<div class="paragraphs"><p>Tata</p></div>

Tata

 

Facebook

பிசினஸ்

டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

Gnaneswaran S

டிசம்பர் 28, ரத்தன் டாடாவின் பிறந்தநாள். இன்று மாபெரும் நிறுவனமாக இருக்கும் டாடா குழுமம் ஒரு காலத்தில் ஒபியம் விற்றது தெரியுமா? டாடா நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு சொந்த வீட்டை விற்று பணத்தை திரட்டியது குறித்து படித்திருக்கிறீர்களா? ஒரு கட்டத்தில் அவர்கள் உருவாக்கிய வெளிநாட்டு நிறுவனத்திலேயே மாத சம்பளத்துக்கு டாடா வாரிசு வேலை பார்த்தது குறித்து யாரேனும் உங்களிடம் கூறியுள்ளார்களா? உள்நாட்டுப் போர் மற்றும் படையெடுப்புதான் டாடா சாம்ராஜ்ஜியம் தழைத்து வளரவும், நிதி நெருக்கடியிலிருந்து பிழைக்கவும் மிக முக்கிய காரணமாக அமைந்தது என்றால் நம்பவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்.

டாடா குழுமத்தின் கதை

150 ஆண்டுகளுக்கு மேல், இந்திய பொருளாதாரத்திலும், இந்திய தொழில்வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய டாடா குழுமத்தின் கதை, அதிகம் படிக்காத, பெரிய வியாபார முன் அனுபவமில்லாத, தன் தந்தையைப் போல் ஒரு பார்சி மத பூசாரி ஆக விரும்பாத நுசர்வான்ஜியிடமிருந்து தொடங்குகிறது.

குஜராத்திலுள்ள நவ்சாரி கிராமம்தான் டாடா குடும்பத்துக்கு உலகம். டாடா குடும்பத்திலிருந்து அக்கிராமத்தை விட்டு அதுவரை யாரும் வெளியேறி இருக்கவில்லை. முதல் முறையாக பொட்டி படுக்கையோடு தன் கிராமத்திலிருந்து பம்பாய்க்கு குடியேறி வியாபாரம் தொடங்க இருந்த நுசர்வான்ஜிக்கு அது ஒரு தடையாக இல்லை.

இன்று உப்பு முதல் உலோகம் வரை, பஜ்ஜி மாவு முதல் பேங்க்ஸ் மென்பொருள் வரை, காபி முதல் வளிமண்டல காற்றடுக்குகளில் பறக்கும் விமானம் வரை எல்லா வித வணிகத்திலும் உச்சியில் ஓர் இடத்தை நிச்சயம் பிடித்திருக்கும் பிரமாண்டமான டாடா குழுமம் 1868ஆம் ஆண்டில் வெறும் ஒரு பருத்தி வியாபாரமாக நுசர்வான்ஜியால் தொடங்கப்பட்டது. நுசர்வான்ஜியின் குடும்பம் பம்பாயில் வாழத் தொடங்கியது. மறுபக்கம் வியாபாரம் வளர்ந்தது

ஜாம்செட்ஜி டாடா

நுசர்வான்ஜியின் மகன்தான் ஜாம்செட்ஜி டாடா.

வணிகம், அறிவியல், கல்வி போன்ற பல விஷயங்களில் அவருக்கு இருந்த தொலை நோக்குப் பார்வை, அவரை டாடா குழுமத்தின் பிதாமகர் ஸ்தானத்தில் இன்றும் நிலை நிறுத்துகிறது. உதாரணமாக உலகின் முதல் நீர் ஆற்றல் மின்சாரத்திட்டம் அமெரிக்காவில் 1882ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் ஜாம்செட்ஜி இந்தியாவில் நீராற்றல் திட்டத்தைக் கொண்டு வர சில ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டியதாக 'The Tatas: How a Family Built a Business and a Nation'' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கிரிஷ் குபேர்.

நாட்டின் வளர்ச்சி

டாடா ஓர் அற்புத சாம்ராஜ்ஜியமாக உருவெடுக்கவும், லாபத்தையும், சாதகமான நிதிநிலை அறிக்கைகளையும் மட்டும் கருத்தில் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியிலும், தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை கொண்டு பல முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்திய நிறுவனமாக உருவெடுப்பதற்கு காரணமான பீஷ்மர் யார் என்று கேட்டால் அது ஜாம்செட்ஜி டாடா.

ஜாம்செட்ஜியின் மனைவி ஹீராபாய் தாபுவின் கண்ணத்தில் ஒரு பெரிய மச்சமிருந்தது. அது அவரை இன்னும் அழகாகக் காட்டியது ஒரு பக்கமென்றால், அவரது மாமனார் நுசர்வான்ஜி, அப்படிப்பட்ட பெண் குடும்பத்துக்குள் வருவது, குடும்பத்துக்கு அதிர்ஷ்டம் என்று கருதினார் என டாடா வரலாறு சுவாரசியப் பெட்டி செய்தி படிக்கிறது.

டாடா குழுமம்

20 வயதுக்குள் தன் கல்லூரி படிப்பை நிறைவு செய்து, தொராப்ஜிக்கு தகப்பனாகி இருந்த ஜாம்செட்ஜியை ஹாங்காங் அனுப்பினார் நுசர்வான்ஜி. அப்போது அப்பிரதேசம் பிரிட்டிஷ் அரசின் காலனியாக இருந்தது. ஹாங்காங்கில் பருத்தி மற்றும் ஒபியம் வணிகத்தில் ஈடுபட தீர்மானித்தார் ஜாம்செட்ஜி.

ஜாம்செட்ஜியின் நெருங்கிய குடும்ப உறவினர் தாதாபாய் டாடாவும் ஒபியத்தில் வியாபாரம் செய்து வந்தார். உள்ளூர் அரசு ஒபியத்துக்கு தடை விதித்த போது, அதை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட்டவர்களில் தாதாபாயின் மகன் ரத்தன்ஜி டாடாவும் ஒருவர் என்பது நினைகூரத்தக்கது. அந்த காலகட்டத்தில் சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் ஒபியம் விற்பது சட்ட விரோதமான ஒன்றாகக் கருதப்படவில்லை.

பருத்தி ஏற்றுமதி

விரைவில் டாடா குழுமம் பருத்தியை ஐரோப்பாவுக்கும், ஒபியத்தை சீனாவுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது, ஏலக்காய், டீ, தங்கம், ஜவுளி போன்ற பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்கத் தொடங்கியது.

சீனாவில் பலவீனமான ஆட்சியாளர்கள், இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுந்த 1857 சிப்பாய் கழகம் என டாடா வியாபாரம் செய்யும் நாடுகளில் எல்லாம் ஏதோ ஒருவித பதற்றம் நிலவிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் 1861 அமெரிக்க உள்நாட்டுப் போரினால் ஓர் அற்புத வாய்ப்பு திரண்டு வருவதை ஜாம்செட்ஜியின் உலகப் பொது அறிவு அவருக்கு உணர்த்தியது.

அமெரிக்க உள்நாட்டுப் போரில், அடிமைத்தனத்தை ஒழிப்பதில் உறுதியாக இருந்தார் ஆபிரகாம் லிங்கன். இது தெற்கு அமெரிக்காவின் பருத்தி வயல்களில் எதிரொலித்தன. ராப்பகலாக வேலை பார்த்த அடிமை மக்கள், போராட்டம் காரணமாக வேலை செய்யாததால், அசுரத்தனமாக விரிவடைந்து வந்த இங்கிலாந்து ஜவுளி ஆலைகள் மூலப் பொருட்களின்றி திண்டாடின.

கடன் கடன் கடன்

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு விலைக்கு பருத்தியை விற்று பெரிய லாபம் பார்த்தார் ஜாம்செட்ஜி. வியாபார வளர்ச்சியில் லண்டன் நகரத்திலேயே ஓர் அலுவலகத்தைத் திறந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் டாடாவின் இந்த நல்ல காலம் அதிக நாள் நீடிக்கவில்லை.

1865ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதால், பிரிட்டனில் மீண்டும் அமெரிக்காவின் பருத்தி அபரீவிதமாகக் கொட்டத் தொடங்கியது. அது டாடாவின் வியாபாரத்தின் முதுகெலும்பை முறித்தது.

டாடா நிறுவனம் எல்லா ஆர்டர்களையும் இழந்து, அவர்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் தங்களின் பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுத்தனர். எல்லோருடைய கடனை தான் அடைப்பதாகவும், ஆனால் தனக்கு கால அவகாசம் தேவை என்றும் கூறினார் ஜாம்செட்ஜி. அவரது நேர்மையை நம்பி கால அவகாசம் கொடுத்தனர். மேலும் ஜாம்செட்ஜி தொடங்கிய நிறுவனத்திலேயே மாதம் 20 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, மறுபக்கம் ஜவுளி வியாபாரம் குறித்த தன் புரிதலை அதிகரித்துக் கொண்டிருந்தார் ஜாம்செட்ஜி.

நுசர்வான்ஜி ஏழு மாடி வீடு கட்டி வாழ்வார் என அவர் பிறந்த போது ஒரு ஜோதிடர் கூறியதாகச் செய்திகள் உள்ளன. இந்த நெருக்கடி வந்த போது, உண்மையிலேயே அவர் ஏழு மாடி வைத்து கட்டிய வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டி வந்தது. இந்த சோதனை காலமும் டாடா குழுமத்துக்கு அதிக காலம் நீடிக்காமல், அபினிசியா சாம்ராஜ்ஜியத்தில் தவறான முடிவுகளால், டாடாவின் நிதி நெருக்கடிக்கு ஒரு வழி பிறந்தது.

Tata Groups

இதனால் படையெடுத்தே ஆக வேண்டிய சூழலுக்கு பிரிட்டன் தள்ளப்பட்டது. 16,000 பேரைக் கொண்ட ஒரு பிரமாண்ட படையை சர் ராபர்ட் நேபியர் தலைமை தாங்கினார். அப்படைகளுக்குத் தேவையான உணவு, போக்குவரத்து, இருப்பிடம் போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கும் பணி நுசர்வான்ஜிக்கு கிடைத்தது.

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததால் வியாபாரம், வீடு வாசல் என எல்லாவற்றையும் இழந்த டாடா, அபினிசியா சாம்ராஜ்ஜியத்தின் மீதான படையெடுப்புப் பணிகள் மூலம் அன்றே 40 லட்சம் ரூபாய் சம்பாதித்தார்.

மீண்டும் டாட்டா குழுமம் வெற்றிகரமாக தொழில் செய்யத் தொடங்கியது. இந்த முறை பருத்தி வியாபாரத்தோடு நிற்காமல், தன்னை ஒரு பருத்தி உற்பத்தியாளராக வளர்த்துக் கொள்ள விரும்பியது. ஆனால் விதி ஆலை நிலத்தை ஆழமாகத் தோண்டி இருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

இந்தியாவில் இருக்கும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவின் முதல் ‘இலக்கிய நகரமாகும்’ கோழிக்கோடு - இங்கு என்ன பார்க்கலாம்?

நாட்டின் தேசிய இனிப்பு ஜிலேபியா! இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரியுமா?

உலகில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் இதோ!

Kallakurichi: தொடரும் உயிரிழப்புகள்; கண்ணீரில் கள்ளக்குறிச்சி - என்ன நடக்கிறது?