ஒத்த நம்பர் பிளேட்டின் விலை 180 கோடி ரூபாய் - ஏன் தெரியுமா?

கார் விலையை விட பல மடங்கு காசு கொடுத்து அதற்கு நம்பர் பிளேட் வாங்குகிறார்கள் என்றால் நம்புவீர்களா? இந்த நம்பர் பிளேட்களில் விலையை தெரிந்துகொண்ட பின் நிச்சயம் நம்புவீர்கள். உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட நம்பர் பிளேட்கள் இதோ...
MM
MMTwitterர்
Published on

ஒரு விலை உயர்ந்த காருக்கு பல கோடி ரூபாய் செலவழித்து வாங்கினார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்த நடிகர் இந்த பிராண்ட் காரை இத்தனை கோடி கொடுத்து வாங்கினார், இந்த பிரபலம் அந்த காருக்காக இத்தனை கோடி ரூபாய் வரி செலுத்தினார், அந்தப் பிரபலம் காருக்கான சொகுசு வரியை ஏன் செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்... எனப் பல செய்திகளை நாம் படித்திருப்போம்.

ஆனால் இங்கு சிலர் நம்பர் பிளேட்டுக்கே, ஒரு உலகின் தலை சிறந்த வாகனத்துக்கான பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள்.

'MM' - 188 கோடி ரூபாய்

மைக்கேல் மொடக்கி என்கிற பிரபல புகைப்படக்காரரைக் குறித்து இணையத்தில் படித்திருப்பீர்கள். தன்னுடைய பெயரின் குறியீடுகளான M M என்பதை பிரபல என் எஃப் டி சந்தையான ஓபன்சீயில் 5,288 எத்திரியம் கிரிப்டோவுக்கு விற்க இருப்பதாக கூறியுள்ளார். சுமாராக அதன் மதிப்பு 24.3 மில்லியன் அமெரிக்க டாலர். அதை இந்திய ரூபாயில் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் 188 கோடி ரூபாய். அவருடைய M M குறியீடு இந்த விலைக்கு விற்கப்பட்டால், உலக அளவில் அதிகம் விலை போன நம்பர் பிளேட் என்கிற பெருமையைத் தட்டிச் செல்லும்.

F1
F1Twitter

'F1' - 154 கோடி ரூபாய்

F1 என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பொருள், அது பயன்படுத்தப்படும் இடம்... ஆகியவற்றைப் பொறுத்து அது பிரபலமடையும். F1 என்றாலே அதிரடி, வேகம், சுறுசுறுப்பு போட்டி போன்ற பல குணநலன்களை பிரதிபலிக்கிறது. இந்த F1 என்கிற நம்பர் பிளேட்டை கடந்த 2008ஆம் ஆண்டு அப்சல் கான் என்கிற பிரிட்டனைச் சேர்ந்த ஆட்டோமோட்டிவ் வடிவமைப்பாளர் வாங்கினார். இதன் மதிப்பு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் கணக்கிட்டால் சுமார் 154 கோடி ரூபாய். அவருக்கு முன் எஸ்ஸெக்ஸ் கவுண்டி கவுன்சிலிடம் இந்த F1 நம்பர் பிளேட் இருந்தது. 30,000 பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பிலான வோல்வோ s60 வாகனத்தில் இந்த F1 நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டு வந்தது.

'NEW YORK' 154 கோடி ரூபாய்

1970களின் பிற்பகுதியில் (1977ஆம் ஆண்டு) ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மகன் நியூயார்க் என்கிற பிரத்தியேக நம்பர் பிளேட்டை வாங்குமாறு தன் தந்தையிடம் கூறுகிறேன். அவரும் அதை வாங்குகிறார். அதன்பிறகு பல்லாண்டு காலமாக நியூயார்க் என்கிற நம்பர் பிளேட் அக்குடும்பத்திடம் தான் இருந்தது. அக்குடும்பம் பல ஆண்டுகளுக்கு பல்வேறு வாகனங்களில் நியூயார்க் நம்பர் பிளேட்டை பொருத்தி வாகனம் ஓட்டி வந்தனர்.

சமீபத்தில் ஒரு வோல்வோ வி70 என்கிற வாகனத்தோடு இணைத்து இந்த 'NEW YORK' நம்பர் பிளேட் டூபான் என்கிற வலைதளத்தில் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனைக்கு வந்தது.

AA8
AA8Twitter

'D5' - 74 கோடி ரூபாய்

கடந்த 2014 ஆம் ஆண்டு பல்விந்தர் சாஹ்னி என்கிற அபு சதா சுமார் 1.6 மில்லியன் அமெரிக்க டாலரைச் செலுத்தி D5 என்கிற நம்பர் பிளேட்டை துபாய் அரசு ஏலத்தில் எடுத்தார். இவர் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் வாழும் மக்களுக்கு எந்தவித வருமான வரியும் கிடையாது. ஒருவேளை இதேபோல நம்மூரில் எடுத்திருந்தால் யாரு என்ன என வருமான வரித்துறையினர் தோண்டித் துருவத் தொடங்கி இருப்பர். தான் கொடுத்த பணம் நல்ல காரியங்களுக்கும் நகர மேம்பாட்டுக்கும் செலவழிக்கப்படும் என்று தான் நம்புவதாக அப்போது பல்விந்தர் சாஹ்னி கூறியது குறிப்பிடத்தக்கது.

'AA8' - 72 கோடி ரூபாய்

சமீபத்தில் துபாயில் நடந்த குறிப்பிடத்தக்க நம்பர் பிளேட் ஏலத்தில் AA8 என்கிற நம்பர் பிளேட் 9.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. உலகிலேயே ஒரு நம்பர் பிளேட்டுக்கு கொடுக்கப்பட்ட ஐந்தாவது மிகப்பெரிய தொகை என்றும் கொண்டாடப்படுகிறது. ஏலத்தில் கோரப்பட்ட பணம் முழுவதும் '1 பில்லியன் மீல்ஸ்' என்கிற நன்கொடை திட்டப் பிரசாரத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 50 நாடுகளைச் சேர்ந்த ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், அகதிகள், தங்கள் சொந்த இடத்தை விட்டு பல்வேறு காரணங்களால் வெளியேறிய மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

MM
இரும்பு மழை பெய்யும் அதிசய கிரகம் : மனிதர்கள் வாழ முடியுமா? அக்கோளின் வெப்பநிலை என்ன?
1
1Twitter

'1' - 73 கோடி ரூபாய்

கடந்த 2008ஆம் ஆண்டு சையது அப்துல் கஃபார் கௌரி (Saeed Abdul Ghaffar Khouri) என்பவர் '1' என்கிற நம்பர் பிளேட்டுக்கு 9.5 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் செலுத்தினார். இந்திய ரூபாயில் 73 கோடி ரூபாய். ஒற்றை இலக்க நம்பர் பிளேட்டுகளிலேயே அதிகம் ஏலம் கோரப்பட்ட தொகை இதுதான். ஒன்று - மிகச் சிறந்த எண் என்பதால் நான் அதை வாங்கினேன் என சையத் அப்துல் கஃபார் கௌரி அப்போது கூறினார்.

'09' - 51 கோடி ரூபாய்

பல்விந்தர் சாஹ்னி என்கிற அபு சதா நினைவிருக்கிறதா. அவர்தான் '09' என்கிற நம்பர் பிளேட்டை 6.7 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்தார். 2015 காலகட்டத்தில் நடந்தது இது.

தான் ஒரு எளிய மனிதன் என்றும் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு தானே ஏதாவது பரிசு கொடுத்துக் கொள்வதாகவும் பல்விந்தர் சாஹ்னி சி என் என் மணி பத்திரிகையிலும் கூறியதை இங்கு நினைவு கூரத்தக்கது.

MM
அண்டார்டிகா : இனி நான்கு மாதங்கள் சூரியன் உதிக்காது - ஏன் தெரியுமா?
2
2Twitter

'7' - முப்பது கோடி ரூபாய்

தன்னுடைய பெயர் போன்ற விவரங்களை வெளியிட விரும்பாத அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் '7' என்கிற எண் கொண்ட நம்பர் பிளேட்டை 3.9 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து 2016ஆம் ஆண்டு வாங்கினார். 7ம் அமீரகங்கள் இருப்பதால் 7 அதிர்ஷ்டமான எண் என வாங்கினாராம். அந்த நம்பர் பிளேட்டின் தற்போதைய மதிப்பு சுமாராக 30 கோடி ரூபாய்.

'2' - 20 கோடி ரூபாய்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அஹமத் அல் மர்சுகி, அபுதாபி 2 என்கிற நம்பர் பிளேட்டை 2.7 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார். அதன் இன்றைய மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய்.

MM
எலான் மஸ்க் முதல் அதானி வரை : இவர்களது முதல் பணி என்ன தெரியுமா? - ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:


Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com