இஷா அம்பானி
இஷா அம்பானி  Twitter
பிசினஸ்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி : ரிலையன்ஸ் ரீடெயிலின் தலைவராகிறாரா இவர்?

NewsSense Editorial Team

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் கச்சா எண்ணெய், ரசாயணம், இ காமர்ஸ், சில்லறை வணிகம், டெலிகாம் எனப் பல முக்கிய தொழில்களை நடத்தி வருகிறார்.

ஆகாஷ், இஷா, ஆனந்த் என அவருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். சில தினங்களுக்கு முன்பு தான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பொறுப்பை தன் மூத்த மகன் ஆகாஷுக்குக் கொடுத்தார்.

அது தொடர்பான முழு விவரங்களையும் இந்த இணைப்பில் படிக்கலாம்:

ரிலையன்ஸ் ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி : யார் இந்த 90'ஸ் கிட்? - முழுமையான தகவல் (க்ளிக் செய்யவும்)

அதனைத் தொடர்ந்து தற்போது, முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர்ஸ் என்கிற சில்லறை வணிக நிறுவனத்துக்குத் தலைவராக்கப்படலாம் எனப் பல முன்னணி செய்தி நிறுவனங்களின் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். ரிலையன்ஸ் ரீடெயில், ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ரிலையன்ஸ் ஸ்மார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், டிரெண்ட்ஸ் ஃபுட்வேர், ரிலையன்ஸ் ஜுவெல்ஸ் எனப் பல பெயர்களில், பல சில்லறை வணிகத் தொழிலில் வலுவாக வியாபாரம் செய்து வருகிறது ரிலையன்ஸ் குழுமம்.

இஷா அம்பானி , ஆகாஷ் அம்பானி

இப்போதைக்கு ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தில் திட்ட மேம்பாடு & மேலாண்மை, சந்தைப்படுத்தல் போன்ற பணிகளை முன்னின்று வழிநடத்தி வருகிறார்.

ரிலையன்ஸ் ஜியோ சேவையைத் தொடங்குவதில், பிராண்டிங் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பான பணிகளில் இஷா அம்பானி அதிக பங்களித்ததாக மின்ட் பத்திரிகை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2021 நிலவரப்படி ரிலையன்ஸ் ரீடெயிலின் டேர்ன் ஓவர் 1.57 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது.

யார் இவர்?

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகளாகப் பிறந்த இஷா அம்பானி ஒரு இரட்டையர். இவரது இரட்டையர் சகோதரன் ஆகாஷ் அம்பானி.

திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி படித்தார். எங்கே பிள்ளை வியாபாரத்தை விட்டு வெளியே போய்விடுவாரோ எனப் பலரும் பயந்து கொண்டிருந்த போது, யார் கண்பட்டதோ என்னவோ தெரியவில்லை, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

முகேஷ் அம்பானி குடும்பம்

படித்த உடனேயே நேரடியாக அப்பாவின் சாம்ராஜ்ஜியத்தில் வேலைக்குச் சேராமல், மெகென்ஸி என்கிற உலகின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பிசினஸ் அனலிஸ்டாக வேலை பார்த்தார்.


கடந்த 2018ஆம் ஆண்டு, தன் நண்பர் ஆனந்த் பிறமலையே வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்தில் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், பிரபல பாடகி பியான்ஸ் எனப் பங்கெடுக்காத இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்களே இல்லை எனலாம்.

இஷா அம்பானி, முகேஷ் அம்பானி, ஆகாஷ் அம்பானி

இஷா அம்பானி ஒரு பெண்ணியவாதி என செளத் சைனா மார்னிங் போஸ்ட் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் பெண்களுக்கும் அனைத்து தளங்களிலும் போதிய அளவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், அதீத நம்பிக்கை கொண்டவர் மற்றும் அதற்காக தன் குரலை அழுத்தமாகப் பதிவு செய்பவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இஷா தான் 2011ஜியோவுக்கான விதையைப் போட்டது" என முகேஷ் அம்பானி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவையைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சோதனை அடிப்படையில் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு என பிரத்தியேக சேவையைத் தொடங்கிய போது, அதற்கான பணிகளை இஷா மற்றும் ஆகாஷ் என இருவரும் சேர்ந்து மேற்கொண்டனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு லாக்மே ஃபேஷன் வீக்கில், அஜியோ இணையதள சேவையை முன்னின்று தொடங்கியவரும் இஷா அம்பானி தான் என பல்வேறு தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?