Elon Musk Twitter
பிசினஸ்

Elon Musk : கோகோ கோலா வாங்கப் போகிறேன் - ட்விட்டரில் அதகளம் செய்யும் எலான்

Priyadharshini R

உலகின் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியின் டாலருக்கு எலான் மஸ்க் வாங்க ட்விட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வரப் போவதாகச் சமூகவலைத்தளங்களில் கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வந்தன.

ஆனால் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அடுத்தடுத்து ட்வீட்டுகளை cool ஆகப் பதிவு செய்து வருகிறார்.

ஒரு ட்வீட்டில் கொகைனை அடைத்து வைப்பதற்காக கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போகிறேன் என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.

முதலில் கருத்துச் சுதந்திரம் குறித்துப் பேசிய அவர், ட்விட்டர் சமூகவலைத்தளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் ஏற்கனவே மெக்டொனால்ட்சை வாங்குவது தொடர்பாக ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில் நான் இப்போது மெக்டொனால்ட்சை வாங்கி அங்கு உள்ள ஐஸ்கிரீம் இயந்திரங்களைச் சரிசெய்யப்போகிறேன் என்றார். பின்னர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அந்த பதிவைத் தனது ட்வீட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார்.

சிறிது நேரம் கழித்து நீக்கிய ட்வீட்டின் ஸ்கீரின் ஷார்ட்டை மீண்டும் பதிவிட்டு, கேளுங்கள்... என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.. சரியா’ எனப் பதிவிட்டுள்ளார்.

இவையெல்லாம் ஏன் செய்கிறார், என்ன நடக்க போகிறது என மற்ற போட்டி நிறுவனங்கள், இணைய வாசிகள், இளைஞர் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?