உலகிலேயே மிகவும் வயதான நாய் இது தான்! - எத்தனை வயது தெரியுமா?

பொதுவாக ஒரு நாய் 8 முதல் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. 20 ஆண்டுகளுக்கு மேல் வாழும் நாய்கள் மிக மிக அரிது. அப்படி வாழக்கூடிய பெரும்பாலானவை சிறிய ரக நாய் இனங்களாக இருக்கின்றன.
உலகிலேயே மிகவும் வயதான நாய் இது தான்! - எத்தனை வயது தெரியுமா?
உலகிலேயே மிகவும் வயதான நாய் இது தான்! - எத்தனை வயது தெரியுமா?guinness
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த ஜினோ உல்ஃப் என்ற நாயை உலகிலேயே மிகவும் வயதான நாய் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கின்னஸ். 24, செப்டம்பர் 2000த்தில் பிறந்த ஜினோவுக்கு தற்போது 22 வயது ஆகிறது. பௌல்டர் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் உள்ள மனித நேய அமைப்பு ஒன்றிலிருந்து ஜினோவைத் தத்தெடுத்துள்ளார் அதன் உரிமையாளரான அலெக்ஸ் உல்ஃப்.

பொதுவாக ஒரு நாய் 8 முதல் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. 20 ஆண்டுகளுக்கு மேல் வாழும் நாய்கள் மிக மிக அரிது. அப்படி வாழக்கூடிய பெரும்பாலானவை சிறிய ரக நாய் இனங்களாக இருக்கின்றன.

"நான் ஜினோவை இத்தனை வருஷமா நல்லா பாத்துக்குறேன். அவன் இப்போவும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கான். அவனது வயச நினைச்சு பாக்கும் போது ரொம்ப பிரமிப்பா இருக்கும்." என நெகிழ்கிறார் உரிமையாளர் அலெக்ஸ்.

இப்போது கலிபொர்னியாவில் வசிக்கும் ஜெனோ கடந்த நவம்பர் 15ம் தேதி தான் தனது 22வது பிறந்த நாளைக் கொண்டாடியது. அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுவது சாலமன் மீன்களை வெளுத்துக்கட்டுவது மற்றும் அக்கம்பக்கத்தில் சுற்றித்திரிவது ஜினோவின் டெய்லி ரொட்டீன்.

உலகிலேயே மிகவும் வயதான நாய் இது தான்! - எத்தனை வயது தெரியுமா?
காட்டுக்குள் தொலைந்து போன உரிமையாளர்; மீட்க உதவிய வளர்ப்பு நாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

சரியான டயட்டும் சீரான பராமரிப்பும் தான் இத்தனை ஆண்டுகள் ஜினோ ஆரோக்கியமாக வளர்ந்ததற்கான ரகசியங்கள் என்கிறார் அலெக்ஸ்.

ஜினோவுக்கு முன்னதாக மிகவும் வயது முதிர்ந்த உயிருடன் இருக்கும் நாய் என்ற பட்டத்தை வைத்திருந்தது பெபல்ஸ் என்ற நாய். மார்ச் 2000ம் ஆண்டு பிறந்த இந்த நாய் அக்டோபர் 2022ல் இறந்தது.

உலகிலேயே மிகவும் வயதான நாய் இது தான்! - எத்தனை வயது தெரியுமா?
குண்டடி பட்டும் நாட்டிற்காக போராடிய நாய் - பயங்கரவாதிகளை வீழ்த்தியது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com