Movies Twitter
சினிமா

Father's Day: அப்பாக்களுடன் பார்க்க வேண்டிய திரைப் படங்கள்

Antony Ajay R

அப்பாக்களுடைய அன்பு மறைமுகமானது. வெளிப்படும் போதும் அலட்டிக்கொள்ளாதது. அசாதாரணமான தியாகங்கள் சாதாரணமாக கடந்து செல்லப்படுவது அப்பாக்கள் விஷயத்தில் தான். ஒவ்வொரு அப்பாவுக்கும் மகனுக்கும்/மகளுக்கும் இடையிலான உறவு ஒரு சினிமாவுக்கான கருவை தன்னுடன் கொண்டிருக்கும்.

அப்பாவின் அன்பை மிக சிறப்பாக படமாக்குவது உலகின் அத்தனை திரைத்துறைக்கும் சவாலானதாக தான் இருக்கும். அதனை மிக சிறப்பாக செய்த படங்கள் மிகக் குறைவு. எனினும் அப்பா - பிள்ளை உறவின் ஆழத்தைக் காட்டிய 10 திரைப்படங்களை இங்கு பட்டியலிடுகிறோம்.

ஹோம் (மலையாளம்)

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி எந்த அளவு அதிகரித்திருக்கிறது என்பதை அப்பட்டமாகக் காட்டியத் திரைப்படம் ஹோம். ஒரு அப்பா தன் வளர்ந்த மகன்களுடன் ஒட்ட முடியாமல் வாழ்வில் திணறுவதையும் தனது அப்பாவித்தனத்தால் ஏற்படும் பிரச்னைகளை சந்திக்க சங்கடப்படுவதையும் காட்டுவதன் மூலமாக சிறிய குடும்பங்கள் தங்களுக்கிடையில் உள்ள சஞ்சலங்களை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றனர். உங்கள் தந்தை வயதானவராக ஆவதற்கு முன் இந்த படத்தைப் பார்த்துவிடுங்கள். அமேசான் பிரைமில் இருக்கிறது.

Father of the Bride

அப்பா - மகள் இடையிலான உறவு எப்படி இவ்வளவு ஆழமானதாக இருக்கிறது என்பது யாரும் புரிந்துகொள்ள முடியாத சூட்சமம். அதனை ஓரளவு பொதுப்பார்வைக்கு கொண்டுவருகிறது நகைச்சுவை திரைப்படமான ஃபாதர் ஆஃப் தி ப்ரைட். நீங்கள் என்றாவது ஒரு நாள் உங்கள் வாழ்க்கை குறித்து விரக்தியாக உணரும் போது இந்த படம் உங்கள் வாழ்வுக் குறித்து மிக நேர்மறையாக உணர வைக்கும்.

தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே (dilwale dulhania le jayenge)

சாருக்கான் மற்றும் கஜோல் நடித்த இந்த திரைப்படம் பாலிவுட்டின் சிறந்த படங்களின் முன்வரிசையில் இடம் பெறும். அப்பாக்களை புரிந்துகொள்வது எப்போதும் கடினமான ஒன்று தான். அதுவும், காதலில் மூழ்கியிருக்கும் இளைஞர்களுக்கு என்றால் சொல்லவா வேண்டும்? சாருக்கானுக்கு ஜாலியான அப்பாவும் கஜோலின் கண்டிப்பான அப்பாவும் என வெவ்வேறு சாயல்களைக் கூறப்பட்டிருக்கும். அமேசான் பிரைமில் இதனைப் பார்க்கலாம்.

ஜெர்சி (Jersy)

மனைவி-கணவன், அப்பா-மகன் என்ற பிணைப்புகளுக்கு இடையே கிரிக்கெட் என்ற விளையாட்டை நிறுத்தி எமொஷனலாக அனைவரையும் கலங்கடித்த படம்தான் ‘ஜெர்சி (Jersey)‘. மகனுக்காக கிரிக்கெட் விளையாடி தன்னை நிரூபிக்கப்போராடும் தந்தையாக கதாநாயகன் நடித்திருப்பார்.

அர்ஜுனும் மகன் நானியும் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்ச்சிகள் மெல்ல மெல்ல பெருக்கெடுக்கின்றன.

திரைப்படம் பார்த்த பலருக்கு இப்படியான காட்சிகளில், ‘தனக்கும்-அப்பாவுக்குமான நினைவுகளையும், நிகழ்வுகளையும், தனக்கும்-மகனுக்குமான நிகழ்வுகளையும், நினைவுகளையும்’ நிச்சயம் நியாபகப்படுத்தி சென்றிருக்கும்.

மகன்-தந்தை உறவுகளுக்கிடையேயான அடர்த்தியை சின்னச்சின்ன காட்சிகளில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குனர். அமேசான் பிரைமில் இப்படத்தைப் பார்க்கலாம்.

குஞ்சன் சக்சேனா (gunjan saxena)

ஜான்விகபூர் நடித்த இந்த திரைப்படத்தில் அவர் கார்கில் போரின் போது முதல் பெண் விமானியாக இருந்த குஞ்சன் சக்சேனாவாக நடித்திருப்பார். பெண்கள் கார் ஓட்டுவதைக் கூட வேண்டாவெறுப்பாக பார்க்கும் சமூகத்தில் விமானியாகும் கனவைக் கொண்டிருப்பார் குஞ்சன். ஆனால் அவர் வெளி உலகைக் குறித்து கவலைப்பட வில்லை. ஏனெனில் அவருடன் அவரது தந்தை இருந்தார்!

இந்த படத்தில் அப்பா - மகள் இடையிலான உரையாடல் காட்சிகள் மிக அழுத்தமானதாக இருக்கும். இதனை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.

Fatherhood

தனது மனைவியின் இழப்புக்கு பிறகு மகளை வளர்த்தெடுக்க போராடும் தந்தையின் கதை தான் இந்த ஃபாதர்ஹுட். அவர் ஒற்றைத் தந்தையாக சமூகத்துடனும், தனது அன்றாடங்களுடனும் போராடுவதை நகைச்சுவையாக இந்தப் படம் கூறினாலும், மிக அழுத்தமாக தந்தையின் மனநிலையைப் பதிவு செய்கிறது.

நமது கடினமான சூழலில் தூணாக இருக்கும் தந்தை அவரது சூழல் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நம்மைக் கைவிடுவதில்லை. இதற்கிடையிலான மன அழுத்தங்களையும் பேசி ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறது ஃபாதர்ஹூட். நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது.

Finding Nemo

நமது குழந்தைப் பருவத்தில் பலமுறை பார்த்து ரசித்துவிட்ட இந்த படத்தை மீண்டும் பார்க்கலாம். அல்லது நம் குழந்தைகளுக்கு காட்டலாம். டிஸ்னியின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக காலத்துக்கும் அழியாதிருக்கும் இந்த திரைப்படம்.

தனது மகன் ஒரு ஸ்கூபா டைவிங் வீரரால் பிடிக்கப்பட, மொத்த கடலையும் கடந்து மீண்டும் அவனை கண்டடையும் தந்தையின் கதை தான் ஃபைன்டிங் நீமூ. அட்வெஞ்சராக ஆழமான அன்பைப் பிரதீபலிக்கும் படம் இது.

Interstellar

சையின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களின் அடிநாதம் அதன் ட்ராமா (நாடகம்) தான். முன்னாள் நாசா வீரரின் டைம் ட்ராவல் சாகசங்களுக்கு மத்தியில் அவர் ஒரு தந்தையாகவும் இருக்கிறார். வாழ்வதற்கு தகுந்த ஒரு கிரகத்தை தேடும் கதைக்கு இடையில் அறிவியல் நுட்பங்கள் , கோட்பாடுகள், காலப்பயணம், சார்பியல்(Relativity), கருங்குழி(Black Hole & Warm hole), அப்பா மகள் பாசம், காதல், தனிமையில் இருக்கும் ஒரு மனிதனின் தவிப்பு போன்றவற்றை நேர்த்தியாக கூறி வெற்றி பெறுகிறது கிரிஸ்டோபர் நோலன்.

King Richard

ஒரு தந்தையின் வாழ்வியல் சவால்களைக் கூறும் படம் Pursuit of happyness இந்த படத்துக்கு சிறிது குறையாத வில் ஸ்மித்தின் திரைப்படம் கிங் ரிச்சர்ட். தனது மகள்களை வரலாற்றில் இடம் பிடிக்கச் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிற தந்தையின் கதை. ஆஸ்கர் வென்றது.

Three Men and Baby

வாழ்க்கையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத மூன்று பேச்சலர் நண்பர்களின் வாசலில் ஒரு குழந்தை வந்த பிறகு அவர்களில் ஏற்படும் மாற்றத்தை விளக்குகிறது இந்த திரைப்படம். உங்கள் தந்தையுடன் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து பார்க்க வேண்டியத் திரைப்படம் இது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உடன் இது 1987 முதல் இன்று வரை சிறந்த படமாக திகழ்கிறது. டிஸ்னி + -ல் கிடைக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?