Ratan Tata

 

Twitter

பிசினஸ்

டாடா குழுமம் வரலாறு : மோடியை வீழ்த்த துடித்த ரத்தன் டாடா பரபரப்பு அத்தியாயம் | பகுதி 21

ஜஹாங்கீர் டாடா, ரத்தன் டாடாவை தலைவராக நியமிக்கும் போது டாடா குழுமத்தில் மொத்தம் 84 நிறுவனங்கள் இருந்தன. அதில் 39 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்தன.

NewsSense Editorial Team

அப்போது டாடா குழுமத்தின் டெர்னோவர் சுமார் 24,000 கோடி ரூபாய். சுமார் 2.7 லட்சம் பேர் டாடா குழுமத்தில் பணியாற்றி வந்தனர்.

டாடா குழும நிறுவனங்களை மினி சாம்ராஜ்யம் போல ஆண்டு கொண்டிருக்கும் பல நிறுவன தலைவர்களை ஒருங்கிணைப்பது, நிறுவனத்துக்குள் இருக்கும் அதிகார மையங்களை நீக்குவது ரத்தன் டாடாவின் முதன்மைப் பணியாக இருந்தது.

கார்ப்பரேட் களியாட்டம் தொடங்கியது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக இருந்த ருசி மோடி 'தி இந்து' ஆங்கில நாளேட்டுக்கு கொடுத்த பேட்டியில், டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் பொது மேலாளர், டாடா குழுமத்தில் முக்கிய அதிகாரியாக இருந்த ஜெ ஜே இராணி ஆகியோர், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர்களின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.

Narasimha Rao

பிரதமர் நரசிம்ம ராவ் மறுத்துவிட்டார்

இச்செய்தி, இந்திய கார்ப்பரேட் தளத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. டாடா குழும நிறுவனங்களை நிர்வகிக்கும் உயர் அதிகாரிகள் டாடா குழுமத்தின் இயக்குநர் குழுவுக்கு கட்டுப்பட வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என ரத்தன் டாடா கூறினார். ஜே ஆர் டி காலத்திலிருந்தே டாடா குழுமத்தில் பெரும் செல்வாக்கோடு வலம் வந்த ருசி மோடி இரண்டையுமே செய்ய விரும்பவில்லை.

மேலும் டாடா குழுமத்தின் இயக்குனர் குழுவிற்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் டாட்டா ஸ்டீல் நிறுவனத்துக்குள் பல உயர் அதிகாரிகளை பந்தாடினார். அது ரத்தன் டாடாவை மேலும் வருத்தமடையச் செய்தது.

ரத்தன் டாடா, சட்ட மேதையான நானி பால்கிவாலாவோடு கலந்தாலோசித்து சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு தயாரானார்.

விஷயம் தன் கையை மீறிச் செல்வதை உணர்ந்த ருசி மோடி, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவைச் சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு பேசினார். டாடா குழும விவகாரத்தில் தலையிட அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மறுத்துவிட்டார்.

Ratan Tata

அதிகாரிகளுக்கு செக் வைத்தார் ரத்தன் டாடா

அதேபோல 1990-களில் மத்திய நிதி அமைச்சராக இருந்து பல பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்த மன்மோகன்சிங்கை சந்தித்து ஆதரவு கோரினார். அவரும் பணிவாக தலையிட மறுத்து விட்டார்.

வேறுவழியின்றி 1992ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி டாடா குழுமத்தின் தலைமையகமான பாம்பே ஹவுஸுக்கு வந்து ரத்தன் டாடாவோடு சமாதானமானார் ருசி மோடி.

கடைசியில் ரத்தன் டாடா, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார் ஜேஜே இராணி மற்றும் ருசி மோடி நிர்வாக இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதையெல்லாம் தாண்டி, 1992ஆம் ஆண்டு நடந்த டாடா குழுமத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், ஓரு புதிய ஓய்வுத் திட்டத்தை அறிவித்து, ஜே ஆர் டி டாடா காலத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த பல டாடா குழும நிறுவன அதிகாரிகளுக்கு செக் வைத்தார் ரத்தன் டாடா.

புதிய ஓய்வுத் திட்ட விதியின்படி எந்த ஒரு நபரும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் டாடா குழுமத்தில் பணியாற்றக்கூடாது. அப்படி ஒருவேளை பணியாற்றிய கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து ருசி மோடி உட்பட பலரும் இத்திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

ரத்தன் டாடாவோ எந்தவொரு விமர்சனத்துக்கும் வழக்கம்போல் பதிலளக்கவில்லை. அமைதியாக தன் பணிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

Three generations in One Pic

ருசி மோடியையே ரத்தன் டாடா தன் வழிக்குக் கொண்டு வந்தார்

ருசி மோடியையே ரத்தன் டாடா தன் வழிக்குக் கொண்டு வந்த பிறகு, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் தர்பாரி சேத், வோல்டாஸ் நிறுவனத்தின் தலைவர் டொபாகோவாலா ஆகியோர் ரத்தன் டாடாவோடு மோதாமல் கொஞ்சம் பின்வாங்கினர். கிட்டத்தட்ட எல்லாத் தலைவர்களும் ரத்தன் டாட்டாவின் தலைமையை ஏற்றுக் கொண்டனர் எனலாம்.

திறமையானவர்களை கண்டுபிடித்து, அவர்களை நிறுவனங்களின் தலைவர்களாக்கி, முழு சுதந்திரத்தோடு நிறுவனத்தை நடத்தவும், செயல்படவும் அனுமதிப்பது தான் ஜே ஆர் டி டாடாவின் ஸ்டைல். இந்த பாணி ரத்தன் டாடாவுக்கு ஒத்து வரவில்லை.

இப்படி ஒரு நபருக்கு நிறுவனத்துக்குள் முழு சுதந்திரம் கொடுப்பது, ஆணவத்திற்கு வழிவகுக்கும் என்று ரத்தன் டாடா கருதியதாக அவரது வாழ்கை வரலாறு தொடர்பான புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சரி, ருசி மோடி போன்ற மாபெரும் ஆளுமைகளையே எதிர்கொண்ட ரத்தன் டாடா எப்படிப்பட்டவர்? குடும்பம் குழந்தை குட்டி யாராவது இருக்கிறார்களா? அவர் தந்தை யார்? அவர் படித்த படிப்பு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?