Twitter Blue Tick பெறுவதற்கு கட்டணம்! - ஸ்டீவ் ஜாப்ஸ் பாணியில் எலான் மஸ்க்! Twitter
பிசினஸ்

Twitter Blue Tick பெறுவதற்கு கட்டணம்- ஸ்டீவ் ஜாப்ஸ் பாணியில் செயல்படும் எலான் மஸ்க்!

Antony Ajay R

சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கிறது. ட்விட்டரில் வருமானத்தை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக வெரிஃபைடு அக்கவுண்ட்களுக்கான நீல டிக் பெற கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறினார். தொடக்கத்தில் இதற்கு 20 டாலர்கள் மாதக்கட்டணம் என செய்திகள் வந்தன.

அதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்புகளும் ஆதரவும் பெறுகியது. சிலர் 15 டாலர் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் கொடுக்கலாம் என்றனர்.

எலான் மஸ்கோ ட்விட்டரோ இது குறித்து வாய்த்திறக்காமல் இருந்தனர். புகழ் பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் ட்விட்டருக்கு தான் பணம் கட்டப் போவதில்லை என்று கூறியிருந்தார். அதற்கு எலான் மஸ்க் "ட்விட்டர் விளம்பர தாரர்களை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. 8 டாலர்? " என்று பதிலளித்தார்.

தனது ப்ளூடிக்குக்கு பணம் கேட்கும் செயலை நியாயப்படுத்தும் விதமாக எலான் மஸ்க் சில மீம்களை பதிவிட்டிருந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் வழியில் எலான் மஸ்க்

ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார். அவரின் வியாபார யுக்திகள் பலருக்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றன. அவரின் ஒரு வியாபார யுக்தியை எலான் மஸ்கும் பயன்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். '

ஸ்டீவ் ஐபேடை அறிமுகப்படுத்தும் போது அதன் விலை 999 டாலர்கள் என ஒரு வதந்தி பரவியது. இதனை அவரே பரப்பியதாகவும் கூறுகின்றனர்.

அவர் ஐபேடை அறிமுகம் செய்யும் போது அதன் விலை 999 டாலர்கள் என பின்னால் இருந்த ஸ்கிரீனில் பெரியதாக காண்பித்தார்.

பின்னர் இவ்வாறாக பேசப்படுகிறது என்று கூறி அதன் உண்மையான விலையை 499 டாலர்கள் எனக் கூறினார்.

அதிக விலைக் குறித்து வெளியாகும் வதந்திகளால் விற்கப்படும் பொருளின் மதிப்பு வாங்குபவர்கள் மனதில் போலியாக உயரும். அதன் பின்னர் அதன் உண்மையான விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் குறைவாக சரியானதாக தெரியும்.

எலான் மஸ்க் இலவசமாக இருந்த ப்ளூடிக்குக்கு பணம் வசூலிக்க இந்த ஸ்ட்ராடஜியை பயன்படுத்துகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?