15,000 ரூபாய் வரை கடன் வழங்கும் Google pay - எப்படி பெறலாம்? Twitter
பிசினஸ்

15,000 ரூபாய் வரை கடன் வழங்கும் Google pay - எப்படி பெறலாம்?

கூகுள் பே நிறுவனம் சாசெட் லோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலிருந்து பெறப்படும் கடனை 7 நாள் முதல் 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இது குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் அம்சமாகும்.

Priyadharshini R

பேமென்ட் செயலியான Google Pay, சாமானியர்களின் சிறிய அளவிலான கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் தனது டிஜிட்டல் கிரெடிட் சேவைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு கூகுள் பே நிறுவனம் சாசெட் லோன் என பெயர் வைத்துள்ளது. இதன் கீழ் சிறு வணிகர்கள் ரூ.15,000 வரை கடன்பெற முடியும்.

சாசெட் லோன்

சாசெட் லோன் என்பது சிறிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடன்களின் வகையாகும். இதிலிருந்து பெறப்படும் கடனை 7 நாள் முதல் 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இது குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் அம்சமாகும்.

கடன் வழங்கும் துறையில் விரிவடைந்து வரும் ஃபைன்டெக் தாக்கத்தால் கடன் செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர மருத்துவப் பில்கள் அல்லது பிற செலவுகள் என எதிர்பாராத செலவுகளுக்கு பணம் தேவைப்படும்போது இந்த வகை கடன்கள் உதவியாக இருக்கும்.

இதற்காக கூகுள் பே நிறுவனம் ஃபெடரெல் வங்கி, கோடக் வங்கி, மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சோதனை முயற்சியாக தற்போது இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே இந்த கடன் திட்டத்தை கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Payயில் சாச்செட் கடனுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது இங்கே பார்க்கலாம்.

  • முதலில், Google Pay for Business ஆப்பை பதிவிறக்கவும்.

  • இதற்குப் பிறகு லோன் பிரிவில் இருக்கும் ஆஃபர்களை கிளிக் செய்ய வேண்டும்.

  • எவ்வளவு கடன் தொகை வேண்டும் என உள்ளிடுவதன் மூலம் தொடரலாம்.

  • KYC உட்பட சில எளிய படிகளை முடித்த பிறகு நீங்கள் இப்போது கடனைப் பெறலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?