார் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சூழலில் அஞ்சல் அலுவலகத்தால் எதுவும் செய்ய முடியாது என்பது ஜென்னிக்கும் தெரியும் எனினும் அவர் கடைசி முயற்சியாக அதனைச் செய்தார். ஆன்லைனில் அவரின் தொலைந்து போன மோதிரம் குறித்து தகவல் கொடுத்துள்ளார்.

Ring
மாவீரன் அலெக்சாண்டர் : உலகை வெல்ல துடித்த போர்வீரன் கிரேக்க பேரரசனின் வியக்க வைக்கும் கதை

சில நாட்களில், "வணக்கம், ஜென்னி. நல்ல செய்தி: உங்கள் மோதிரம் கிடைத்தது! அது அடிலெய்டில் வரிசைப்படுத்தும் இயந்திரத்தின் அடிப்பகுதியில் இருந்தது!

"நான் மோதிரத்தை சரியாக பேக் செய்துவிட்டேன், அது உங்களிடம் திரும்பும் வழியில் உள்ளது!" என அவருக்கு பதில் வந்துள்ளது.

இரண்டு நாட்களுக்குள் ஜென்னிக்கு அவரது மோதிரம் திரும்ப கிடைத்து விட்டது. ஜென்னி ஆஸ்திரேலியா அஞ்சலில் வேலைப்பார்த்தவருக்கு தனது பதிவு வழியாக நன்றி சொன்னார்.

அத்துடன் மேலிருக்கும், 14 வயதில் அவர் அந்த மோதிரத்தை அணிந்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Ring
அமெரிக்கா டூ தாய்லாந்து : 500 ஆண்டு பழமையான புத்தர் தங்க கீரிடம் - தாயகம் திரும்பிய கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com