விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள் Twitter
சினிமா

Bigg Boss மகேஸ்வரி டு டிடி - விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்

சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சில பிரபலங்கள் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

Priyadharshini R

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு இடம் பிடித்துக் கொள்கின்றனர்.

சிலர் தனியாக பிரபலம் ஆகின்றனர், சில ஜோடியாக பிரபலம் ஆகின்றனர். அந்த வகையில் செந்தில்- ஸ்ரீஜா, சஞ்சீவ் - ஆல்யா மானசா போன்ற ஜோடிகள் சீரியலில் நடிக்க வந்தபின் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சில பிரபலங்கள் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

டிடி :

விஜய் டிவியின் தொகுப்பாளினியாக பல வருடங்களாக பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றனர். தற்போது வரை டிடி தனியாக வாழ்ந்து வருகிறார்.

ரம்யா :

பிரபல ஆங்கரான ரம்யா, அப்ராஜித் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் VJ ஆக பணியாற்றி வந்த ரம்யாவுக்கும் அவரது கணவருக்கும் பிரச்னை நிலவியுள்ளது. இதனால் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்

மகேஸ்வரி :

விஜய் டிவியின் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் மகேஸ்வரி. அதன் பின்னர் சில சீரியல்களிலும் மகேஸ்வரி நடித்துள்ளார்.

இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவர் குடும்பத்துாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டார்.

மேக்னா :

விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தவர் மேக்னா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மேக்னா தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஹரிப்பிரியா :

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் என்ற தொடரில் நடித்துள்ளார் ஹரி பிரியா.

இத்தொடரில் நடித்த விக்னேஷ் என்பவரை ஹரி பிரியா காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ள நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?